Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

நீரிழிவு கட்டுப்படுத்தும் சிறுகீரை

Read This Article in ENGLISH

நிரஞ்சனா

நோய் இல்லாமல் வாழ்வது என்பது இந்த காலத்தில் நடக்குமா என்றால் சந்தேகமே. அவசர உலகத்தில் எல்லாமே அவசரமாகதான் நடக்க வேண்டும். நடையிலும் சரி, செயலிலும் சரி இதனால் பெரியோர்கள் மட்டும் அல்லாமல் குழந்தைகளும் உடலளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதிக டென்ஷன்தான் வியாதிகளுக்கு முதல் படியாக இருக்கிறது. இந்த மனஉலைச்சல்தான் இரத்தகொதிப்பு, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.  

 இந்த நீரிழிவு நோய், பெரியவர்களையும் மட்டும் அல்லாமல், இன்று குழந்தைகளையும் பாதிக்கிறது. இதற்கு காரணம் உணவு பழக்கம் என்றாலும், முதலில் மன அழுத்தம்தான் காரணமாகிறது. இதை சரியாக தெரிந்து கொள்ளாத சிலர், “கட்டுபாடுடன் சாப்பிடும் எங்களுக்கு எப்படி நீரிழிவு நோய் வந்தது.?” என்று கேட்கிறார்கள்.  மருத்துவரிடம் கேட்டால், “உங்கள் பரம்பரையில்  யாருக்காவது  சர்க்கரை வியாதி இருக்கிறதா என்றும், அல்லது மனஉலைச்சல் அதிகமானால் இருதய பாதிப்பு தவிர, நீரிழிவு  நோயும் வர வாய்ப்பிருப்பதால், உங்களுக்கு சர்க்கரை நோய் வந்ததற்கு இந்த இரண்டில் ஏதாவது ஒரு காரணம் இருக்கலாம்” என்பார்கள். 

 சர்க்கரைவியாதி வந்துவிட்டால் மருத்துவர் சொல்வது போல் மருந்துகளை சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். அத்துடன் உணவு கட்டுப்பாடும், சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதும் அவசியம்.

சிறுகீரை

ஆரோக்கிய உணவுக்கு கீரைகள் மிக முக்கிய இடம் பிடிக்கிறது. கீரை உணவுகள்தான் எல்லா நோய்களுக்கும் மருந்தாக இருக்கிறது. அதில் சிறப்பானது சிறுகீரை. மதியம் சாப்பிடும் உணவில் சிறுகீரையை ஒருநாள் விட்டு ஒருநாள் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் என்கிறது இயற்கை வைத்தியம்.

சிறுகீரை, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். பாதிப்படைந்த கணையச் சுரப்பியை மீண்டும் உயிர்பித்து செயல்பட வைத்து இன்சுலின் மிகுதியாக சுரக்க உதவுகிறது.

நாம் சாப்பிடும் உணவுகளில் சில வகை உணவுகள் நச்சுத் தன்மை உண்டாகி (Food Poison) பாதிப்பை தரும். “எதனால் இப்படி ஆனது? தினமும் சாப்பிடும் உணவுதானே” என்ற சந்தேகம் மனதில் எழும். என்ன செய்வது? நேற்று போல இன்று இல்லை, இன்று போல நாளை இருக்குமா என்றால் எப்படி சொல்ல முடியும்? எதுவும் மாறும். வாழ்க்கை மட்டுமல்ல உடல்வாகும் அப்படிதான். இப்படி நஞ்சுத்தன்மையை உடலில் இருந்து எடுக்கும் சக்தி சீறுகீரைக்கு இருக்கிறது.

 அதேபோல மலசிக்கலுக்கு பல  மருந்துகள் இருந்தாலும், இயற்கை மருந்தாக சிறுகீரை செயல்படுகிறது. சிறுகீரையை சாப்பிட்டு வந்தால் மலசிக்கலே வராது. மலசிக்கல் இல்லாமல் இருந்தாலே வியாதிகள் நம் உடலில் அண்டாது. மலசிக்கல்தான் உடலுக்குள் பல சிக்கல்களை தூண்டிவிடுகிறது.

 சிறுகீரையை ஒருநாள் விட்டு ஒருநாள் இப்படி தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிடலாம் அல்லது சூப்பாக வைத்தும் சாப்பிட்டு வந்தால் நிச்சயமாக அவர்களுக்கு சர்க்கரை கட்டுபாட்டுக்குள் வரும் என்பதை ரத்தத்தை பரிசோதித்து பார்த்தாலே தெரியும்.

 சிறுகீரையை எப்படி சமைக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். தெரியாதவர்கள் தெரிந்துக் கொள்ளுங்கள். சிறுகீரையை காம்புடன் கிள்ளி, அதை பொடி பொடியாக நறுக்கிக் கொண்டு, அதில் இருக்கும் மண் போகும் அளவுக்கு நன்றாக தண்ணீரில் அலசிவிட்டு, சமைக்க வேண்டும். சமையலில், துவரம் பருப்பு, இஞ்சி, பூண்டு, வெங்காயம், மிளகு-சீரகம் போட்டு, நெய்யில் நன்றாக வதக்கி, அதில் சிறுகீரை சேர்ந்து வதக்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் ஊற்றாமல் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சமைத்து சாப்பிட்டால், நிச்சயம் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் வரும். சர்க்கரை வியாதி இல்லாதவர்களும் சிறுகீரை சாப்பிடலாம். இதனால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்கும். இயற்கை அன்னையின் அற்புத மருந்து சிறுகீரை.

Read This Article in ENGLISH

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserve

Posted by on Jun 20 2012. Filed under மருத்துவம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »