காஃபி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்
காலையில் எழுந்தவுடன் ’பெட் காஃபி’ சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. காலையில் ’பெட் காஃபி’யின் முகத்தில் விழித்தால்தான் அன்றைய நாள் ’Bad day’யாக இருக்காது என்கிற செண்டிமென்டும் சிலருக்கு இருக்கிறது. என்னதான் விலை உயர்ந்த ஆரோகிய பானங்களை பருகினாலும், காஃபியின் ருசிக்கு அவை ஈடாகாது. தேவாமிர்தம் என்று கூட காஃபியை சொல்லலாம்.
நமக்காக இந்த காஃபியை முதலில் கண்டுபிடித்தது ஆடுகள்தான். வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய ஆடுகளை மேய்க்க காட்டுக்குள் அழைத்துச் செல்வாள். அந்த ஆடுகள் சோர்வாக அந்த பெண்மணியுடன் நடந்துசெல்லும். ஆனால் திரும்பி வரும் போது, அந்த ஆடுகள் துள்ளி குதித்து மகிழ்சியாக வரும். இதை கண்ட அந்த பெண், இந்த ஆடுகள் காட்டுக்குள் நன்றாக சாப்பிடவதால்தான் இப்படி உற்சாகமாக இருக்கிறது என்று நினைத்தாள்.
ஒருநாள் அந்த பெண், தம்முடைய ஆடுகள் அப்படி என்னதான் திண்ணுகிறது என்பதை அறிந்துக்கொள்ள, அந்த ஆடு சாப்பிடுவதை உற்று கவனித்தாள். அப்போது அந்த ஆடுகள் ஒரு செடியில் உள்ள கொட்டைகளை கடிக்கும்போது, நல்ல நறுமனம் வந்தது. இதை கண்ட அந்த ஆடுமேய்க்கும் பெண், அந்த செடியில் இருக்கும் கொட்டைகளை அவளும் சாப்பிட்டு பார்ததாள். அது மிகவும் ருசியாக இருந்ததால் அதை தினமும் சாப்பிட்டு வந்தாள்.
அதை சாப்பிடும்போதெல்லாம் தன் உடலில் நல்ல புத்துணர்ச்சி கிடைப்பதை உணர்ந்தாள். இந்த விஷயத்தை தனக்கு தெரிந்தவர்களுக்கெல்லாம் சொன்னதால், காஃபியின் திடம்-மனம்-சுவை உலகம் முழுவதும் பிரபலமானது. ஆடுகள் திண்பதை ’காப்பி’ அடித்து அந்த பெண்ணும் சாப்பிட்டு பார்த்தாள், அவளிடம் இருந்து பலரும் ’காப்பி’ அடித்ததால்தான் என்னவோ அதற்கு காஃபி என்று அழைக்கிறார்களா?
காஃபியை ஒரு தடவை பருகினால் அவர்கள் அன்றிலிருந்து காஃபி பிரியர்கள் ஆகிவிடுவார்கள். காஃபி தயாரிப்பதிலும் பக்குவம் இருக்கிறது. ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் காஃபி சாப்பிட்டுவிட்டுதான் செல்ல வேண்டும் என்று மனம் அடம் பிடிக்க வேண்டும். அய்யோ இவர் வீட்டு காஃபியா என்று எவரும் அலறும் படி காஃபி தயாரிக்கக் கூடாது. வீடு தேடி வரும் ஒருவருக்கு பருக காஃபி தந்து அனுப்புவதுதான் அவருக்கும் கௌரவம் நமக்கும் கௌரவம். இல்லையென்றால் ஒரு காஃபிக்கு கூட வக்கில்லை என்று பேசுவார்கள்.
பிரிட்டனில் கேண்டீன் ஒன்றில் காஃபிக்காக கியூவில் காத்திருந்தாராம் பிரிட்டன் பிரதமர் டேவிட்.
இப்படி காஃபி, அனைவரையும் தன் ருசியால் கவர்ந்துவிடுகிறது.
இருந்தாலும் சிலர் காஃபியை தொடர்ந்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது இல்லை என்று சொல்லியும் வந்தார்கள். ஆனால் ’சொசைடி ஃபார் எக்ஸ்பெரிமென்டல் பயாலஜி’ என்ற அமைப்பு, ஆராய்ச்சி செய்து, ’காஃபியில் கபின் என்ற பொருள் இருக்கிறது, இந்த ’கபின்’, தசை தளர்ச்சிகளை தடுத்து நிறுத்துகிறது’ என்று கண்டுபிடித்து சொல்லி இருக்கிறார்கள். வயது ஆக ஆக உடல் தளர்ச்சி அடையும்போது, காஃபியை பருகுவதால் உடல் தளர்சி நீங்கும் என்றார்கள். அதேபோல ’காஃபி கோவென்ட்ரி பல்கலைக்கழகத்தின் ஸ்போர்ட்ஸ் சயின்டிஸ்டு’கள் ஒரு தகவலை சொல்கிறார்கள். ’காஃபி, தசைபகுதியின் தளர்ச்சியை தடுக்கிறது. ஆனால் நிரந்தர தீர்வு இல்லை. உடல் தளர்ச்சி ஏற்பட்டால் மட்டுமே அந்த நேரத்தில் பலன் தரும்’ என்கிறார்கள். அதனால், ’வயதானவர்களுக்கு உடலில் தசைதளர்ச்சி ஏற்படாமல் இருக்க காஃபி சாப்பிடலாம்’ என்றும் சொல்லி இருக்கிறார்கள்.
வயதானவர்களுக்கு காஃபி உடலுக்கு சக்தி தரும் பானமாக அமைந்திருக்கிறது என்பது தெம்பு தரக்கூடிய செய்தி.
காஃபி கொட்டையை வாங்கி அரைத்து சாப்பிட்டால், நிச்சயம் உடலுக்கு எந்த கெடுதலும் வராது என்றும் நமது பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved