கிணறு – போர்வெல் அமைக்க ஏற்ற பகுதி எது ?
Vijay Krishnarau G
சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் | Click for Previous Page
ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மிக அவசிய தேவை தண்ணீர். நமக்கு விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டாலும் ஒரு டம்ளர் தண்ணீராவது உடன் இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல ஒரு வீட்டில் ஆயிரமாயிரம் வசதிகள் இருந்தாலும், வெளிநாட்டு பொருட்கள் கொட்டி கிடந்தாலும், ஒரு குடம் தண்ணீருக்கு காரில் ஊரையேல்லாம் சுற்றி திரியும் பணக்காரர்களையும் பார்த்திருக்கிறாம்.
ஒரு நாட்டின் வளத்தை கூட தண்ணீரை கொண்டே அறியப்படுகிறது.
ஊருக்கு முக்கியமானது ஆறு, ஏரி அல்லது குளம்.
அதனால்தான்-கோயில் கட்டும்போதே குளத்தையும் வெட்டினார்கள்.
இப்படி இறைவனுக்கு நிகராக போற்றப்படுகிறது தண்ணீர். பொதுவாக ஒரு பூமியில் அல்லது ஒர் மனையில் எங்கு தோண்டினாலும் தண்ணீர் கிடைப்பதுண்டு. ஆயினும் போர்வெல் அல்லது கிணற்றிலிருந்து வெளிப்படுகிற தண்ணீரானது கட்டட சாஸ்திர விதிமுறையின்படி அமைப்பதே நல்லது வாழ்வின் வளர்ச்சிக்கு பாதுகாப்பானது என்பதை வாஸ்துகலை நமக்கு சொல்கிறது.
ஒரு வீட்டின் உள்அமைப்புகளுக்கு எந்த அளவுக்கு கட்டட சாஸ்திரப்படி முக்கியத்துவம் தருகிறோமோ அதனை விட அந்த வீட்டின் வெளிபுற அமைப்புகளும் கூட முக்கியமானதே.
அந்த வகையில் –
வீட்டின் தண்ணீர் தேவைக்கு பெரும் உதவியாக இருக்கக்கூடிய கிணற்றின் அமைப்பு சரியான பகுதியில் சரியான மூலையில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த கிணற்றின் அமைப்பே நம் வாழ்வின் வீழ்ச்சிக்கு காரணமாகவும் அமைந்துவிடும்.
தன்னம்பிக்கையை தளர செய்வது, நல்ல நடத்தையை தீய வழிகளில் திசை திருப்புவது, தற்கொலைக்கு தூண்டுவது போன்ற விரும்பத்தகாத செயல்களுக்கு அந்த வீட்டில் கட்ட்ட சாஸ்திர விதிக்கு மாறாக அமைந்த கிணறு அல்லது போர்வெல் காரணமாக இருக்கிறது.
அதுபோல, தடங்கலற்ற பொருளாதர நிலை, பெயர் – புகழ், உத்தியோக உயர்வு, தொழில் முன்னேற்றம், சீரான உடல்நலம், அதிகப்படுத்தாத கடன்கள், நல்ல நண்பர்கள் இப்படி ஏற்றமிகு பலன்களை நல்ல பகுதியில் அமைந்த கிணற்றின் அமைப்பால் நமக்கு கிடைக்கிறது.
நல்ல பகுதியில் கிணறு அமைப்பு என்றால் அது எது? என்கிற கேள்விக்கு விடைகான நீங்கள் ஒரு வாஸ்து நிபுணரை அணுகவேண்டும் என்கிற அவசியமில்லை. கிராமத்தில் இருப்பவன் கூட சொல்வான் அது வடகிழக்கு மூலை என்று.
ஆனாலும் கூட சில விஷயங்களை பார்க்க வேண்டும். அதை பிறகு சொல்கிறேன். அதற்கு முன், கிணற்றுக்கு தோஷமான பகுதிகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்.
தீராத உடல் நல சீர்கேடு, கனவில் கூட கடன்கொடுத்தவன் தொல்லை, தொழில் முன்னேற்றமின்மை, வரவை மிஞ்சும் செலவு, அடிகடி விபத்து, அறுவைசிகிச்சை, திருட்டு பயம் இத்தனையும் இருந்தால் அந்த வீட்டிற்கு தென்கிழக்கில் கிணறோ அல்லது போர்வெல்லோ இருப்பதாக தீர்மானிக்கலாம்.
பெண்களுக்கு தொல்லை அல்லது பெண்களால் தொல்லை, ஊர் சிரிக்கும் அளவிற்கு குடும்பத்தில் கருத்து வேறுபாடு, திடீர் மரணங்கள் போன்றவற்றுக்கு தென்மேற்கு கிணறு காரணமாக அமைகிறது.
தேவையற்ற சிக்கல், நண்பர்களால் பிரச்சனைகள் – சஞ்சலம், வீண் வழக்குகள், இருதயநோய், கெட்ட பெயர், நல்ல செயல்களும் நமக்கே பாதகமாக முடிவது போன்ற சூழ்நிலைகளுக்கு வடமேற்கு கிணறு காரணமாக அமைகிறது.
அதுபோல தெற்கு மையத்தில் கிணறு அமைந்தால், துஷ்ட சக்திகளால் குழப்பங்களும், மேற்கு மையத்தில் உள்ள கிணறு பொருளாதார சீர்கேடு, ஆண்களுக்கு முன்னேற்றமின்மை, வம்ச வளர்ச்சிக்கு தடை போன்றவற்றை தருகிறது.
அதனால் புதிதாக வீடு கட்டுபவர்கள் கிணறு – போர்வெல் அமைக்கும்போது இதனையெல்லாம் தவிர்க்கலாம்.
கிணறுக்கு நல்ல பகுதி எது? என்பதை இப்பொழுது பார்ப்போம்.
ஆரம்பத்தில் சொன்னதைபோல வடகிழக்கு யோகம்தான் என்றாலும், வடகிழக்கு குறைந்த மனையில், வடகிழக்கில் குறை உள்ள மனையில், வடகிழக்கு மூலையில் கிணறு அமைத்தாலும் யோகத்தை தந்துவிடுவதில்லை. அதுபோல கிணற்றை தோண்டும்போது அந்த மனையின் உரிமையாளரின் ஜென்ம இராசி – நட்சத்திரப்படி காலநேரம் சரியாக இல்லாதபோது கிணறு எடுத்தாலும் நல்ல பலன்கள் குறையும்.
முறையாக சரியானப்படி நல்ல நேரத்தில் வடகிழக்கில் கிணறு அமைக்கும்போது இதைவிட சிறந்த பகுதி எதுவும் இல்லை என்று சொல்லும்படி அமைந்துவிடும்.
வடகிழக்கில் கிணறு-போர்வெல் அமைக்க இயலாத பட்சத்தில் வேறு எந்த பகுதியில் இந்த நீர்நிலைகளை அமைக்கலாம் என்பதை பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
(தொடரும்)
Send your Feedback to: editor@bhakthiplanet.com
For Vaasthu Consultation Mail to: bhakthiplanet@gmail.com
For Vaasthu Consultation Contact: K.Vijaya krishnarau,
Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India
More Vaasthu Articles in English
More Vaasthu Articles in Tamil
More Astrology Articles in English
More Astrology Articles in Tamil
2012-2013 Guru Peyarchi Article in Tamil
2012-2013 Guru peyarchi-palan Video
http://www.facebook.com/bhakthiplanet
http://www.youtube.com/bhakthiplanet
For Vaasthu consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved