தன் பக்தனை காப்பாற்றிய பாபா
மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு
பகுதி –19
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
ஒரு பெண் என்றும் பாராமல் சபையில் சேலை உருவப்பட்டு அவமானத்துக்கு ஆளானா திரௌபதி, தன் மானத்தை காக்க ’கிருஷ்ணா’ என்று கதறி அழைத்தாள். அந்த அபாய குரலுக்கு அருள் புரிந்தான் – மானம் காத்தான் கண்ணன். அதுபோல பகவான் ஸ்ரீசாய்பாபா, தன் பக்தர்களை என்றென்றும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். பாபாவை நம்பிக்கையுடன் ஒருமுறை வணங்கினாலே அவருடைய செல்லபிள்ளையாகிவிடுகிறோம். எந்த ஆபத்து வந்தாலும் அந்த ஆபத்தான தருணத்தில் நாம் பாபாவை மறந்தாலும் தன் குழந்தைகளான நம்மை காக்க பாபா மறப்பதில்லை.
ஒருசமயம், துவாரகாமாயில் தன் பக்தர்களுடன் பேசி கொண்டு இருந்தார் சீரடி மகான். அப்போது “என்னை நம்பி இருக்கும் நானாவை சாகவிடமாட்டேன். நானா நீ கவலைப்படாதே.. நான் உன்னை காப்பேன்” என்று ஆவேசமாக கத்தினார். இதை சற்றும் எதிர்பாராத பாபாவின் அருகில் இருந்த பக்தர்கள், ”ஏன் பாபா இப்படி கத்துகிறார்.? நானாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கவலையடைந்தார்கள்.
வெளியூரில் இருக்கும் நானா சீரடி வரும்போது அவரிடம், ”ஏன் பாபா உன் பெயரை சொல்லி பதறினார்?” என்பதை கேட்கவேண்டும் என்று நினைத்தார்கள் சில பக்தர்கள்.
நாட்கள் ஓடியது ஒருநாள் நானா சீரடி சாய்பாபாவை தரிசிக்க வந்தார். அப்போது சில சீரடி மக்கள், ”நானா…சில நாட்களுகு முன் உன் பெயரை சொல்லி பாபா பதறியபடி கத்தினார். ஏன் உனக்கு என்ன ஆயிற்று?“ எனக் கேட்டார்கள்.
அதை கேட்ட நானா பாபா தம் மீது வைத்துள்ள அன்பை எண்ணி ஆனந்த கண்ணீர் சிந்தினார். பிறகு நடந்ததை விவரித்தார். ‘ஆம். நீங்கள் சொன்ன அந்த நாளில் நானும் என் நண்பர் லேலே சாஸ்திரியும் ஒரு குதிரை வண்டியில் போய்க்கொண்டு இருந்தோம். அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பெரிய மரத்தில் எங்கள் குதிரைவண்டி மோதி வண்டி குடை சாய்ந்தது. நானும் அந்த சாஸ்திரியும் கீழே விழுந்தோம். அந்த நேரத்தில் அந்த குதிரைவண்டியும் எங்கள் மீது சாய்ந்திருந்தால் இன்று உங்களிடம் நான் பேசிக் கொண்டு இருப்பேனா என்பதே சந்தேகம்தான். எப்போதும் பாபாவின் நாமத்தை உச்சரிக்கும் நான், அந்த நேரத்தில் மரணம் பயம் இருந்ததால் பாபாவை அழைக்க மறந்தேன்.
ஆனால் நாம் அவரை மறந்தாலும் அவர் தம் பக்தர்களை என்றென்றும் நினைத்துக் கொண்டேதான் இருக்கிறார் என்பதை நீங்கள் சொன்ன பிறகுதான் எனக்கு புரிந்தது. நம் மகானின் கருணை மிகப் பெரியது. தம் பக்தர்களுக்கு நேருகிற ஆபத்துகளை நம் சீரடி சாய்பாபா தன் சக்தியால் தடுத்து நம் காக்கிறார்.” என்று நானா கண்களில் கண்ணீருடன் பேசினார்.
நானாவை மட்டும் அல்ல, இன்றுவரை சீரடி சாய்பாபா என்கிற அந்த மகான் தன் பக்தர்களாகிய நம்மை நிழல்போல் காக்குகிறார்.
(மகிமை தொடரும்.)
பொது அறிவிப்பு:
BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
N. JOTHI,
Advocate,
319. Law Chambers
Madras High Court,
Chennai – 104
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல்,அம்மன் கோயில்,முருகன் கோயில்,பெருமாள் கோயில்,பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved