வெஜிடபிள் பிரியாணி
வெஜிடபிள் பிரியாணி
தேவையான பொருட்கள்
பிரியாணி அரிசி – 1/2 கிலோ
தக்காளிப் பழம் – 250 கிராம்
காரட் – 150 கிராம்
காலிஃபிளவர் – 100 கிராம்
டர்னிப் – 50 கிராம்
பட்டாணி – 100 கிராம்
நூல்கோல் – 50 கிராம்
கொத்தமல்லி – சின்னக் கட்டு
புதினா – சின்னக் கட்டு
தோங்காய் –1/2 மூடி
வெள்ளைப் பூண்டு – 3
இஞ்சி – 1 துண்டு
நெய் – 200மிலி
பட்டை – 2 துண்டு
கிராம்பு – நான்கைந்து
ஏலாக்காய் – ஏழெட்டு
வெங்காயம் – 3
பச்சை மிளகாய் – 8
உப்பு – ருசிக்கு ஏற்ப
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
ரொட்டித் துண்டு – 10
எலுமிச்சம் பழம் – பாதியளவு
செய்முறை
முதலில் பிரியாணி அரிசியைக் கல், நெல் நீக்கிச் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் களைந்து பின்னர் அரிசியைத் தண்ணீர் இல்லாமல் இறுத்துவைத்துக் கொள்ளவும். பின்னர் காய்கறிகளைச் சின்ன சின்னத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதன் பின்னர் கொத்துமல்லித் தழை புதினாவை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயை எடுத்து உடைத்துப் பூவாகத் துருவி அதிலிருந்து பாலைப் பிழிந்து தனியே எடுத்துவைத்துக் கொள்ளவும். இஞ்சி, வெள்ளைப் பூண்டை அம்மியில் வைத்து விழுதுப் பதத்துக்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இதன் பின்னர் பட்டையைச் சின்ன சின்னதாக உடைத்துக் கொள்ளவும். கிராம்பையும் ஒன்றிரண்டாக உடைத்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயைத் தோலுடன் தட்டி வைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தைப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியை எடுத்துச் சிறிதளவு நெய்யை ஊற்றி ரொட்டித்துண்டுகளை அதில் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
ஒருபெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதிலே நெய்யை ஊற்றி, அடுப்பின் மீது ஏற்றவும். நெய் நன்றாகக் காய்ந்தவுடன் பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய பின்னர் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் நறுக்கிப் போட்டு வதக்கவும். இவை நன்கு சிவந்து வந்தவுடன் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு மேலும் வதக்கவும். இவை வதங்கியவுடன் வெட்டி வைத்திருக்கும் காய்கறிகள் அத்தளையும் போட்டு விட வேண்டும். இவற்றையும் அதனுடன் நன்றாக வதக்கிக் கொள்ளவும். இப்போது ஏற்கனவே தயாராக எடுத்து வைத்திருக்கக் கூடிய தேங்காயப் பாலை எடுத்து அப்பாத்திரத்தில் ஊற்றி விடவும். தேங்காயிலிருந்து பிழியப்பட்ட பாலானது 2 டம்ளர் குறைவில்லாமல் இருக்க வேண்டும். இந்தத் தேங்காய்ப் பால் கலவை நன்றாகக் கொதித்தவுடன் ஏற்கனவே நறுக்கி வைத்திருக்கும் கீழ்வரும் பொருட்களையும் போட்டுவிட வேண்டும்.
புதினா, கொத்துமல்லித் தழை இதன் பின்னர் கழுவிக் களைந்து நீரில்லாமல் இறுத்து வைத்திருக்கக் கூடிய அரிசியை எடுத்து அதில் போடவும். கூடவே நம்முடைய ருசிக்குத் தேவையான அளவு உப்பையும் மஞ்சள் பொடியையும் போட்டுவிட வேண்டும்.
அத்துடன் அரிசி வேகத்தக்க அளவு திட்டமான தண்ணீரையும் ஊற்றிவிட வேண்டும். பாத்திரத்தின் வாயை மூடி வைத்துவிட வேண்டும். சாதம் வெந்து பக்குவமான நிலையில் வரும் போது ஏற்கனவே நெய்யில் வதக்கி வைத்திருக்கின்ற ரொட்டித் துண்டுகளை எடுத்து அதில் கொட்டி ஒரு கரண்டியினால் இதனை நன்றாகத் திருப்பிக் கிளறி விடவும். இந்தச் சமயத்தில் எடுத்து வைத்திக்கக் கூடிய எருமிச்சம் பழமூடியை எடுத்துச் சோற்றிலே பிழிந்து, மீண்டும் இதனைக் கிளறி இறக்கி விடவேண்டும். நெய்யை உபயோகிப்பவர்கள் நெய்யினை உபயோகித்து வெஜிடபிள் பிரியாணியைச் செய்யலாம். இல்லாவிட்டால் டால்டாவிலும் செய்யலாம்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com