சென்னா மாசாலா
சென்னா மாசாலா
தேவையான பொருட்கள்
வெள்ளை சென்னா – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 2 பல்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
தனியா தூள் – ஒரு டீஸ்பூன்
பட்டை – ஒன்று
லவங்கம் – ஒன்று
ஏலக்காய் – ஒன்று
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
சென்னாவை ஊற வைக்கவும், பிறகு அதனுடன் உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவிடவும். வெங்காயம், தக்காளியை சற்று பெரியதாக கட் செய்யவும். ப்ரஷர்பேனில் பட்டை, லவங்கம் தாளித்து இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். இதனுடன் தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிட்டு எல்லாவற்றையும் நைசாக அரைக்கவும். இப்போது வெந்த சென்னாவுடன் அரைத்த விழுதைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். இறக்கும் சமயம் ஒரு டீஸ்பூன் வெல்லத்தை சேர்க்கவும்.
பூரி, சப்பாத்திக்கு சரியான சைட்டிஷ். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com