விஷத்தை முறியடித்த முகுந்தன்
பூ நாயகன் என்றோரு அரசர். இவருடைய மனைவி சந்திரமுகி. இந்த தம்பதியினருக்கு பிறந்தவள்தான் மீரா. ஒருநாள், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் போது, நான்கு வயது மீரா, தன் தோழிகளுடன் ஆடிப் பாடிக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில் மகான் ரூபகோஸ்வாமி, அரண்மனைக்கு வந்தார். அவர் கையில் கிருஷ்ணரின் விக்கிரகம் இருந்தது. அதை கண்ட குழந்தை மீரா, “இது என்ன பொம்மை.?“ என்றாள் அந்த மகானிடம்.
“இது பொம்மை அல்ல குழந்தாய், கிருஷ்ண பரமாத்மா.” என்றார்.
“கிருஷ்ணனா..? அவர் யார்.?” என்றாள் மீரா.
“கிருஷ்ணன் அழகானவன். முகுந்தா, கண்ணா என்று யார் எப்படி அழைத்தாலும் ஒடி வருவான். தன் பக்தர்கள்தான் அவனுக்கு எல்லாம். அதே போல அவன்தான் அவன் பக்தர்களுக்கு எல்லாம். எளிமையானவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்கள் அழைக்காமலேயே அவர்களை தேடி வந்து அன்பு காட்டுவான்.” என்று மீராவிடம் ஸ்ரீகிருஷ்ணரை பற்றி பெருமையாக பேசினார் மகான் ரூபகோஸ்வாமி.
அந்த நிமிடத்தில் இருந்து கிருஷ்ணர் மீது பக்தி கலந்த காதல் கொண்டாள் மீரா. காலங்கள் நகர்கிறது. பாட்டனாரின் விருப்பத்திற்காக ராணாவை திருமணம் செய்ய சம்மதித்தாள். சித்தூர் செல்கிறாள். “இந்த சித்தூரில், பார்க்கும் இடமெல்லாம் என் கிருஷ்ணரின் முகம் தெரிகிறது.” என்றாள் ராணாவிடம். இதை கேட்ட ராணாவுக்கு மீராவின் மேல் கோபம் ஏற்படுகிறது. ராணாவின் சகோதரர் விக்ரமன். இவன் மீராவை பற்றி அவதூறாக தன் சகோதரான ராணாவிடம் சொல்கிறான். அதை கேட்ட ராணா, மீரா மேல் மேலும் கோபம் கொள்கிறான். இருந்தாலும் அந்த கோபத்தை காட்டிக்கொள்ளாமல் மீராவை “அரசு தர்பாருக்கு வா“ என்று அழைக்கிறான்.
அரசு தர்பாருக்கு வரும் வழியில் கண்ணனின் புல்லாங்குழல் இசை கேட்டு கோயிலுக்கு சென்று விடுகிறாள் மீரா. இதனால் ராணாவுக்கு மீராவின் மேல் இருந்த வெறுப்பு, கொலை வெறியாக மாறியது. விஷத்தை தன் வேலையாட்களிடம் கொடுத்து, மீராவுக்கு தந்துவிடும்படி உத்தரவிடுகிறான் ராணா. அதன்படி விஷம் கொடுக்கப்படுகிறது. ஆனால் கிருஷ்ணரின் மகிமையால் அந்த கொடிய விஷம், அமிர்தமாக இனித்ததே தவிர, மீராவை ஒன்றும் செய்யவில்லை.
இதை கண்ட விஷம் கொடுத்த வேலைகாரன் பயந்து போனான். மனம் மாறினான். மீராவை அந்த கிருஷ்ண பரமாத்மாவே ஒவ்வொரு சமயமும் காப்பாற்றுகிறார் என்பதை உணர்ந்துக் கொண்டான்.
ஒருநாள் டெல்லி பாதுஷாவின் சபையில் மீராவின் இசை ஞானத்தையும், இனிய குரல் பற்றியும் பேசுகிறார்கள். அதை கேட்டு தான்சேன், மான்சிங் என்ற இருவர், மீராவின் பாடல்களைக் கேட்க ஆவல் கொண்டு, வழிப்போக்கர்கள் போல மாறுவேடத்தில் வருகிறார்கள்.
இரவெல்லாம் கோயிலில் மீராவின் இனிய குரலை, இசை அமுதத்தை கேட்டு மெய் மறந்து இருந்தனர். பின்னர் அவர்கள் டெல்லி பாதுஷா அளித்த முத்துமாலையை மீராவிடம் பரிசாக தந்துவிட்டு கிளம்புகிறார்கள். வேட்டைக்கு சென்றிருந்த மீராவின் கணவன் ராணா திரும்பி வந்ததும், அவன் தம்பி விக்கிரமனும், தளபதி ஜயமல்லும், மீராவுக்கு டெல்லி பாதுஷா தந்த முத்துமாலையை பற்றி சொல்கிறார்கள். “டெல்லி பாதுஷா ஏன் இவளுக்கு பரிசு தர வேண்டும்.? இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக.” இல்லாததும் பொல்லாததும் சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் மீராவுக்கு, அந்த முத்துமாலை டெல்லி பாதுஷாவுக்குரியது என்று தெரியாது. யாரோ வழிப்போக்கர்களாக வந்த ரசிகர்கள் தந்தது என்றே நினைத்தாள். இந்த உண்மை புரியாத ராணா, “கோயில் இருப்பதால்தானே மீரா பாடுகிறாள்.? அவள் புகழும் உலகமெல்லாம் பரவுகிறது. அந்த கோயிலை இடித்துத் தள்ளுங்கள்.” என்று ராணா உத்தரவிட்டான்.
ராணாவின் உத்தரவு மீராவுக்கு தெரிவிக்கப்படுகிறது. மனம் கலங்குகிறாள் மீரா. அன்றோடு அரண்மனை வாழ்க்கையை வெறுத்தாள். தம்பூராவை மட்டும் எடுத்துக்கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறினாள். பிருந்தாவனத்திற்கு செல்கிறாள். அங்கிருந்த மகான் ரூபகேஸ்வாமியுடன் துவாரகாபுரிக்குப் சென்றாள். துவாரகா நாதனின் சந்நதி கதவு மூடியிருப்பதை கண்டாள். தன் இனிமையான தெய்வீக குரல் வளத்தால் அருமையாக பாடினாள் மீரா. அந்த பாடலை கேட்டு, துவாரக ஆலயத்தின் கதவு தானாக திறந்து மீராவை, தன்னுள் ஐக்கியப்படுத்திகொண்டார் கிருஷ்ணபரமாத்மா.
இன்றுவரை மீராவின் புகழ் உலகெமெல்லாம் இருக்கும் இந்துக்களால் போற்றப்படுகிறது என்றால், அதற்கு காரணம் மீராவின் கிருஷ்ண பக்தியே காரணம்.
“என் மகிழ்ச்சியே கிருஷ்ணரை காண வேண்டும் என்பதுதான். அந்த மகி்ழ்ச்சியை பெற்றுவிட்டேன். நான் பாக்கியவதி என்றாள் மீரா. மீராவுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு கிருஷ்ண பக்தர்களுக்கும் அதுதான் விருப்பம். சர்வம் கிருஷ்ணார்ப்பணம்.
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© bhakthiplanet.com All Rights Reserved