‘கோச்சடையான்’ படத்தில் புறக்கணிப்பா? டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் ஆவேசம்
கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணித்ததாக வதந்திகளை பரப்புகிறார்கள்Õஎன்று டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் கூறினார்.
சினிமா படவிழா
தூத்துக்குடி, போடிநாயக்கனூர் கணேசன் ஆகிய படங்களில் நடித்த ஹரிகுமார் கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், “சங்கராபுரம்”. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை கமலா தியேட்டரில் காலை நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட டைரக்டர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது:
கோச்சடையான் படத்தில் என்னை புறக்கணிப்பதாகவும், விளம்பரங்களில் என்னுடைய பெயரை சிறிய எழுத்தில் போடுவதாகவும் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்த செய்தி தவறானது. “கோச்சடையான்” படத்தில் என்னை புறக்கணிப்பதாக வந்த செய்தியை கேள்விப்பட்டு, எனக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் என்னிடம் போன் போட்டு விசாரித்தார்.
ரஜினியிடம்…
நான் அப்போது ரஜினிகாந்தை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன். உடனே நான் நண்பரிடம் இந்த செய்தி குறித்து பதில் சொன்னால் நன்றாக இருக்காது என்று கூறி, ரஜினியிடம் போனை கொடுத்தேன். ரஜினியின் குரலை கேட்டவுடன் என் நண்பர் என்ன செய்வதென்று தெரியாமல், மழுப்பி பேசிவிட்டு போனை, கட் செய்து விட்டார்.
கோச்சடையான் படத்தில், என்னை புறக்கணிப்பதாக வெளிவரும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. ஒரு படத்தில் வேலை செய்ததற்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டுமோ, அந்த மரியாதையெல்லாம் எனக்கு கொடுத்தார்கள். படம், டப்பிங் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது.
இவ்வாறு கே.எஸ்.ரவிகுமார் பேசினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet