Sunday 26th January 2025

தலைப்புச் செய்தி :

சாப்ட்வேர் வேலை கிடைக்குமா? அரசாங்க வேலை கிடைக்குமா? இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, ChennaiAstrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

Click for Previous Part

கேள்வி : வணக்கம் ஐயா, 2014-ல் எனக்கு சனி திசை ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் நான் வீடு வாங்குவேனா?

-அருள்குமார் ராஜாராமன்

பதில்: உங்கள் ஜாதகப்படி லக்கினத்திற்கு சுகாதிபதி சனி திசை நன்மை தரும். சனி, பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பதால், வீடு அமையும் யோகம் உண்டு.

கேள்வி  : நான் தொடர்ந்து பக்தி பிளானட் பார்த்து வருகிறேன். இதில் உள்ள தகவல்கள் அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கிறது. நான் என்னுடைய ஜாதகத்தை இலவச ஜோதிட ஆலோசனை பகுதிக்கு அனுப்பி உள்ளேன். நான் உங்களை நேரில் சந்தித்து ஆலோசனை பெறவும் விரும்புகிறேன். நான் சொந்த தொழில் செய்கிறேன். என்னுடைய நேரம் எப்படி இருக்கிறது?

-ஆர்.ஹரி குமார்

பதில்: உங்கள் ஜாதகத்தில் கும்ப லக்கினத்திற்கு 10-ல் குரு. இந்த குரு பகவான், தன-லாபாதிபதியாக இருப்பதால் சொந்த தொழில் அமையும். எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல் வியபாரம் நன்றாக இருக்கும். கமிஷன் ஏஜென்ஸி வியபாரமும் உங்கள் ஜாதகப்படி நன்மை தரும்.

கேள்வி : ஐயா, வணக்கம். நான் என்னுடைய ஜாதகத்தை அனுப்பி வைத்துள்ளேன். என் ஜாதகம் எப்படி இருக்கிறது. நான் வாழ்வில் உயர்ந்த நிலைக்கு எப்போது வருவேன்? நான் எந்த மாதிரியான தொழில் செய்தால் நன்றாக இருக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்கிறேன். அமையுமா?

-எ.என்.ஸ்ரீராம்

பதில்: சிம்ம இராசி, விருச்சிக லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு 10-ல் கிரகங்கள் இருப்பது யோகமே. முதலில் வேலை வாய்ப்பு அமையும். பிறகு உங்களுக்கு சொந்த தொழில் அமையும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

கேள்வி : மதிப்பிற்குரிய ஐயா, பக்தி பிளானட் பார்த்து வருகிறேன். மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. என்னுடைய ஜாதக விபரம் தந்துள்ளேன். எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? சொந்த தொழிலா அல்லது உத்தியோகம் அமையுமா?

-விமலா

பதில்: தனுசு இராசி, மகர லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு 10-க்குரிய சுக்கிரனை குரு பார்வை செய்வதால் நல்ல உத்தியோகம் அமையும். உங்களுக்கு சந்திர திசை, சூரிய புக்தி 7.2.2014வரை நடைப்பெறுகிறது. இதன் பிறகு நல்ல உத்தியோகம் அமையும். பிற்காலத்தில் சொந்த தொழில் செய்யும் ஜாதகம்.

கேள்வி : ஐயா, என்னுடைய பெயர் அருண். பிறந்த தேதி-நேரம்Bhakthi Planet போன்ற விவரங்கள் தந்துள்ளேன். ஜாப்னாவில் பிறந்தேன். தற்போது சுஸர்லாந்து நாட்டில் வசிக்கிறேன். என்னுடைய ஜாதக பலன் கூற முடியுமா?

-அருண்

பதில்: விருச்சிக இராசி, ரிஷப லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு பாதகாதிபதி குரு 8-ல் இருப்பதும், மூன்றாம் இடத்தில் சூரியன், புதன், செவ்வாய், கேது இணைந்து இருப்பதும் யோகமான ஜாதகம் என்றே சொல்ல்லாம். லக்கினாதிபதியும், தர்மகர்மாதிபதி சனியும் இணைந்து இருப்பதால் யோகத்துடன் வாழ்வீர்கள்.

கேள்வி : உயர்திரு ஐயா, என்னுடைய மகளின் ஜாதகத்தை இணைத்துள்ளேன். தயவு கூர்ந்து என் மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று சொல்லவும். நான் ஒரு விதவை. கஷ்டப்பட்டு அவளை படிக்க வைத்துள்ளேன். உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

-விஜி வரதன்

பதில்: தனுசு இராசி, ரிஷப லக்கினத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் லக்கினத்தில் சூரியன், புதன், களத்திர ஸ்தானத்தில் சனியும் அமைந்து திருமண வாழ்க்கையை தாமதப்படுத்துகிறது. ஸ்ரீரங்கநாதரை வேண்டிக்கொள்ளுங்கள். 2014 ஜனவரியில் திருமண முயற்சிகள் பலன் தந்து 2014 இறுதிக்குள் மணவாழ்க்கை அமைய வாய்ப்புண்டு.

கேள்வி : அன்புள்ள ஐயா, எனது சகோதரியின் பிறந்து தேதி, நேரம் ஆகிய விபரம் தந்துள்ளேன். அவளுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்? எப்போழுது திருமணம் நடக்கும். எந்த துறை சம்பந்தப்பட்ட வேலை அவளுக்கு அமையும்?

-முரளிதரன்

பதில்: உங்கள் சகோதரி விருச்சிக லக்கினம், சிம்ம இராசியில் பிறந்துள்ளார். குடும்பாதிபதியான குரு, இராகுவுடன் சேர்ந்துள்ளதால் திருமணம் அமைய தாமதம் ஆகிறது. நாக வழிபாடு செய்து பரிகாரம் செய்யுங்கள். 2014 மே மாதம் குரு பெயர்ச்சிக்கு பிறகு திருமண வாழ்க்கை கைக்கூடும்.

கேள்வி : அன்புள்ள ஐயா, என்னுடைய ஜாதகத்தை இணைத்துள்ளேன். நான் பிரச்னையில் உள்ளேன். என்னுடைய வாடகைதாரர் இடத்தை காலி செய்ய மறுக்கிறார். வாடகையும் தருவதில்லை. என்னுடைய வேலையிலும் நிறைய பிரச்சினைகள். எல்லா தவறும் என் மீதே சுமத்தப்படுகிறது. என் ஜாதகம் எப்படி உள்ளது?

-வெங்கடேஷ் லஷ்மணன்

பதில்: பிறந்த தேதி விவரமோ ஜாதக கட்டமோ தெளிவாக நீங்கள் அனுப்பவில்லை. இருப்பினும், பூமிகாரகன் செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம். சொத்து வில்லங்களுக்கு நிவர்த்தி தருகிற தெய்வம் முருகப் பெருமான். 18 வாரம் பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யுங்கள். செவ்வாய் பகவானையும் வணங்கி வரவும். 18 வாரத்திற்கு பிறகு உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். பிரச்னை தீரும்.

கேள்வி : வணக்கம் ஐயா, நான் சாப்ட்வேர் துறையில் வேலை தேடி வருகிறேன். எப்போது வேலை கிடைக்கும். எந்த வேலை எனக்கு ஏற்றதாக இருக்கும். (சாப்ட்வேர் வேலையா? அரசாங்க வேலையா?) நான் இரண்டு துறைகளிலும் முயற்சி செய்து வருகிறேன். ஆனால் எனக்கு விருப்பம், சாப்ட்வேர் வேலைதான். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். நன்றி.

-ஆர்.நந்தினி

பதில்: மீன இராசி, சிம்ம லக்கினத்தில் பிறந்த உங்களுக்கு 10-க்குரிய புதன், சூரியனோடு சம்மந்தப்பட்டு இருப்பதால், முயற்சி செய்தால் அரசாங்க வேலை எளிதாக கிடைக்கும். செவ்வாய், சந்திரனுடன் இணைந்து 8-ம் இடத்தில் இருப்பதால், நீங்கள் விரும்பும் சாப்ட்வேர் வேலையும் கிடைக்க வாய்ப்புள்ளது. நல்ல உத்தியோகம் செய்கிற ஜாதகம். லக்கினத்தை 5-ம் அதிபதி குரு பார்வை செய்வதால் வாழ்க்கை வளமாக இருக்கும்.

கேள்வி : ஐயா, வணக்கம். என் மகளுக்கு வரன் பார்த்த வருகிறேன். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. என் மகளின் ஜாதகத்தை கணித்து கூறவும்.

-எம்.அழகேஸ்வரி

பதில்: பிறந்த நேரம் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் பிறந்தது காலையா? மாலையா? என குறிப்பிடவில்லை. இதனால் லக்கினத்தை துல்லியமாக அறிய இயலாது.

கேள்வி : ஐயா வணக்கம், என் ஜாதகப்படி விவசாயம், வேலைக்கு செல்லுதல் அல்லது ஆன்-லைன் டிரேடிங் ஷேர் மார்கெட். இந்த மூன்றில் எது சிறந்தது? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?

-ஆனந்த் குமார்

பதில்: கும்ப இராசி, துலா லக்கினத்தில் பிறந்த உங்கள் ஜாதகத்தை கணித்து பார்த்தபோது, சொந்த தொழில் செய்வதை விட, வேலைக்கு செல்வதே நன்மை தரும் என தெரிகிறது. லக்கினத்தில் குரு இருப்பதால் முதலில் வேலைக்கு செல்லுங்கள். பிற்காலத்தில் தொழில் அமையும். ஜாதகப்படி உத்தியோகமே உயர்வு தரும்.

வாசகர்கள் கவனத்திற்கு:  ஜாதகத்தை கணிப்பதற்கு பிறந்த தேதி விவரங்கள், பிறந்த நேரம், பிறந்த இடம் போன்றவற்றை தெளிவாக அனுப்பவும்.

ஜோதிடம் – ஆன்மிகம் தொடர்பான உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

இது ஒரு இலவச சேவையாகும்.விரிவான பலன்களை அறிய கட்டண சேவையை பார்க்கவும்.

உடனடியாக 3 நாட்களுக்குள் தனிப்பட்டமுறையில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் பெற கட்டண சேவை பார்க்கவும்.

http://www.youtube.com/bhakthiplanet

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2013 bhakthiplanet.com  All Rights Reserved

mm ads

Posted by on Oct 8 2013. Filed under Headlines, Photo Gallery, இலவச ஜோதிட கேள்வி பதில், கதம்பம், செய்திகள், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »