உயர் ரத்த அழுத்தம் என்பது எது?-கட்டுப்படுத்த என்ன வழி?
இதயம் நம் உடலில் இருக்கும் ரத்தத்தை பம்ப்செய்துதான் மற்ற உடல் உறுப்புகளுக்கு அனுப்புகிறது. அப்போது இதயம் சுருங்கி விரிவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம். இதயம் தசைகள் சுருங்கும்போது அழுத்தம் கூடுதலாக இருக்கும். அதுதான் 120 சிஸ்டோலிக் அளவு. இதயம் விரியும் போது அழுத்தம் குறைவாக இருக்கும். அதுதான் 80 டையாஸ்டோலிக் அளவு. அதாவது ஒரு மனிதனுக்கு 120/80 என்ற மில்லிமீட்டர் பாதரச அளவு இருந்தால் அவர் நார்மல்.
உயர் ரத்த அழுத்தம் என்பது எது?
120/80 என்ற நிலையைத் தாண்டி 139/89 வரை கூட போகலாம். அதை உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதங்கு முந்தைய நிலை என்பர். இந்த எல்லையையும் தாண்டி, அதாவது 140/90 தாண்டிவிட்டால் அதுதான் உயர் ரத்த அழுத்தம் (High BP) இதனை உடனே கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாக வேண்டும். இல்லாவிட்டால், ஹார்ட் அட்டாக், சர்க்கரை நோய், கண் மூளை பாதிப்பு என்று சகல நோய்க்கும் வழிவகுத்து விடும்.
பி.பி.யைக் கட்டுப்படுத்த என்ன வழி?
உப்பு தான் பி.பி.யின் முதல் எதிரி. உப்பு அதிகம் உள்ள எந்தப்பொருளையும் தொடக்கூடாது.
இடுப்பின் சுற்றளவை அடிக்கடி அளவிட வேண்டும். அளவுக்கு அதிகமான எடையை, சதையை இடுப்பில் வைத்திருந்தால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சுருக்கமாக தொப்பை போடாதவாறு பார்த்தக் கொள்ளுங்கள்.
தொப்பை மட்டுமல்ல, உடல் எடை கூடினாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பி.பி. உள்ளவர்கள் 50 சதவீதம் பேர் அளவுக்கு மீறி உடல்எடை உள்ளவர்கள். அதனால் உடல் எடையில் கவனம் வேண்டும்.
கவலை, பதற்றம், பயம், மன அழுத்தம், மனஇறுக்கம் இருந்தால் கண்டிப்பாக பி.பி. எகிறும். யோகா, தியானம், மூச்சை உள்வாங்கி வெளியிடுவதல் போன்ற பயிற்சியின் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கப் பார்க்க வேண்டும்.
மது அருந்துவது, புகைப்பிடிப்பதாலும் ரத்த அழுத்தம் உயரும்.
பி.பி. இருந்து காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றுபவர்கள், காபி சாப்பிடுவதற்கு முன்பும், காபி சாப்பிட்ட பின்பும் பி.பி.யை செக் பண்ணுங்கள். 5-10 மி.லி Hg அதிகரித்தால் காபியை தவிர்த்து விட வேண்டும். மற்றவர்கள் காபி சாப்பிடலாம்.
குளிர் பானங்கள் மட்டுமல்ல, டின்னில் அடைத்து விற்கும் உணவுப் பொருட்கள், ஃபாஸ்ட் ஃபுட் வகைகள் ஆகியவற்றில் ருசிக்காக அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் கொழுப்புப் பொருட்களும் ஒரு வகையான வினோதமான உப்பினாலும்தான் 60 சதவீதம் மக்களும் பி.பி.யே எகிறுகிறது. கொழுப்புச் சத்து அதிகம் இல்லாத உணவுகளும் நார்சத்து அதிகம் உள்ள காய்கறி, பழங்களும் தான் பி.பி.யை கட்டுப்படுத்தும். பூண்டு நல்லது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet