செட்டிநாடு கோழிக் குழம்பு
செட்டிநாடு கோழிக் குழம்பு
தேவையான பொருட்கள்
சிக்கன் – ½ கிலோ
கறிவேப்பிலை – தேவையான அளவு
பச்சைமிளகாய் – 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
தேங்காய் – ½ மூடி
பூண்டு – 8 பல்
இஞ்சி – 50 கிராம்
சீரகம் – 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 1
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 200 கிராம்
பொடியாக நறுக்கிய தக்காளி – 200 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 குழிக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
தனியாத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன்
செய்முறை
சுத்தம் செய்த சிக்கனை சிறு துண்டுகளாக்கி, கத்தியால் அங்குமிங்குமாகக் கீறி, அதன் மேல் மிளகாய்தூள், மஞ்சள்தூன், தனியாத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, ½ எலுமிச்சம் பழம் பிழிந்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
தேங்காய், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, ½ டீஸ்பூன் சோம்பு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலையைச் சேர்த்து தண்ணீர் விடாமல் மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
பாத்திரம் சூடானதும், எண்ணெய் விட்டு சூடானதும் பிரிஞ்சி இலை, ½ டீஸ்பூன் சோம்பு பொரித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, மைப்போல் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது பச்சை வாசனைப் போக வதக்கி, பொடியாக நறுக்கியத் தக்காளியைச் சேர்த்து நன்கு கலந்து வதங்கவிடவும்.
கலந்து வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து தண்ணீர் விடாமல் வேகவிடவும்.
முக்கால் பாகம் வெந்த சிக்கனுடன், அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கலந்து தண்ணீர் தெளித்து தொடர்ந்து வேக விடவும்.
இதன்மேல் கறிவேப்பிலை, காரத்திற்கு ஏற்றாற்போல் பச்சைமிளகாய், தேவையான அளவு உப்புச் சேர்த்து தொடர்ந்து வேக விடவும்.
கொத்தமல்லித்தழை தூவியோ (அ) பொன்னிறமாக வறுத்து வைத்துள்ள வெங்காயத்தைத் தூவியோ பரிமாறலாம்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet