பவானி அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து : ஆசிட் கொட்டியதால் மக்களுக்கு பாதிப்பு
பவானி; பவானி அருகே மரத்தில் மோதி டேங்கர் லாரி கவிழ்ந்தது. ஆசிட் கொட்டியதால் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண்எரிச்சல், மூச்சு திணறல் ஏற்பட்டது.மேட்டூரில் இருந்து சாயப்பட்டறைகளுக்கு பிளிச்சிங் செய்ய பயன்படுத்தப்படும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட் ஏற்றிக்கொண்டு ராட்சத டேங்கர் லாரி ஒன்று ஈரோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை 6 மணிக்கு பவானி அடுத்த சித்தார் அருகே வரும்போது சாலையோரம் இருந்த ஆலமரத்தில் மோதி கவிழ்ந்தது. விபத்து ஏற்பட்டதும் டிரைவர் தப்பிஓடி விட்டார். கிளீனர் லாரியில் சிக்கி கொண்டார். அவரை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
லாரியின் மேல் மூடி திறந்து ஆசிட் கொட்டியது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டு, பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சுதிணறல் ஏற்பட்டது. தகவல் அறிந்த பவானி தீயணைப்பு நிலைய அதிகாரிகள், வீரர்களுடன் விரைந்து வந்து ஆசிட்டில் தண்ணீரை பீய்ச்சி அடித்து அதன் வீரியத்தை குறைத்தனர். பின்னர் கவிழ்ந்த டேங்கர் லாரி மீட்கப்பட்டது.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet