கேரட் அல்வா
கேரட் அல்வா
தேவையான பொருட்கள்
கேரட் – ½ கிலோ
சர்க்கரை – 300 கிராம்
நெய் – 50 கிராம்
முந்திரிப் பருப்பு – 20 கிராம்
சாரைப் பருப்பு – 20 கிராம்
வெள்ளரி விதை – 20 விராம்
பால் – ¼ லிட்டர்
ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன்
உலர்ந்த திராட்சை – 20 கிராம்
செய்முறை
முதலில் கேரட்டை நன்கு சுத்தமாகக் கழுவி துருவலில் துருவிக் கொள்ள வேண்டும்.
அடிகனமான வாணிலியில் சிறிதளவு நெய்விட்டு முந்திரிப்பருப்பு, திராட்சையை வறுத்தெடுக்கவும். அதிலேயே காரட், துருவலைப் போட்டு பத்து நிமிட நேரம் வதக்கி, பால் விட்டு வேக வைக்கவும்.
கேரட்டில் நீர்ப்பசை வற்றுமளவிற்கு, அதன் பச்சை வாசனைப் போகும் வரை வெந்ததும், சர்க்கரையைக் கொட்டி கிளறவும். கூடவே கொஞ்சம் கொஞ்சமாக நெய் விட்டுக் கிளறவும்.
பக்கங்களில் ஒட்டாமல் கேரட் அல்வா சுருண்டு வந்ததும், ஏலக்காய்ப் பொடி சேர்த்து ஒரு கிளறு கிளறி, நெய் தடவிய தட்டில் கொட்டவும். மேலாக வறுத்த முந்திரிப் பருப்புத் துண்டுகள், திராட்சை, சாரைப் பருப்பு, வெள்ளரி விதை இவைகளைத் தூவி அலங்கரிக்கவும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet