ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட கார் 865, 000 டாலருக்கு ஏலம் போனது
ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஜேம்ஸ்பாண்டின் ஆக்ஷன் நடிப்பைக்கூட ரசிகர்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் அந்தப் படங்களில் பயன்படுத்தப்பட்ட நீர் மூழ்கி காரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். இந்த நீர்மூழ்கி கார் கடந்த 1973லிருந்து 1985ஆம் ஆண்டு வரையில் துப்பறியும் நிபணர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த பல திரைப்படங்கள் நடித்து மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது.
1977இல் வெளிவந்த “தி ஸ்பை ஹூ லவ்டு மீ” ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த கார் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தற்போதும் இயங்கும் நிலைமையில் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வந்நது. இந்த காரை ஏலத்துக்குக் கொண்டு வந்ததார்கள். காரின் ஏல மதிப்பு 650, 000 பவுண்டுகள் என்று ஏல நிறுவனத்தால் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் 865, 000 டாலருக்கு (இந்திய ரூபாயில் 5.47 கோடி) ஏலம் போனது.
சாலையில் மணிக்கு 120 கிமீ வேகத்திலும், தண்ணீரில் மிதந்து செல்லும்போது மணிக்கு 6 கிமீ வேகத்திலும் தண்ணீருக்கு அடியில் மூழ்கிச் செல்லும் போது மணிக்கு 3 கிமீ வேகத்திலும் இந்த கார் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet