கனவுகளின் பலன்கள்
கனவு காணுங்கள் அது நிச்சயம் ஒருநாள் நிறைவேறும் என்றார் திரு.அப்துல்கலாம் அவர்கள். நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்.
நமது ஆழ் மனம் எதை நினைக்கிறதோ அதுவே கனவாக வருகிறது. அந்த கனவே நிஜமாகிறது. புழு, குளவியை நினைத்து கொண்டே இருந்தால் புழுவுக்கும் குளவி குணம் வந்துவிடும் என்றார் ஸ்ரீராமாகிருஷ்ண பரமஹம்சர்.
கண்ணகி ஒரு கனவு கண்டு அதிர்ச்சியடைகிறாள். தான் கண்ட கனவை தன் தோழியிடம் கூறுகிறாள்.
“நானும் என் கணவரும் வேறு ஊருக்கு செல்கிறோம். அந்த நாட்டின் அரசர் என் கணவரை கள்வன் என்று கூறி கொன்று விடுகிறார்.” என்று, தான் கண்ட கனவை பற்றி தோழியிடம் கூறினாள் கண்ணகி.
அதேபோல அம்பிகாபதியின் தந்தை கம்பர் ஒருசமயம், இரவு நேரத்தில் காட்டு வழியாக போய் கொண்டு இருந்தார். அந்த காட்டில் ஒரு காளி கோவில் இருந்தது. அந்த காளிதேவி சிலைக்கு பூதங்கள் பூஜை செய்து கொண்டிருந்தது. இந்த காட்சியை மறைந்திருந்து பார்த்து கொண்டு இருந்தார் அம்பிகாபதியின் தந்தை.
அப்போது ஒரு பூதம் காளிதேவிக்கு படைப்பதற்காக பிரசாதத்தை தயார் செய்து கொண்டு வந்தது. இதை கண்ட மற்றோரு பூதம் காளிதேவிக்கு படைக்கும் முன்பே அந்த பிரசாதத்தை ருசி பார்த்தது. இதனால் கோபம் அடைந்த வேறோரு பூதம் பிரசாதத்தை ருசி பார்த்த பூதத்தின் கையை வெட்டியது.
இதை தூரத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த கம்பர், “அட…என்ன ஆச்சரியம் இது. பூத கணங்களுக்கு கூட இவ்வளவு பக்தியா?” என்று தன் இல்லத்தை நோக்கி காட்டில் நடந்த நிகழ்ச்சியை நினைத்த படி நடந்தார்.
அப்போது அவருக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. ஒரு பூதம் மற்ற பூதத்தை எந்த ஆயுதத்தால் வெட்டியது? அந்த ஆயுதத்தின் பெயர் என்ன? என்று சிந்தனையிலேயே தன் வீட்டின் கதவை தட்டினார்.
அப்போது, நல்ல தூக்க கலக்கத்தில் இருந்த. மகன் அம்பிகாபதி, கதவை திறந்து ‘அந்த ஆயுதம் கேள்வி குறியை போல இருக்கும். அவ்வாயுதத்தின் பெயர் கோடாரி.’ என்று தூக்க கலக்கத்திலேயே பதில் கூறினான்.
இதை சற்றும் எதிர்பாராத அம்பிகாபதியின் தந்தை, “எங்கோ நடந்த சம்பவங்களை இங்கிருந்தபடியே கனவில் கண்டு சொல்கிறானே அம்பிகாபதி“ என்று ஆச்சரியம் அடைந்தார்.
இப்படி சிலருக்கு முன்கூட்டியே வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் கனவில் தோன்றிவிடும்.
பொதுவாகவே இரவு ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடத்திற்குள் பலன் கிடைக்கும். இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்திற்குள் பலன் கிடைக்கும். மூன்று மணிக்கு கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் பலன் கிடைக்கும். விடியற்காலையில் கனவு கண்டால் உடனே பலிக்கும். ஆனால் பகல் கனவு பலிக்காது என்கிறது கனவு சாஸ்திரம்.
கனவுகளின்பலன்கள்வீடியோ– DREAMS PREDICTION Video click here
களைப்பாகவும் – பயணம் – தண்ணீர் இவைகள் கனவில் கண்டால் என்ன பலன்?
இரும்பு – இறந்து போனவர்கள்-துணி இவை கனவில் வந்தால் என்னபலன்?
மிருகங்கள் – யானை – பாம்பு இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்?
திருவிழா – இறைவனை கனவில் கண்டால் என்ன பலன்?
நீதி மன்றம்-நீதிபதி– வக்கீல் இவற்றை கனவில் கண்டால் என்ன பலன்?
மரம் செடிகள் – கயிறு – நகை இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்?
காய் – கனிகள் – புகை – நெருப்பு – மலை இவைகள் கனவில் வந்தால் என்ன பலன்?
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved