கை தட்டுங்கள்… தீராத நோயும் தீரும்
ஒருவன் தெருவில் பெரிய பெரிய பாறங்கற்களை சர்வசாதாரணமாக தூக்கி மக்களுக்கு வித்தை காட்டி பணம் சம்பாதித்து வந்தான். இதை தினமும் பார்த்த இரும்பு வியபாரி ஒருவன், அந்த பயில்வானை அழைத்து, “நீ தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறாய்?” எனக் கேட்டார்.
“கூட்டம் அதிகம் வந்தால் 200 ரூபாய்வரை சம்பாதிப்பேன். இல்லையென்றால் 50 அல்லது 100 ரூபாய் சம்பாதிப்பேன்.” என்றான் பயில்வான்.
“அப்படியா சரி. நான் உனக்கு தினமும் 50 ரூபாய் தருகிறேன். என் இரும்பு குடோனில் இருக்கும் இரும்புகளை லாரியில் ஏற்ற வேண்டும். அதுபோல லாரியில் இருந்து வரும் இரும்புகளை குடோனில் நீ இறக்க வேண்டும். அதுதான் உனக்கு வேலை.” என்றார் அந்த வியபாரி.
தினமும் தெருவில் வித்தை காட்டுவதை விட இது நல்ல வேலையாக இருக்கிறதே என்று யோசித்த பயில்வானும் சம்மதித்தான்.
மறுநாளில் இருந்து வியபாரியின் குடோனில் இருந்து இரும்புகளை இறக்கி வைக்கிற வேலையை தொடங்கிய பயில்வான், கொஞ்ச நேரத்திலேயே சோர்ந்து போனான். இரும்புகளை தூக்க முடியாமல் சிரமப்பட்டான். இதை கண்ட வியபாரி, “என்னப்பா இது?. நீ தினமும் சர்வசாதாரணமாக இரும்பை விட வலுவான பாறாங்கற்களை தூக்கி தெருவில் வித்தை காட்டுவாய். ஆனால் இங்கோ கொஞ்சம் எடையுள்ள இரும்புகளை தூக்க சிரமப்படுகிறாயே ஏன்?” எனக் கேட்டார் வியபாரி.
“நீங்கள் சொல்வது உண்மைதான். நான் கனமான பாறாங்கற்களை தூக்கி வித்தை காட்டும் போது, சுற்றி இருக்கும் மக்கள் கை தட்டுவார்கள். அந்த உற்சாகத்தில் எனக்கு கணமான பாறைகளை நாம் தூக்குகிறோம் என்ற எண்ணமே இருக்காது. ஆனால் இங்கோ யாரும் கைதட்டாமல் அவரவர் வேலையில் கவனமாகவும் அமைதியாகவும் இருப்பதால் என் மனம் உற்சாகம் இல்லாமல் ஆகிவிட்டது. அதனால்தான் சாதாரண கணம் உள்ள இரும்பை கூட என்னால் தூக்க முடியவில்லை.” என்றான் அந்த பயில்வான்.
இப்படி நாம் வித்தை காட்டும் கலைஞர்களுக்கு கைதட்டும் போது அவர்கள் உற்சாகம் அடைகிறார்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.
ஆனால் கைதட்டும் போது, கை தட்டுபவர்களுக்கு நோய் தீரும் என்கிறது ஒரு ஆராய்ச்சி. குறிப்பாக மாரடைப்பு, கேன்சர் போன்ற வியாதிகள் நீங்குமாம்.
எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் திபெத் சென்று இருந்தபோது தலாய்லாமாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. “தனக்கு புற்றுநோய் இருக்கிறது” என்றார் அந்த நபர்.
அதற்கு தலாய்லாமா, “நீ தினமும் 20 நிமிடம் உன்னுடைய இரண்டு கைகளையும் சேர்த்து கைதட்டு. பிறகு பார் நல்ல மாற்றம் கிட்டும்.” என்றாராம்.
“நம் கைதானே எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் கைதட்டலாமே, நோய் தொலைந்தால்போதும்” என்ற எண்ணத்தில் தினமும் 30 நிமிடம் தொடர்ந்து கை தடடினார். இப்படி தினமும் இந்த பயிற்சியை செய்ததால் தனக்கு இருந்த எலும்பு புற்றுநோய் முழுவதுமாக குணமானது என்கிறார். கைதட்டுவதால் எப்படி நோய் நீங்குகிறது.
நம் உடலில் உள்ள ரத்த நாளங்கள் 2 மி.மீ குறுக்களவு கொண்டவை. இதனால் நாம் டென்ஷன் ஆகும்போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இதனால் ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதை சரி செய்யதான் கைதட்டுவது நல்ல மருந்தாக இருக்கிறது.
அத்துடன், சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் உடல்பயிற்சி செய்ய வேண்டும். எதற்கும் கவலைப்பட்டால் என்ன லாபம்.? நடப்பது நடக்கத்தான் போகிறது. அது நிச்சயம் நன்மையாகவே நடக்கும் என்ற எண்ணத்தை மனதில் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
அதை விட்டுவிட்டு இப்படி ஆகமோ அப்படி ஆகுமோ என்று தேவையில்லாமல் கற்பனை செய்துகொள்வதால் நம் உடலையும், உள்ளத்தையும் கெடுத்து கொள்கிறோம். பிறகு நோயாளியாக மாறி விடுகிறோம். எது நடந்தாலும் அது நன்மைக்கே, காலம் ஒருநாள் மாறும் என்று அமைதியாக இருந்தால் எண்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும் எச்.டி.எல் என்கிற நல்ல கொழுப்பும் உருவாகும். இதனால் 99 சதவீதம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் வியாதிகளும் தீரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
வாய் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்பது போல, தினமும் 20 நிமிடம் தொடர்ந்து கைதட்டினால் அக்குபிரஷ்ர் சிகிச்சையாக மாறி விடுகிறது. இதனால் எநத நோயும் நம்மை நேருங்காது. ஒருவரை நோக்கி கைட்டும் போது அந்த நபர் திரும்பி பார்ப்பதுபோல, ஆரோக்கியமும் நம்மை திரும்பி பார்க்கும். அதனால எல்லாரும் ஜோரா கை தட்டுங்கப்பா.!
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி–பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved