காரக்கோழிக்கறி வறுவல்
காரக்கோழிக்கறி வறுவல்
தேவையான பொருட்கள்
கோழிக்கறி – 500 கிராம்
சிகப்பு மிளகாய் – 10 கிராம்
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
நல்லெண்ணெய் 50 கிராம்
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – ½ ஸ்பூன்
கறிவேப்பில்லை – சிறிது
செய்முறை
கோழிக்கறியைக் கழுவி துண்டுகளாக்கிக் கொள்ளவும். குக்கரில் கோழிக்கறி உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் வேக வைக்கவும். பிறகு சிகப்பு மிளகாய்களைத் துண்டுகளாக எடுத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் 50 கிராம் ஊற்றி, காய்ந்ததும், அரை தேக்கரண்டி கடுகு, அரை தேக்கரண்டி உளுந்தம் பருப்பு, கறிவேப்பில்லை போட்டுத் தாளித்து, இத்துடன் ஒடித்து வைத்துள்ள சிகப்பு மிளகாய்களை சேர்த்து வதக்கவும். பின் வேகவைத்த கறித்துண்டுகளைப் போட்டு வதக்கவும். சில நிமிடங்கள் வதக்கிய பின் 1/2 டம்ளர் தண்ணீர், தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். கொதித்த பின் தீயைக் குறைத்து கறி நன்றாக வதங்கிய பின் இறக்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet