அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி–1
ஜி. விஜயலஷ்மி
1 . உஷ்ணத்தால் உடல் அதிக உஷ்ணதன்மையடையும். இதற்கு மருந்து, தொப்புளில் விளக்கெண்னை அல்லது நாமகட்டியை தடவலாம். அதேபோல வெந்தயத்தை இரவில் ஊர வைத்துவிட்டு, காலையில் அந்த வெந்தயத்தையும் அந்த தண்ணீரையும் மோரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுவலி நீங்கும். அல்லது இளநீரிலும் ஊறிய வெந்தயத்தை கலந்து குடித்தால் வயிற்றில் இருக்கும் உஷ்ணம் நீங்கும்.
2. இப்போதெல்லாம் பெரும்பாலன வீடுகளில் கம்ப்யூட்டர் இருக்கிறது. டி.வி பார்ப்பதைவிட கணிணியைதான் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகிக்கிறார்கள். இப்படி அதிக நேரம் கணிணியை பார்த்து கொண்டே இருப்பதால் கண் சூடாகி விடுகிறது. இதனால் கண்களுக்கு கீழே கருப்பு வலையமும் வர வாய்ப்பு உள்ளது. இதை தடுக்கும் ஆற்றல் வெள்ளரி காய்க்கு இருக்கிறது. வெள்ளரி காயை சிறு சிறு துண்டாக வட்டமாக நறுக்கிக்கொண்டு அந்த நறுக்கிய வெள்ளரிகாயை இரண்டு கண்களில், ஐந்து நிமிடம் வைத்துகொண்டால், கருப்பு வளையம் மறையும். இதை தொடர்ந்து செய்ய வேண்டும். இன்று வைத்துவிட்டு நாளையே ஏன் கருப்பு வளையம் மறையவில்லை என்றால் அது சாத்தியம் ஆகாது. பொறுமையாக இதை கடைபிடித்து வந்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.
3. மீன் சாப்பிட்டால் உடலில் இருக்கும் தேவையில்லாத கொழுப்பை குறைக்கும். மீனில் ஒமேக 3 இருக்கிறது. இதனால் ரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலையும் குறைக்கும். அத்துடன் இருதய நோயும் நீங்கும். ஆனால் மீனை எண்ணெயில் வறுத்து சாப்பிடுவதை விட, குழம்பில் செய்து சாப்பிட்டால் உடலுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
4. தொண்டையில் புண் ஏற்பட்டால் இதற்கு இயற்கை மருந்து ஆரஞ்சு சாருதான். இதை தொடர்ந்து சிறிய அளவு குடித்து வந்தால் தொண்டையில் இருக்கும் புண் ஆறும். தொண்டைவரட்சியும் நீங்கும்.
5. தொண்டை புண், நெஞ்சு எரிச்சல், வயிற்று புண் போன்றவற்றுக்கு அன்னாசி பழம் சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்புகள் தீரும். பொதுவாக காலை உணவை சரியான நேரத்தில் யாரும் சாப்பிடுவது இல்லை. அதேபோல இரவு உணவையும் சரியாக எட்டு மணியில் இருந்த ஓன்பது மணிக்குள் சாப்பிட வேண்டும். ஆனால் இதை சிலர் கடைபிடிப்பதில்லை. இதனால் வயிற்று உபாதை ஏற்படுகிறது. இதனால் எதை சாப்பிட்டாலும் ஜீரணமாகாமல் அவதிபடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அன்னாசி பழத்தை சர்க்கரையில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால், வயிற்று கோளாறுகள் தீரும். ஆனால் நீரிழிவு உள்ளவர்கள், சர்க்கரையில் ஊற வைத்த அன்னாச்சி பழத்தை சாப்பிட கூடாது.
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved