ரவா இட்லி
ரவா இட்லி
தேவையானவை
ரவை – 200 கிராம்
தயிர் – 400 கிராம்
உளுத்தம் பருப்பு – 20 கிராம்
கடுகு – 10 கிராம்
பச்சைமிளகாய் – 4
எண்ணெய் – 50 மி.லி
முந்திரிபருப்பு – 20 கிராம்
சிறிது கறிவேப்பிலை
செய்முறை
அடுப்பைப் பற்றவைத்து, வாணலி வையுங்கள். எண்ணெய் விடுங்கள். எண்ணெய் காய்ந்திருக்கும். கையில் வைத்திருக்கும் கடுகு, உளுத்தம் பருப்பு, முந்திரி, கறிவேப்பிலை, பச்சைமிளகாய் போன்றவற்றை போட்டு வதக்குங்கள். தங்க நிறத்தில் வரும் வரை வதக்குங்கள்.
வதக்கியதோடு, எடுத்து வைத்திருக்கும் ரவையையும் போட்டு மேலும் வதக்குங்கள். வாணலியை அடுப்பிலிருந்து இறக்கி சற்று நேரம் வையுங்கள் ஆறட்டும்.
தயிரை எடுத்து வதக்கியவை மீது ஊற்றுங்கள். குறைந்தது பதினைந்து நிமிடமாவது ஊறுவது நல்லது. இப்பொழுது மாவுப்பதத்தில் இருக்கும் அந்த கலவையை இட்லி தட்டின் குழிகளில் ஊற்றி வேகவையுங்கள்.
குறிப்பு – ஒரு ஆழாக்கு ரவைக்கு 2 ஆழாக்கு தயிர் விடவேண்டும்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com