Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

சனிஸ்வரால் வரும் தொல்லைகள் தீர்க்கும் அனுமார் லிங்கம்

நிரஞ்சனா

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் உள்ள அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில்

வெற்றிக்கு முக்கிய தேவை சஞ்சலம் இல்லாத மனநிலை. மன நிம்மதி இருந்தால் எதிலும் வெற்றி கிட்டும். அந்த மன அமைதியை தர கூடியது பக்தி. அதனால்தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்னார்கள். எங்கெல்லாம் தெய்வம் இருக்கிறதோ அங்கெல்லாம் அமைதி இருக்கும். அமைதி இருக்கும் இடத்தில் தெய்வம் இருக்கும். அந்த இடத்தில் வாழும் மக்களுக்கும் தெய்வம் மகிழ்ச்சியை தரும்.

கோயில் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனை பார்க்கும் போது, நாம் நம் தாயின் கருவறையில் இருந்த பாதுகாப்பையும், எந்த மனகவலையும் இல்லாமல் அமைதியாக நிம்மதியாக எப்படி இருந்தோமோ அந்த பேரானந்தத்தை தருகிறது கோயிலில் தெய்வ தரிசனம்.

பணம் இருந்தால் நிம்மதி தேடி வரும் என்று சிலரின் கருத்து. Born with silver spoon என்பார்களே, அப்படி பணக்கார சீமான்களின் வாழ்க்கையை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு அவர்களுக்கு என்ன குறைச்சல்? என நமக்கு தோன்றும், ஆனால் உண்மையில் அவர்களின் பிரச்சனைகளை  விட நமது பிரச்சனை எவ்வளவோ பரவாயில்லை என்று நினைக்க தோன்றும் அளவுக்கு ஏதேதோ பல துன்பங்கள் அவர்களின் மனதில் இருக்கும். அவர்களின் வீடு எந்த அளவுக்கு பெரியதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்களின் மனகவலைகளும் பெரியதாக இருக்கும். புராணங்களில் இருந்து இன்றுவரை இதுதான் நிஜம். 

அரச குடும்பத்தில் பிறந்தவர்தான் ஸ்ரீராமர். இருந்தும் அவருக்கு நிம்மதி இருந்ததா? விதி இவருடைய வாழ்வில் கூனி வடிவிலும் இராவணன் வடிவிலும் விளையாடியது. எந்த வம்புதும்புக்கும் போகாத ஸ்ரீராமர் கூனியின் சதியால் காட்டில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஸ்ரீஇராமருக்கு கூனி நிம்மதியை கெடுத்தாள் என்றால், பாரதத்தில் பாண்டவர்களின் நிம்மதியை சகுனி கெடுத்தார்.

இராமயணத்தில் ஸ்ரீஇராமரும் சரி, மகாபாரதத்தில் பாண்டவர்களும் சரி வனவாசத்திலாவது நிம்மதியாக இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை.

இதில் ஸ்ரீஇராமர் வனவாசத்தின் போது, அங்கிருந்தும் விதி அவரை துரத்தியது. இராவணன் சீதையை கடத்தி சென்றதால், சீதையை தேடி அலைந்தார். ஆனால் அன்பும் பொறுமையும் கொண்ட ஸ்ரீஇராமரின் குணத்தால் பல நல்லோர்களின் நட்பு அவருக்கு கிடைத்து, அவரிகளின் துணைகொண்டு போராடி இராவணனை கொன்று சீதையை மீட்டார்.

இதன் பிறகும் நிம்மதியாக இருந்தாரா என்றால் அதுவும் இலலை. நல்லவனோ தீயவனோ ஆனால் ஒருவனை கொன்றால் தண்டனை உண்டல்லவா? ஸ்ரீஇராமருக்கு தண்டனை கிடைத்தது. அந்த தண்டனைதான் பிரம்மஹத்தி.

அனுமார் கொண்டு வந்த காசி சிவலிங்கம்

பிரம்மஹத்தி தோஷம் தீர பல ஸ்தலங்களுக்கு சென்று வந்தார் ஸ்ரீஇராமர். இப்படி பல புண்ணி தலங்களுக்கு சென்றுவரும் வழியில் ஏதோ ஒரு நிழல் தன்னை பின்தொடர்வதாக நினைத்தார். அதனால் திரும்பி பார்த்தார். அதே பிரம்மஹத்திதான் பின்தொடர்ந்து வந்தது. ஆனாலும் அதிர்ஷ்டவசமாக அங்கு ஒரு வில்வமரத்தை கண்டார் ஸ்ரீஇராமர். சிவபெருமானுக்கு விருப்பமான அந்த வில்வமரத்தின் கீழ் ஒரு சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தால் எந்த தோஷங்களும் நம்மை பின் தொடராது என்று ராமரின் மனதில் பட்டது. அதனால் தன்னுடன் வந்த அனுமனிடம், “நீ காசிக்கு சென்று ஒரு சிவலிங்கத்தை கொண்டு வா.” என்றார்.  

ஸ்ரீஆஞ்சநேயரும் காசிக்கு சென்றார். சென்றவர் பல மணி நேரங்கள் ஆகியும் திரும்பி வராததால், ஸ்ரீராமர் சீதையிடம் “சிவ பூஜையை தாமதப்படுத்தக் கூடாது.“ என்றார். இதை கேட்ட சீதையும், லட்சுமணனும் ஸ்ரீஇராமரின் துணையோடு மணலால் லிங்கம் செய்தார்கள். அவர்கள் 107-வது சிவலிங்கத்தை செய்து வைக்கும் போது, அனுமன், காசியில் இருந்து சிவலிங்கத்தோடு வந்துவிட்டார்.

தாம் வருவதற்குள் ஸ்ரீஇராமர், சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்து கொண்டு இருப்பதை கண்டு கோபம் அடைந்தார். இலங்கையை தன் வாலால் தீக்கு இரையாக்கியது போல, 107 லிங்கத்தையும் தூக்கி வீச முயன்றார். ஆனால் அனுமனால் முடியவில்லை. காரணம் சிவலிங்கத்தை ஸ்ரீராமரும், சீதாதேவியும், லட்சுமணனும் உருவாக்கியதால் அனுமனின் வால் அறுபட்டது.

பிறகு தன் தவறை உணர்ந்து அனுமன், ஸ்ரீராமரிடம் மன்னிப்பு கோரினார். ஆனால் ஸ்ரீஇராமருக்கோ அனுமனின் மீது எந்த கோபமும் இல்லை. இதனால் அனுமனின் அறுபட்ட வால் மீண்டும் ஒட்டிக்கொள்ள அருள்பாலித்தார்.

காசியில் இருந்த சிவலிங்கத்தை ஸ்ரீஆஞ்சநேயர் பக்தியுடன் கொண்டு வந்ததால் ஸ்ரீஇராமர், 108-வது லிங்கமாக பூஜித்தார். இதன் பிறகு ஸ்ரீஇராமரை பின் தொடர்ந்த பிரம்மஹத்திதோஷம் முற்றிலுமாக விலகியது.

“இந்த ஸ்தலத்திற்கு வரும் பக்தர்கள், நீ கொண்டு வந்த காசிலிங்கத்தை பூஜை செய்தால், அவர்களுடைய தோஷங்கள் விலகும். அவர்களுடைய பாபங்களும் நாசமாகும். பக்தர்களின் வாழ்க்கை சுபிட்சம் பெறும்.” என்று ஸ்ரீஇராமர் அனுமனிடம் கூறினார்.

இந்த தலம், ஸ்ரீராமர் பூஜித்த தலம் ஆகையால்  “ராமலிங்கசுவாமி கோயில்” என  அழைக்கப்படுகிறது..

சனிஸ்வரால் வரும் பாதிப்புகள் நீக்கும் அனுமார் லிங்கம்

காசியில் இருந்து ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை கொண்டு வந்ததால், “ஸ்ரீஅனுமார் லிங்கம்” என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக சிவபெருமானை வணங்கினால் சனிதோஷம் நீங்கும். அத்துடன் அனுமார், தன் கரங்களால் காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்ததால், இந்த ஆலயத்தில் சிவபூஜை செய்தால் சனிஸ்வரரால் வரும் தொல்லைகள் நீங்கும். அத்துடன் சனிஸ்வரருக்கு எள் சாதத்தை நைவேதியமாக வைத்து வணங்கினால், சனிஸ்வரரால் வரும்  பாதிப்புகள் குறையும். ஏழரைசனி – அஷ்டமசனி –அர்தாஷ்டம சனி போன்ற சனிபகவானால் அவதிப்படுபவர்கள், இங்கு சனி பகவானுக்கு எட்டு சனிகிழமையில் இரண்டு எள் தீபம் ஏற்றினால், அவர்களுக்கு அனுமாரின் ஆசியும், ஸ்ரீ ராமலிங்கசுவாமியின் அருளும் கிடைத்து பாக்கியங்களை பெறுவார்கள்.

108 லிங்கத்தை வணங்குபவர்களுக்கு ஜாதகதோஷங்களும், தெரிந்தோ தெரியாமல் செய்த பாவங்களும் விலகும்.

ஸ்ரீ ராமலிங்கசுவாமியையும் – ஸ்ரீபர்வதவர்தினியையும் வணங்கினால்  சகலவளமோடும் நலமோடும் வாழ்வார்கள். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserve

Posted by on Jun 11 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »