என்னை தவிர எந்த இசையமைப்பாளராலும் முடியாது – இளையராஜா பேட்டி
லண்டனில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. ஐங்கரன் ஒன்றிணைக்கும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி குறித்து முறைப்படி இளையராஜா அறிவித்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நிகழ்ச்சி குறித்தும், தனது திறமை குறித்தும் சிறப்பு பேட்டியளித்தார்.
நான் முதல்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தறேன். லண்டன் ஓ2 அரங்கில் இந்த மாதம் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு என்னுடைய இசைக்கச்சேரி நடக்கிறது. அன்று அந்த அரங்கம் இசை மழையால் நனைய இருக்கிறது.
நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். அவரைத் தவிர எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கார்த்திக், மது பாலகிருஷ்ணன், கார்த்திக் ராஜா, பவதாரணி, சைலஜா, சாதனா சர்கம் உள்பட 19 பாடகர்கள் கலந்து கொண்டு பாடுகிறார்கள். 75 இசைக்கலைஞர்கள் பங்கு பெறுகிறhர்கள்.
இந்த எனது இசை நிகழ்ச்சி 5 மணி நேரங்கள் நடைபெற இருக்கிறது. லண்டன் தமிழர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய நிகழ்ச்சியாக இது இருக்கும் என்று நம்புகிறேன். கடந்த ஒருவாரமாக நிகழ்ச்சிக்கான ஒத்திகை பிரசாத் ஸ்டுடியோவில் நடந்து கொண்டிருக்கிறது. நான் அரை மணி நேரத்தில் இசையமைத்த பாடல்களுக்கு ஒரு வாரமாக ஒத்திகை நடப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
இப்போது இசைக்குள் கம்ப்யூட்டர் வந்து விட்டது. கம்ப்யூட்டரை கொண்டு புத்திசாலித்தனமாக இசையமைத்தால் அது புத்துக்குதான் செல்லும். மனதை கொண்டு இசையமைத்தால்தான் அது அடுத்தவர் மனதை சென்றடையும். நான் மனதிலிருந்து இசையமைக்கிறேன். நான் எந்தப் படத்துக்கும் இசையமைக்க 3 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டதில்லை. இன்றைக்கு கம்ப்யூட்டரே எல்லா வேலைகளையும் பார்த்துவிடுவதால் இசையமைப்பாளர்கள் சோம்பேறிகளாகிவிட்டனர்.
நான் இசையமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும், ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பதாக காட்சி வைத்திருப்பார்கள். பத்து நிமிடங்கள் வரும். தெருவில் நடப்பது, டால்பின் ஷோ பார்ப்பது என்று அது வரும். அந்த பத்து நிமிட காட்சிக்கு பத்து நிமிடம் தொடர்ந்து இசையமைக்க வேண்டும். அதேநேரம் ஒவ்வொரு ஷாட்டுக்கும் தனித்தனியாகவும் இருக்க வேண்டும். அதற்கு நான் ஒரு மணி நேரத்தில் இசையமைத்தேன். இப்போது உள்ள இசையமைப்பாளர்களிடம், ஏன்… உலகில் உள்ள எந்த இசையமைப்பாளாரிடமும் இந்தக் காட்சியை கொடுத்துப் பாருங்கள். இசையமைக்க குறைந்தது ஒரு மாதம், இரண்டு மாதம் எடுத்துக் கொள்வார்கள். எனக்கு 3 நாட்கள்தான் ஒரு படத்துக்கு இசையமைக்க. 750 படங்களுக்கு அப்படிதான் இசையமைத்தேன்.
அன்று அரை மணி நேரத்தில் நோட்ஸ் எழுதி இரண்டு மணி நேரத்தில் ரிக்கார்ட் செய்த பாடலை இன்று ரீ கிரியேட் செய்ய இரண்டு நாட்கள் எடுத்துக் கொள்கிறார்கள். இன்றைக்கு உள்ளவர்கள் எப்படி உங்களால் அன்று முடிந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்கள். அதுவாக வந்தது. இறைவன் தந்தது.. நான் உங்களுக்கு தந்தேன். வேறென்ன சொல்ல.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet