Tuesday 24th December 2024

தலைப்புச் செய்தி :

மருத்துவ குணம் நிறைந்த ‘மிளகு’

நிரஞ்சனா

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்  போல மிளகும் பார்வைக்கு சிறியதாக இருந்தாலும் இதனுள் அடங்கி உள்ள சக்தி அபாரமானது. ”பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்” என்று பழமொழியே இருக்கிறது.

பகைவர் என்று தெரிந்தும் ஏன் அவர்கள் இல்லத்தில் சாப்பிடவேண்டும்? என்ற கேள்வியெல்லாம் கேட்க கூடாது. எதற்கு இந்த பழமொழி உண்டானது என்றால், நம் உடல்நிலை கூட ஒரு பகைவனை போலதான். எந்த நேரத்தில் நம் உடலின் நிலை மாறும் என்று யாராலும் யூகிக்க முடியாது. இன்று சாப்பிட்டு ஜீரணித்த உணவு, வேறோரு நாள் சாப்பிட்டால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம். ஒரு நேரத்தில் இருக்கும் சுறுசுறுப்பு இன்னொரு நேரத்தில் இல்லாமல் போகலாம். இப்படி நம் உடல்நிலையே சில நேரங்களில் எரிச்சல் செய்கிற பகைவரை போல இருக்கும்.

நம் உடல்நிலையே நமக்கு துன்பம் தர காரணம் உணவு. பெட்ரோல் காரில் டீசல் ஊற்றினால் என்னவாகும்? அதுபோல, நமது உடல் வாகுக்கு ஏற்றார் போல உணவை எடுத்துக்கொள்ளாவிட்டால் பிரச்னைதான்.

பல நோய்களுக்கு முக்கிய காரணமாயிருப்பது அஜீரண கோளாறு. இதனால் வருவதுதான் வாயுத்தொந்தரவு, புளிப்பு ஏப்பம், அத்துடன் அதிக கொழுப்பான உணவை சாப்பிடுவதால் இதயத்தில் – இரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து விடுகிறது. இவற்றுக்கெல்லாம் சிறந்த மருந்து மிளகுதான்.

வயிறு என்கிற பகைவர் வீட்டுக்குள், மிளகை அனுப்பினால் உடலில் ஏற்படும் நச்சுதன்மையை விரட்டியடிக்கும் ஆற்றல் மிளகுக்கு இருக்கிறது.

பத்து மிளகு சாப்பிட்டால் உடலை சீராக வைத்துக் கொள்ளலாம்.  இதயத்தை நல்ல நிலையில் இயங்க வைக்கும் ஆற்றலும் மிளகுக்கு இருக்கிறது.

ஒவ்வாமை என்கிற அலர்ஜி இருப்பவர்கள், பத்து மிளகையும் அல்லது உங்களால் அதன் காரம் தாங்க முடியாதென்றால் ஐந்து மிளகை தூள் செய்து,  அத்துடன் கல் உப்பையும், ஒரு வெற்றிலையில் வைத்து சாப்பிட்டால் 45 நாட்களுக்குள் எப்பேர்பட்ட அலர்ஜியும் நீங்கி விடும்.  

ஆனால் அல்சர் – வயிற்றில் புண் இருப்பவர்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சாப்பிட வேண்டும், ஏன் என்றால் மிளகு, கார தன்மை கொண்டது.

தொண்டைக் கம்மல் உடையவர்கள் பாலில் மிளகு தூள் கலந்து அருந்தினால் தொண்டைக்கம்மல் தீரும்.

தினமும் மிளகை தண்ணீரில் கலந்து, அந்த தண்ணீரை காய்ச்சி ஒரு மண்டலம் (48 நாட்கள்) அருந்தினால் உடல் நல்ல ஆராக்கியம் அடையும்.

மிளகு வாயு தொல்லையை தீர்க்கும் சக்தி கொண்டது மிளகு. உஷ்ணதன்மையும், கார தன்மையும் மிளகுக்கு இருப்பதால்  மாரடைப்பை தடுக்கும் சக்தி படைத்தது.  மிக முக்கியமாக உணவில் உள்ள நச்சுத் தன்மையைப் போக்கும் ஆற்றல் படைத்தது. எல்லா வித விஷங்களுக்கும்  சிறந்த மருந்து  மிளகு. உணவில் தேவையான அளவில் மிளகை சேர்த்து சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்தை பெறுவோம்.

மருத்துவம் பற்றிஅறிய கிளிக் செய்யவும்

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்விபதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

பொது அறிவிப்பு:

BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 N. JOTHI,

Advocate,

319. Law Chambers

Madras High Court,

Chennai – 104

Posted by on Aug 25 2012. Filed under Photo Gallery, மருத்துவம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »