காய் – கனிகள் – புகை – நெருப்பு – மலை இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்
பழங்களை கனவில் கண்டால் என்ன பலன்
பழங்களை கனவில் கண்டால், சுபநிகழ்ச்சிகள் நடக்கும். லாபகரமான விஷயங்கள் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். நல்ல நிலைக்கு வரும் நேரம் வெகுதொலைவில் இல்லை என்பதை உணர்வீர்கள்.
பழங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது போல கனவு கண்டால், உங்கள் சந்தோஷத்தை பங்கு போடவே யாராவது வருவார்கள். எடுக்கும் முயற்சியில் பின்னடைவுகள் உண்டாகும். பண விஷயத்தில் ஏற்ற தாழ்வு ஏற்படும் சண்டை சச்சரவுக்கு போகாமல் இருந்தாலும் உங்களிடம் வீண் சண்டை போடவே சிலர் வருவார்கள்.
காய்களை நறுக்கவது போல கனவு கண்டால், மனதில் இத்தனை நாட்கள் வாட்டி எடுத்துக்கொண்டிருந்த சங்கடங்களும், பிரச்சனைகளும் விலகும். பெரியோர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும்.
மலையை கனவில் கண்டால் என்ன பலன்
மலை ஏறுவது போல கனவு கண்டால், சாதிக்கும் காலம் இது என உணர்ந்து, முயற்சிகளை செய்து வெற்றியும் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடல் நலம் சுகம் ஏற்படும்.
மலையில் இருந்து விழுவது போல கனவு கண்டால், ஏதோ பெரிய ஆபத்து உங்களை நெருங்கி வருவதாக அர்த்தம். எச்சரிக்கையாகவும், புத்திசாலிதனத்துடனும் நடந்து கொண்டால் பாதகத்தில் இருந்து தப்பிக்கலாம்.
மலையை உடைப்பது போல கனவு கண்டால், பிரச்சனைகள் எல்லாம் தவிடுபொடியாகும். நிலையான அந்தஸ்துக்கு வருவீர்கள். உங்கள் செயலில் மந்த நிலை விலகி சுறுசுறுப்பு உண்டாகும்.
புகை கனவில் வந்தால் என்ன பலன்
வீட்டில் சாம்பிரானி புகை போடுவது போல கனவு கண்டால், இல்லத்தில் கஷ்டங்கள் விலகும். தொழில் துறையில் இருந்த கடன்களை அகற்ற நல்ல வழிகள் கிடைக்கும். புதிய நட்பால் மேன்மையும் பழைய நட்பால் சங்கடங்களும் மாறி மாறி ஏற்படும்.
சிகரேட் பிடிப்பது போல கனவு கண்டால், மனதில் நீண்ட காலமாக இருந்த கவலை விலகும். பிரியமானவ்ர்களின் மனசங்கடத்திற்கு ஆளவீர்கள். சுறுசுறுப்பு குறையும்.
நெருப்பு கனவில் வந்தால் என்ன பலன்
நெருப்பு உங்களை சுற்றி எரிவது போல கனவு கண்டால், உடல் பலவீனத்தால் அவதிப்பட்டு இருப்பவர்கள் அந்த பலவீனம் இருக்கும் இடம் தெரியாமல் உங்கள் உடலுக்கு புதிய தெம்பும் பலமும் கிடைக்கும். உங்கள் செயலுக்கு யாராவது இடைஞ்சல் செய்து கொண்டு இருந்தால், இனி அவர்களால் தொல்லைகள் இருக்காது.
நெருப்பை பற்ற வைப்பது போல கனவு கண்டால், முன் கோபத்தால் பெரிய வாய்ப்பை நழுவவிடுவீர்கள். ஆகவே எதற்கும் கோபப்படாமல நிதானமாக சிந்தித்து பேசுவது நல்லது. எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் இருந்தால் லாபத்தை சம்பாதிப்பீர்கள்.
பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும். மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும். விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும். ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம்.
சிலருக்கு கனவு கண்ட சில நாட்களிலேயே பலிக்கும். நல்ல கனவு கண்டால் மகிழ்ச்சி அடைவோம். அதுவே எதிர்மாறான கனவு கண்டால் அந்த கனவை நினைத்து நினைத்தே வேதனைப்படுவர்களும் இருப்பார்கள். அப்படி தீய கனவை கண்டவர்கள் இறைவனை நம்பிக்கையுடன் வணங்கினால் தீய கனவுகளும் வெறும் கனவாகவே ஆகிவிடும். மொத்தத்தில் “இறைவன் ஒருவனே மிக பெரியவன்”. அவனையே முழு மனதுடன் நம்பினால் சங்கடங்கள் விலகி வாழ்நாள் முழுவதும் எதிலும் சாதிக்கலாம் – புகழ் பெறலாம்.
ஒவ்வொரு கனவுகளின் பலன்களை படிக்க கிளிக் செய்யவும்
கனவுகளின்பலன்கள்வீடியோ– DREAMS PREDICTION Video click here
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved