கோதுமை அல்வா
கோதுமை அல்வா
தேவையான பொருட்கள்
சம்பா கோதுமை – ¼ கிலோ
சர்க்கரை – 600 கிராம்
நெய் – 200 கிராம்
ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 25 கிராம்
ஜாங்கிரி கலர் – விருப்பமான அளவு
செய்முறை
சம்பா கோதுமையை முந்தின நாள் இரவே நீரில் ஊறவைத்து காலையில் சுத்தமாகக் கழுவி, உரலிலோ, கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும். அரைக்க அரைக்க பால்போல் கோதுமைப் பால் வரும். இதை மாவு சல்லடையால் பாலை வடிகட்டி எடுத்தக் கொள்ள வேண்டும். சல்லடையில் தங்கி இருக்கும் விழுதை மறுபடியும் நீர் தெளித்து அரைத்து மறுபடியும் வடிகட்டி பாலை சேகரிக்கவும்.
கடைசியாக கோதுமை திப்பியை அரைத்து நன்றாகப் பிழிந்து பாலெடுத்து சக்கையை அப்புறப்படுத்தவும். சேகரித்த மொத்தப் பாலையும் சுமார் 3 மணி நேரம் அப்படியே வைத்து விடவும்.
பிறகு எடுத்த பார்த்தால் நீர் மேலாகத் தேங்கி அடியில் கெட்டியான கோதுமை பால் இருக்கும். இதைக் கொண்டு இனிப்பான கோதுமை அல்வா தயாரிக்க வேண்டியதுதான்.
கனமான வாணலியில் சிறிதளவு நெய் விட்டு மந்திரிப் பருப்புத் துண்டுகளைப் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதிலேயே கோதுமைப் பாலை ஊற்றி கிளறவும். கிளறும் பொழுதே கலர் சேர்த்து விடவும். நீர் வற்றி இறுகி வரும் சமயம் சர்க்கரையைக் கொட்டிக் கிளறவும். கூடவே ஏலத்தூள் சேர்க்கவும். அடிப் பிடிக்காதபடி கிளறிய படியே இருந்து இடைஇடையே சுற்றிலும் நெய்விடவும்.
முந்திரிப் பருப்புத் துண்டுகள் சேர்க்கவும். அல்வா சுருண்டு வந்ததும் ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாகப் பரப்பி விடவும்.
இளஞ்சூட்டில் அல்வா இருக்கும் போதே கத்தியால் வில்லைகள் போடவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet