Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

வாஸ்துகலையில் சமையல் அறை அமைப்பு

Click & Read Previous Part

Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners

ஊர் முழுவதும் ஒருவனுக்கு நல்ல பேரு இருந்தாலும், அவனுக்கு ஒரு வேளையாவது வயிற்றுக்கு சோறு இல்லை என்றால் அவன் புகழுக்குரிய மனிதனாக இருப்பதில் பயன் என்ன? குறைத்து சாப்பிட்டால் பல ஆண்டு வாழலாம் என்று மருத்துவம் சொல்கிறது. நன்றாக சாப்பிடவும் ஒரு யோகம் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

எனக்கு தெரிந்த நபர் ஒருவர். இனிப்பு கடையின் அதிபர். ஆனால் அவரால் ஒரே ஒரு பூந்தியை கூட ருசி பார்க்க முடியாத அளவுக்கு சர்க்கரை நோய்.

எதற்கும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்பார்கள். ஆனால் சில வீடுகளில் கதையே வேறு மாதிரி இருக்கும். ஆரோக்கியம் நன்றாகவே இருந்தாலும், நிம்மதியாக குடும்பத்துடன் அமர்ந்து அவர்களால் சாப்பிட முடியாத அளவுக்கு குடும்ப பிரச்சனைகள் இருக்கும்.

சாஸ்திர ரீதியில் சமையலறை நல்ல பகுதியில் இல்லாவிட்டால், அந்த குடும்பத்தில் நிம்மதி என்றால் என்னவென்று தெரியாது. நிம்மதி என்றால் அது டி.வி சீரியல் பெயரா என்பார்களே தவிர, அனுபவ ரீதியாக நிம்மதியை உணர்ந்திருக்க மாட்டார்கள். காரணம் தவறான பகுதியில் அமைய பெற்ற சமையலறையால்தான்.

இந்த நிலை வடகிழக்கில் சமையலறையாக அமைய பெற்றவர்களுக்கு ஏற்படுகிறது.

வடகிழக்கை நாம் ஈசான்ய மூலை என்று அழைக்கிறோம். இது தண்ணீர் இருக்க வேண்டிய பகுதி. நீர் நிலைக்கு மட்டுமே ஈசான்ய மூலை ஏற்றது. நீர் நிலைக்கு மட்டுமே ஏற்ற பகுதி.

இங்கு நெருப்புக்குரிய சமையலறையை அமைக்கும் போது, நடப்பவை எல்லாம் எதிர் மாறாகவே நடக்கும். பொருளாதரத்தை நசுக்கும். மற்றவர்களை நம்பி வாழ வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளும். புகழை கெடுக்கும். ஒருவரின் வாழ்வின் முன்னேற்றத்தை தடுக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அத்தனையும் வடகிழக்கு சமையலறை செய்யும்.

தென்மேற்கு சமையல் அறை 

தென்மேற்கு சமையலறையாக அமைய பெற்றவர்களுக்கும் இதே நிலைதான். பெண்களின் சந்தோஷத்தை கெடுக்கும். ஆண்கள் முன்னேற்றம் காணாதவர்களாக இருப்பார்கள். மருத்துவ செலவுகளை மிகுதியாகவே தந்திடும்.

வடமேற்கு சமையல் அறை 

வடமேற்கு சமையலறையாக அமையப் பெற்றவர்கள் யோகசாலிகள். பொருள்-புகழில் பெருமை காண்பார்கள்.

இன்று ஏதோ சுமாராக இருப்பதை போல தோன்றினாலும், நிச்சயம் ஏதேனும் சொத்து சேர்ப்பார்கள். பணவரட்சியை தராது. வடமேற்கு சமையலறை யோகமே.

தென்கிழக்கு சமையல் அறை 

தென்கிழக்கு சமையலறையாக கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனலாம்.

மனைகலை சாஸ்திரம், ஒரு மனைக்கு நான்கு மூலைகளில் தென்கிழக்கு மூலையை  அக்னி மூலை என்கிறது. அதன் பெயர் தன்மைக்கு ஏற்ப, அக்னி மூலையிலேயே சமையலறை அமைப்பது மிக சிறப்பான தன்மை.

நிச்சயம் வாழ்வில் முன்னேறுவீர்கள். இதை சொல்ல தயக்கமோ சந்தேகமோ இல்லை. வாழ்வில் எல்லா வகையிலும் மேன்மை பெறுவார்கள். இன்று மந்த நிலை இருந்தாலும், இறைவனின் அருளால் கிரக நிலை சாதக நிலையாக மாறும் போது, தென்கிழக்கு சமையலறையின் யோகமும் உடன்சேர்ந்து, உன்னத யோக நிலைக்கு வாழ்க்கையை அழைத்து செல்லும். தென்கிழக்கு பகுதி சமையலறைக்கு ஏற்றதொரு பொருத்தமான பகுதியாகும்.

ஆனால் இவற்றையும் விட சமையல் அறை அமைப்பு பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ இருக்கிறது கட்டடகலை சாஸ்திரத்தில். அவற்றில் சிலவற்றை பற்றி சொல்கிறேன்.

Click & Read Next Part

Send your Feedback to: editor@bhakthiplanet.com




For Vaasthu Consultation Contact: Vijay G Krishnarau,

Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

More Vaasthu Articles in English

More Vaasthu Articles in Tamil

More Astrology Articles in English

More Astrology Articles in Tamil

2012-2013 Guru Peyarchi Article in Tamil

2012-2013 Guru peyarchi-palan Video

http://www.youtube.com/bhakthiplanet

CLICK FOR VIDEO PAGE

For Vaasthu consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 4 2012. Filed under Headlines, Vaasthu, கதம்பம், செய்திகள், முதன்மை பக்கம், வாஸ்து. You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »