தீபாவளிக்கு முன்பே அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் ரிலீஸ்?
அஜீத்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, விஷாலின் ‘பாண்டியநாடு’ ஆகிய மூன்று படங்களும் தீபாவளிக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மூன்றும் பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பகிர்ந்து கொள்வதில் இழுபறி ஏற்பட்டது. அத்துடன் ‘ஆரம்பம்’ படத்துக்கு எதிராக கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விவகாரத்தில் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் விரைவில் சுமூக தீர்வு ஏற்படும் என்றும் ‘ஆரம்பம்’ படவட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ‘ஆரம்பம்’ படத்தை தீபாவளிக்கு இரு தினங்களுக்கு முன்பாக அக்டோபர் 31–ந்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் அஜீத் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஆர்யா, டாப்சியும் இன்னொரு ஜோடியாக வருகிறார்கள். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.
‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படம் தமிழ்நாடு முழுவதும் 300 தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதில் கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர்.
‘பாண்டியநாடு’ படத்தில் விஷால், லட்சுமிமேனன் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்தை விஷாலே முதல் தடவையாக தயாரித்து உள்ளதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. சுசீந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இவைகள் தவிர ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ‘கிரிஷ்3’ படமும் தமிழ், இந்தியில் தீபாவளிக்கு ரிலீசாகிறது. தமிழ்நாடு முழுவதும் 100 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்படுகிறது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet