Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு- பகுதி – 1

நிரஞ்சனா

மனிதர்களில் யாருக்கு முதல் மதிப்பும் – மரியாதையும் என்று பார்த்தால்  செல்வந்தர்களுக்கே அவை தரப்படுகிறது. “பணம் பாதாளம் வரை பாயும், பணம் உள்ள மனிதர்களுக்கு வருவதெல்லாம் சொந்தம், பணம் இல்லாத மனிதர்களுக்கு சொந்தம் எல்லாம் அந்நியர்கள்;” என்று இன்னும் இன்னும் எத்தனையோ அனுபவஸ்தர்களின் அனுபவங்கள் நமக்கு தத்துவங்களாக கிடைக்கிறது. பணம் இருந்தால் போதும் குணம், ஒழுக்கம் எல்லாம் அநாவசியம் என்றாகிவிட்டது.  நாங்கள் குணத்தை பார்த்துதான் மதிப்பு தருவோம், பணத்தை பார்த்து அல்ல“ என்று பலர் கூறுவார்கள்.

ஆனால் இப்படி சொல்பவர்களே இதை நடைமுறை வாழ்வில் கடைபிடிக்கிறார்களா என்றால் நிச்சயம் இரண்டு சதவிதம் கூட இருக்காது. நல்ல குணத்தோடு பல மனிதர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் வாழ்ந்த போது, அவர்கள் பொருளாதர வசதி இல்லாதவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் உயிருடன் இருந்த காலத்தில் மரியாதை இல்லாமல் போனார்கள். எங்கே நம்மிடம் பண உதவி கேட்பார்களோ என்று பயந்து, அந்த நல்லோரின் திசையை கூட பலர் எட்டி பார்த்ததில்லை என்பதை அவர்களின் சுயசரித்திர புத்தகங்களை படிக்கும்போது தெரிகிறது.

பணம், வாழ்க்கையின் ஒரு அங்கம் என்ற நிலை மாறி,பணமே வாழ்க்கை என்றாகிவிட்டது. நல்ல குடிநீர் கூட பணம் இருந்தால்தான் கிடைக்கும். போதும் போதும் என்று, சாப்பிடும்போது மட்டும்தான் மனிதர்கள் சொல்வார்கள் என்பார்கள். ஆனால் போதும் போதும் என்று சாப்பிடும்போது சொன்ன அதே வாய்தான் அடுத்த வேளை சாப்பாடு “வேண்டும்” என்கிறது. வயிறும் புத்தியும் ஒரே மாதிரிதான் போதும் என்று ஒரு நேரத்தில் சொல்லும், மறுநேரம் சொன்ன வாக்கை காப்பாற்றாது.

இப்படி எங்கும் பணத்தை எதிர்பார்க்கும் உலகத்தில், அந்த பணத்தை சம்பாதிக்க 24 மணி நேரம் உழைத்தாலும் போதாது என்றளவில் செலவுகள் உருவாகிறது. அது மருத்துவ செலவாகவும் இருக்கலாம், குழந்தைகளின் படிப்பு செலவாக இருக்கலாம், திருமணம், வீடு – மனை -வாகனம் வாங்கும் செலவாகவும் இருக்கலாம். செலவு என்பதும் தும்மலைபோல  திடீர் என்றுதான் வரும்.

இதனால் வட்டியை பற்றி கவலைபடாமல் கடன் வாங்குவார்கள். இப்படி அவசரத்திற்கு கடன் வாங்கும் நிலை நமக்கு மட்டுமல்ல, திருப்பதி வெங்கடாசலபதியே குபேரரிடம் கடன் வாங்கினார் என்பது தெரிந்த விஷயம்தான். அள்ளி தரும் ஆண்டவனுக்கே கடன் தரும் அளவுக்கு குபேரர் செல்வந்தராக இருக்கிறார் என்றால் அவர் மகா பாக்கியசாலி அல்லவா.

ஒருவர் பணக்காரராக இருந்தால் அவர் எப்படி பணக்காரர் ஆனார்? என்று தெரிந்துக் கொள்ள ஆர்வம் இருக்கும் இல்லையா? அதுபோல கோடிஸ்வரரான குபேரர் கதையையும் தெரிந்துக் கொள்வோம். எப்படி குபேரருக்கு இந்த அளவுக்கு செல்வம் வந்தது? யார் இந்த குபேரர்? என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம்.

அத்துடன் கோடான கோடி செல்வங்களை அள்ளி தரும் குபேரரை எப்படி பூஜை செய்து வணங்க வேண்டும்? என்பதை பற்றியும் தெரிந்துக் கொள்வோம்.

குபேரர்  

பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியர் என்பவருக்கு பிறந்தவர்  விஸ்ரவா. இவருக்கு  இரண்டு மனைவியர். முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் குபேரர். விஸ்ரவாவின் இரண்டாவது மனைவி அசுரகுலத்தில் பிறந்தவள். இவளுக்கு பிறந்த குழந்தைகள்    இராவணன், கும்பகர்ணன், விபீஷணன், கும்பாஷினி மற்றும் சூர்ப்பணகை.

குபேரர் இலங்கைக்கு அதிபதியாக இருந்தார். குபேரரின் ஆடம்பர வாழ்க்கை இராவணனின் கண்களை உறுத்தியது.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்   

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserve

 

 

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »