நீங்களும் ஜெயிக்கலாம்
தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஒருவேளை தோல்வி அடைந்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று எண்ணினால் எதையும் செய்ய முடியாது – சாதிக்கவும் முடியாது. சாதிக்கவேண்டும் – வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் – வெற்றிபெறலாம். வீரசிவாஜி இளம்வயதில் சாதித்தார். கடும்போராட்டத்திற்கு பிறகு வயது முதிர்ந்தாலும் மனம் தளராமல் காந்தியடிகள் சாதித்தார்கள்.
ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் வயதில் பெரியவர்கள் தீர்ப்பு சொன்னால் சரியாக இருக்கும் என்று சபையில் இருப்பவர்கள் நினைத்தார்கள். அதனால் கரிகாலசோழன், வயதான பெரியவரின் வேடம் அணிந்து தீர்ப்பு சொன்னார். அந்த தீர்ப்பை கேட்ட சபையோர்கள் ஆச்சரியமும் பாராட்டும் தெரிவித்தார்கள்.
’கரிகாலசோழன் அரசராக இருந்தாலும் இளம் வயதாக இருப்பதால் அனுபவம் இருக்காது. அதனால் அவர் வந்து இந்த வழக்குக்கு தீர்ப்பை சொல்லி இருந்தாலும் இந்த அளவுக்கு சரியாக இருந்திருக்காது’ என்று பேசினார்கள் மக்கள். சில நாட்கள் ஆனபிறகுதான், அன்றைய தினம் பெரியவராக வந்து நல்ல தீர்ப்பு சொன்னதே மன்னர் கரிகாலசோழன்தான் என்பதை தெரிந்துக்கொண்டார்கள்.
ஆகவே நல்ல விஷயத்தை சொல்ல வயதோ, சாதனை செய்ய வயதோ அவசியம் இல்லை. சர்க்கரை தண்ணீரில் குலோப்ஜாம் ஊற வைப்பதுபோல, தன்னம்பிக்கையை ரத்தத்தோடு ஊற வைக்கவேண்டும். எந்த காரணத்தாலும் மன தைரியத்தையும், தன்னம்பிக்கையும் இழந்துவிடக் கூடாது.
தன்னம்பிக்கை உள்ளவர்கள்தான் சிந்திக்கும் ஆற்றல் உள்ளவர்கள். – சாதிக்க தகுதியானவர்கள். நாம் சாதிக்க பிறந்தவர்கள். அதனால் எக்காரணம்கொண்டும் மனம் தளராமல் இருந்தால் சிகரத்தை அடைவோம்.
நீங்களும் ஜெயிக்கலாம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© bhakthiplanet.com All Rights Reserved