கத்தரிக்காய் – மொச்சை பொரித்தகூட்டு
கத்தரிக்காய் – மொச்சை பொரித்தகூட்டு
செய்முறை
ஒரு கிலோ கத்தரிக்காய்க்கு (சிறியதாக நறுக்கியது ) கால் கிலோ வேக வைத்த மொச்சை பருப்பை சேர்த்து அரை கப் வறுத்த பாசிபருப்பும் போட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும்.
அரைக்க
வறுத்த உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
தேங்காய் துருவல் – முக்கால் கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பாசிபருப்பு கத்தரிக்காயும் வெந்தபின், மேற்கண்டவற்றை அரைத்து கூட்டில் விடவும். நன்றாக கிளறி ஒரு கொதி வந்ததும், அடுப்பை அணைக்கவும். கால் கப் தேங்காய் துருவலை கொஞ்சம் எண்ணையில் சிவக்க வறுத்து அதில் போடவும். கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை இவற்றை தாளித்து கொட்டவும். கூட்டு வடகம் (மங்கோடி) பொறித்து போட்டால் சூப்பர்! செம டேஸ்ட்தான்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet