Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி – 2


சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  

ஜி. விஜயலஷ்மி  

அஜீரண கோளாறு தீர…  

1. எந்த உணவு சாப்பிட்டாலும் சிலருக்கு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். இட்லி சாப்பிட்டாலும் ஜீரணமாகவில்லை என்பார்கள். இதற்கு காரணம்  சாப்பிடும்போது தண்ணீரை குடிப்பதால்தான்.

பிறகு எப்போதுதான் தண்ணீரை குடிப்பது? என்றால் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம் அல்லது சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தலாம். சாப்பிடும் போது நடுநடுவே தண்ணீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம்,  சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய வயிற்றில் திரவம் சுரக்கும். அந்த சமயத்தில் உணவுவுடன் தண்ணீரையும் சேர்ந்து அருந்தினால் ஜீரணதன்மை பாதிக்கபடுவதால் சாப்பிட்ட உணவு ஜீரணமாகாமல் அவதிபட நேரும். அதனால் சாப்பிடும் முன்போ அல்லது சாப்பிட்ட பின்போதான் தண்ணீரை அருந்தவேண்டும்.

நல்ல ஜீரணசக்திக்கு புதினா, கருவேப்பில்லை, கொத்தமல்லி, இஞ்சி, புளி, இவையை ஒரு ஸ்பூன் நெய்யில் வறுத்து அதை அரைத்து சட்னியாக செய்து சாதத்தில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணகோளாறு தீரும்.

கொழுப்பை குறைக்க….

2. பலர் இயற்கை உணவைவிட அதிகம் சாப்பிடுவது சிப்ஸ், பீசா, போன்ற  உடலுக்கு கொழுப்பு தரும் உணவையே சாப்பிடுகிறார்கள். அசைவ உணவில் மீன் சாப்பிடுகிறவர்கள் நன்றாக எண்ணெய்யை ஊற்றி வறுத்த மீன் சாப்பிடுகிறார்கள். அது ருசியாகதான் அந்த சமயத்தில் இருக்கும் ஆனால் அது உடலுக்கு தீங்கை தந்துவிடும். இது உடலுக்கு தேவை இல்லாத கொழுப்பு சேர்ந்து விடுகிறது. எண்ணெயில் பொறித்த உணவுகள் ஆரோக்கியத்திற்கு விரோதி. கொழுப்பு குறைவதற்கு நல்ல உணவு ஓட்ஸ். தினமும் காலையில் ஓட்ஸ் சாப்பிட்டால் கொழுப்பு குறையும்.

இஞ்சி

சமைகிற உணவுகளில் இஞ்சியை பயன்படுத்தினாலும் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் குறையும்.

பூண்டு

இரண்டு பூண்டை பொடிபொடியாக நறுக்கி சூடான பாலில் ஒரு மணிநேரம் ஊற வைத்து சாப்பிட்டாலும் கொழுப்பு குறையும்.

ரத்தம் விருத்தியாக…

3. உடல் சோர்வுக்கு முக்கிய காரணம் உடல் பலவீனம். இந்த உடல் பலவீனத்திற்கு முக்கிய காரணம் இரத்தசோகை. பெண்களாக இருந்தால் உடலில் 13 கிராமுக்கு மேல் ஈமோகுளோபின் அளவு (hemoglobin) ரத்தம் இருக்க வேண்டும். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி 12  கிராமுக்கு குறைவாக ஈமோகுளோபினின் அளவு இருக்க கூடாது. அவ்வாறு ஈமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து உடல் பலவீனமாக்கிவிடும். இதற்கு இயற்கை மருத்துவத்தில் முருங்கைகீரையில் துவரம்பருப்பு சேர்த்து சாப்பிடலாம் அல்லது தேங்காய் துருவல் கலந்தும் சாப்பிடலாம். இப்படி தொடர்ந்து ஒரு மாதம் சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்தியடையும்.  தேன், அத்திபழம், திராட்சை, மாதுளை  பழம், பொட்டுகடலை போன்றைவையும் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும்.

ஜலதோஷம்

4. புதிய ஊருக்கு சென்றால் அந்த ஊரின் தண்ணீர் சில நேரத்தில் நம் உடலுக்கு ஒத்துவராமல் போகலாம். இதனால் தொண்டை அடைப்பு, சளி தொல்லை   போன்றைவை ஏற்படும். அதேபோல ஐஸ்கிரீம் சாப்பிட்டாலும் சட்டென்று தொண்டை அடைப்பு ஏற்படும். ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும். இதற்கு சுக்கு, மிளகு, பனங்கற்கண்டு இவைகளை  தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் சிறியஅளவில் பால் ஊற்றி சாப்பிட்டால் ஜலதோஷம் நீங்கும்.  தொண்டைஅடைப்பும் தீரும்.

அதேபோல சூடான தண்ணீரில் தேன் கலந்து சாப்பிட்டாலும் தொண்டை அடைப்பு தீரும்.

முகம் பளபளக்க…

5. முக பொலிவுக்கு எந்த கிரீம் தடவினால் முகம் பளபளப்பாக இருக்கும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இதற்கு  ஆலிவ் ஆயில் எண்ணெய் அல்லது பாதம் எண்ணெய் இதில் ஏதாவது ஒன்றை முகத்தில் தொடர்ந்து தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு முகம் கழுவி கொண்டால் 45 நாட்களில் முகம் பளபளப்பாக மாறும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO     

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்  

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

Posted by on Jun 29 2012. Filed under Photo Gallery, மருத்துவம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »