சரஸ்வதி பூஜை ஸ்பெஷல் நைவேத்தியம் – அவல் பாயசம்
அவல் பாயசம்
தேவையான பொருட்கள்
அவல் – 50 கிராம்
பால் – ½ லிட்டர்
சர்க்கரை – ¾ ஆழாக்கு
ஏலக்காய் – 4
முந்திரிபருப்பு – 6
நெய் – 2 டீஸ்பூன்
திராட்சை – 2 டீஸ்பூன்
செய்முறை
அவல் நன்கு வறுத்துவிட்டு தண்ணீரில் வேக விடவும், தண்ணீரை உறிஞ்சிவிட்டால் மீண்டும் தண்ணீர் சேர்த்து தளதள என்று சமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்தச் சமயத்தில் பாலைச் சேர்த்து நன்கு கொதி வந்தவுடன், சர்க்கரையைச் சேர்த்து ஏலக்காயை தட்டிப் போடவும். வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்க சுவையாக இருக்கும்.
பாயாசம் கெட்டியாக இல்லாமல், தண்ணீர் பதத்தில் பதம் இருக்க வேண்டும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet