நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்க திட்டமா?
தான் அரசியலில் ஈடுபடப் போவதாக செய்தி வெளியானதை அடுத்து அவசர, அவசரமாக மறுப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் நடித்த “தலைவா” படம் வெளியிடுவதில் பல்வேறு அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டது. அந்த படத்தை வெளியிட்டால், திரையரங்களுக்கு வெடிகுண்டு வைத்து விடுவதாக மிரட்டல்கள் வந்ததால், பெரும் சிரமத்திற்கு பின்னர் படம் வெளியிடப்பட்டது.
இதற்கிடையே நடிகர் விஜய் புதிய கட்சியை தொடங்க திட்டமிட்டு வருவதாகவும், இது தொடர்பாக நெருக்கமான சிலருடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தனியார் பத்திரிக்கையில் செய்தி வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், கேரளாவில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து, தான் அரசியல் சம்பந்தமாக ஆலோசனையில் ஈடுபட்டதாக பத்திரிக்கையில் செய்தி வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்தார்.
கடந்த 2 மாதங்களாக “ஜில்லா” படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருவதால், கேரளாவுக்கு செல்லவில்லையென விஜய் கூறினார். மேலும் இது போன்ற உண்மையில்லாத செய்தியை பத்திரிக்கைகள் வெளியட வேண்டாம் எனவும் விஜய் வலியுறுத்தினார்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet