ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதம் பிடிக்கும் நடிகை
தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த “மகதீரா” படம் சூப்பர் ஹிட்டானதால் ஒரே நாளில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். இதனால் ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதமாக இருந்தார். “பீல்டுக்கு வந்தபோது லட்சங்களுக்கே தள்ளாடியவர், ஒருகோடி கேட்கிறாரே” என்று ஆந்திர தயாரிப்பாளர்கள் முணுமுணுத்தார்கள். அதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி, “இன்னும் ஐந்து வருடம் கழிந்தால் என்னையும் தேடும் நடிகைகளின் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். இப்போது கேட்காமல் எப்போது கேட்பதாம்” என்றார். ஒரு கோடி கேட்டவரிடம். கொஞ்சம் குறைக்கக்கூடாதா? என்று கெஞ்சிய தயாரிப்பாளர்களிடம் கறாராகவே இருக்க, அவரைத் தேடி இரண்டு தெலுங்குப் பட வாய்ப்புகள் நழுவிப்போனதாம். ஒன்று கல்யாண் ஜோடியாக நடிக்கவேண்டிய படம், மற்றொன்று பாலகிருஷ்ணா ஜோடியாக நடிக்கும் படம்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet