தளராத மனமே சிகரத்தை அடையும்
நிரஞ்சனா
எண்ணம்தான் வாழ்க்கை. நாம் எண்ண நினைக்கிறோமோ அதன்படிதான் நடக்கும். அதனால்தான் பெரியவர்கள் சொல்வார்கள், “நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்” என்று.
வெற்றி வெற்றி என்று நினைத்தால் வெற்றிகிட்டிவிடுமா?. முயற்சி செய்ய வேண்டாமா? என்பதும் பலரின் கேள்வி. முயற்சிக்கு முதலில் மனதில் உற்சாகம் தேவை. அந்த உற்சாகம் இருந்தால்தான் வெற்றி கிட்டும்.
காட்டில் இருக்கும் மரம், யார் உதவியும் இல்லாமல் பிரம்மாண்டமாக வளர்வதுபோல் மனித வாழ்க்கையும் மற்றவர் உதவி இல்லாமல் வாழ்ந்து சாதிக்க முடியும். ஆனால் இதற்கு தேவை மன தைரியம், தன்னம்பிக்கை, துணிச்சல். இவை இருந்தால் வெற்றி என்பது எட்டாதகனியல்ல அது நம் காலடியில் அடங்கிவிடும் நிழல் போல்தான்.
வீர சிவாஜி, முகலாய வீரர்கள் தங்கிருந்த கொண்டனா கோட்டையை எப்படியாவது கைப்பற்றினால் அது தமக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்று நினைத்தார்.
ஆனால் அந்த கோட்டையில் தங்கிருந்த போர்படை வீரர்களோ அதிகமான அளவில் இருந்தார்கள். ஆனால் வீரசிவாஜியிடம் அந்த அளவுக்கு படை வீரர்கள் இல்லை. இருந்தாலும் போருக்கு தயாரானார். அந்த போருக்கான திட்டம் சிவாஜியின் தளபதி தானாஜி மலுசரே, அவரது சகோதரர் சூர்யாஜி தலைமையில் நடந்தது.
சில நாட்களாக, கொண்டனா கோட்டையையும், அதன் பாதுகாப்பையும் கணக்கிட்டார் தானாஜி மலுசரே. அக்கோட்டையில் நன்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.. அந்த கோட்டைக்குள் எப்படி நுழைவது என்று சிந்தித்தார். அப்போது ஒரு பாறை தெரிந்தது. அந்த பாறையோ செங்குத்தான பாறை. அதன் மேல் ஏறிவிட்டால் கோட்டைக்குள் சென்றுவிடலாம் என்று முடிவு செய்தார். ஆனால் செங்குத்தான பாறையின் மேல் எப்படி ஏறுவது என்று நினைத்தபோது, உடும்பை அந்த பாறைமேல் ஏற பயன்படுத்தலாம் என முடிவு செய்தார்.
எதிரி நாட்டு கோட்டையை தாக்க தங்களிடம் இருந்த சிறிய போர்படை வீரர்களை அழைத்துக்கொண்டு, அவர்களுடன் உடும்பையும் எடுத்து சென்றார்கள். உடும்பின் உடலில் கயிற்றை கட்டி மறுகயிற்றை தானாஜி பிடித்துகொண்டு செங்குத்தான பாறை மேல் ஊடுருவி சென்றார்.
அந்த உடும்பு அந்த கோட்டையின் மீது ஏறியதும் மற்ற போர்வீரர்களும் ஏறுவதற்காக கயிற்றை வீசினார் தானாஜி. அந்த கயிற்றின் வழியாக மற்ற போர்வீரர்களும் ஏறினார்கள்.
அப்போது இதை எதிரிகள் பார்த்துவிட்டார்கள். கோபத்தில் ஆவேசமாக வீரசிவாஜியின் படை வீரர்களுடன் கடுமையாக போர் செய்தார்கள். அந்த போரில் வீரசிவாஜியின் தளபதி தானாஜி கொல்லப்பட்டார்.
விரக்தியில் முரட்டு தைரியம் வரும் என்பார்கள் அல்லவா. அது போல தானாஜியின் வீர மரணம், சூர்யாஜியை ஆவேசமாக்கியது. கடுமையாக போரிட்டார். மூர்த்தி சிறியதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்பதுபோல, வீரசிவாஜியின் சிறிய அளவிலான போர் படைவீரர்கள், எதிரிநாட்டின் மெகா போர்படையை கொன்று வீழ்த்தி, “கொண்டனா கோட்டையை“ கைப்பற்றினார்கள்.
எடுக்கும் காரியம் முடியும் என்று மனதைரியத்தோடு செய்தால் முடியாதது என்பது எதுவுமே இல்லை. மனம்தான் சக்தி வாய்ந்த கத்தியின் முனை.
நீங்களும் ஜெயிக்கலாம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved