சூர்யாவுக்கு எழுதிய கவுதம் கதையில் சிம்பு நடிக்கிறார்
சூர்யாவுக்காக கவுதம் மேனன் எழுதிய கதையில் சிம்பு நடிக்கிறார்.
‘சிங்கம்–2’ படத்துக்கு பிறகு கவுதம்மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் கவுதம் தயார் செய்த கதை தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும், எனவே அவர் படத்தில் இருந்து விலகுகிறேன் என்றும் சூர்யா பரபரப்பு அறிக்கை வெளியிட்டார்.
கவுதம்மேனனிடம் இருந்து வாங்கிய ரூ.5 கோடி அட்வான்ஸ் தொகையையும் திருப்பி கொடுத்துவிட்டார். தற்போது லிங்குசாமி இயக்கத்தில் அவர் நடிக்கிறார். இதையடுத்து சூர்யாவுக்கு தயார் செய்த கதையில் சிம்பு நடிக்க முன்வந்துள்ளார்.
சிம்புவுக்காக கதையில் கவுதம்மேனன் சிறிய மாற்றம் செய்கிறாராம். இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க சம்மதித்து உள்ளார். ஏற்கனவே கவுதம்மேனன் இயக்கிய விண்ணத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு நடித்து இருந்தார். அப்படம் வெற்றிகரமாக ஓடியது. மீண்டும் இருவரும் இணைகிறார்கள்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet