Sunday 26th January 2025

தலைப்புச் செய்தி :

சிவ பெருமானை தரிசித்த பிறகு செய்ய வேண்டியது என்ன?

நிரஞ்சனா

இந்த அவசர உலகத்தில் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது? என்று பலருக்கு தெரிவதில்லை. அதனால் செய்ய கூடாத செயலை செய்து அதன் பிறகு வருந்துகிறார்கள். இது தவறு – இது சரி என்று மற்றவர்கள் எடுத்து சொன்னாலும் அதை சிலர் காது கொடுத்து கேட்பதாகவும் இல்லை.

தாம் செய்வது பாப காரியம் என்று தெரிந்தாலும் தங்களின் சுயநலத்துக்காக அச்செயலை நியாயப்டுத்துவதற்காக நல்ல அறிவுரை சொல்பவர்களிடமே குதற்கமாக கேள்வி கேட்பார்கள். இதனால் நல்லது சொல்பவர்கள் வேறு வழியில்லாமல், அவர்களிடம் “நீ கேட்டால் கேளு, கேட்காவிட்டால் போ எனக்கென்ன“ என்று சொல்லும் கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள்.

பொதுவாக ஆன்மிக தகவல்களை பெற்ற தாயை நம்புவது போல நம்பவேண்டும். ஆன்மிகம் என்பது விரக்தியில் இருப்பவர்களை வீரநடை போடவைக்கும். ஆணவகாரர்களுக்கு புத்திசொல்லும். பட்டால்தான் புத்திவரும் என்பார்கள் பெரியோர்கள். அதுபோலதான் ஒரு அரசருக்கும் புத்திவந்தது.

சிவன் சொத்தால் வந்த வினை

விதாதா என்ற அரசர் இருந்தார். அவருடைய நண்பர் அஜிதன். அரசரின் வலது கையை போல பக்கபலமாக அஜிதன் இருந்து வந்தார். அரசர் விதாதாவும், நண்பர் அஜிதனும் தான-தர்மம் செய்வதில் வள்ளலாக திகழ்ந்தார்கள். நாடே இருவரையும் புண்ணியவான்கள் என புகழ்ந்துகூறும். 

ஒருநாள் அஜிதன் தன் தந்தைக்கு சிறப்பாக பித்ரு பூஜை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மிகுந்த பொருட்செலவில் பூஜையும், கோ தானம், பூமிதானம், கன்னிகாதானம், அன்னதானம் என்று பல தானங்களை செய்தார்.

விதி யார் மூலமாகவோ விளையாட நினைக்கும் அல்லவா. அந்த விதியில் இருந்த தப்பிக்க நிச்சயம் தெய்வஅனுகிரகம் மட்டுமே வேண்டும். அந்த தெய்வம் மனிதர்களின் உள்ளத்தில் புகுந்து அவர்களுக்கு நன்மைகளை சொல்லும். ஆனால் பூர்வபுண்ணியம் வலுவிழந்து, அதனால் விதி வலியதாக அமைந்து விட்டால் என்ன செய்வது.? மதி பாதாளலோகத்தில் தள்ளதான் வேலை செய்யும்.

நல்ல புத்திசொல்பவர்களை கூட அவமானப்படுத்தும். ஆணவம் தலைதூக்கும். அப்படிதான் மன்னர் விதாதாவுக்கும் அவரின் நண்பர் அஜிதனுக்கும் விதி, ஆணவம் என்ற விஷயத்தில் தலைதூக்கியது. 

ஒருநாள், பூஜைக்கு தேவையான வாழைபழம் இல்லாததால் அரசரின் ஆணைப்படி அஜிதன், சிவன் கோவிலில் இருந்த வாழை மரத்தில் இருந்து பழத்தை பறிக்க வந்தார். இதை பார்தத அங்கிருந்த அடியார்கள் பதறினார்கள். “சிவன் சொத்து குலநாசம். அதனால் பழத்தை பறித்து தவறு செய்யாதீர்கள்.” என எவ்வளவோ சொல்லியும் கேட்கிற மனநிலையில் இல்லை அஜிதன். “இது மன்னரின் உத்தரவு, நான் எதுவும் செய்வதற்கில்லை” என்று சொல்லி, பழத்தை பறித்துவிட்டார்.

சில நாட்களிலேயே நடந்தது விபரீதம். அரசருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், ஆட்சியை சரியாக நடத்த முடியாமல் இருந்தார்.

இதனால் எதிரிகள் படையெடுத்து நாட்டை கைப்பற்றினார்கள். சிவ துரோகம் செய்த அஜிதனின் கண்களை தோண்டி, நாட்டை விட்டே துரத்தியடித்தார்கள் எதிரிகள்.

சிவன் சொத்தில் சொகுசாக வாழ நினைப்பவர்கள், தங்களுடைய சொத்தையே இழக்க நேரும் என்கிற உண்மையை இந்த சம்பவம் உணர்த்துகிறது.

சிவன்  கோவிலில் தரும் விபூதியாக இருந்தாலும் நெற்றியில் வைத்து விட்டு, மிச்சத்தை ஆலயத்திலேயே வைத்துவிட வேண்டும்.

 பூமிக்கடியில் கிடைக்கும் புதையல் எப்படி அரசாங்கத்திற்கு மட்டும் உரிமையாகிறதோ அதேபோல சிவசன்னிதானத்தின் முன் செய்யும் அர்ச்சனை பொருட்களும் சிவனுக்கே சொந்தம். சிவன் கோயிலில் செய்த அர்ச்சனை பொருட்களை கோவிலுக்கு வெளியே இருப்பவர்களிடம் தானமாக கொடுத்துவிட்டால் புண்ணியங்கள் பல உண்டு. நோய்களும் விலகும்.  சிவனருளால் பல நன்மைகள் கிடைக்கும்.     

அம்மன் ஆலயத்திற்கு சென்றால் உட்காராமல் வரலாம். அதுபோல ஸ்ரீமகாலஷ்மி ஆலயத்திற்கு சென்றால் அந்த ஆலயத்தில் அமராமல் லஷ்மியை தரிசனம் செய்துவிட்டு நேராக வீட்டுக்கு வந்துவிடலாம். ஆனால் சிவலாயம் சென்றால் சிவனை தரிசித்தபிறகு அந்த ஆலயத்திலேயே சிறிது நேரம் உட்கார்ந்த பிறகே வர வேண்டும். காரணம், சிவபெருமான் நம்மை காக்குகிறார். ஆனால் சிவனுக்கு காவலர்கள் பூதகணங்கள்.

ஒவ்வொரின் நிழல் அவரவரை தொடர்ந்து வருவதைபோல, சிவபெருமானும் தன் ஒவ்வொரு பக்தனுடனும் வர விரும்பி அவர்களுடன் வந்து விடுவார். இதனால் ஈசனின் காவலர்களான பூதகணங்களும் பின்தொடர்ந்து வந்து விடும் என்கிறது சாஸ்திரம்.

அதனால்தான் சிவனை தரிசனம் செய்த பிறகு சிறிது நேரம் கோயிலில் அமர்ந்துவிட்டு வந்தால் சிவபெருமானின் அருளாசி மட்டும் நம்மை பின் தொடர்ந்து வரும்.  இதனால் சிவபெருமானுக்கு அன்பானவர்கள் என புகழ் கிடைத்து, எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் தடையேதும் இன்றி வெற்றிகள் குவியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jul 2 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »