லட்சியங்களை நிறைவேற்றும் திருப்பூவனநாதர் பகுதி-2 தொடர்ச்சி…..
சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்
நிரஞ்சனா
திருப்பூவணம் என்று பெயர் வந்த காரணம்
லஷ்மி தேவியும் விஷ்ணுபகவானும் ஒரு முனிவரின் சாபத்தால் பன்னிரெண்டு ஆண்டுகள் பிரிந்திருந்தார்கள். மீண்டும் அவர்கள் ஒன்று சேர, இருவரும் ஒரு பூ வனத்தில் இறைவனை வணங்கி தவம் செய்து முனிவரின் சாபத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் ஒன்று சேர்ந்தார்கள். அதனால்தான் திருமகளின் “திரு” என்ற பெயருடன் “பூவனம்” என்ற பெயரும் இணைந்து இறைவன் திருப்பூவணநாதர் என்று இறைவன் அழைக்கப்பெற்றார்.
அரசரின் வியப்பு
அதுபோல இன்னொரு சம்பவமும் உண்டு. தர்மயக்ஞன் என்ற அரசர் இருந்தார். அவர் தன் தந்தையின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைக்க நினைத்தார். அதனால் காசியில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் களைப்பாக இருந்ததால், தன் காவலர்களுடன் ஒரு சிவாலயத்தின் அருகில் தங்கினார். அப்போது அஸ்தியில் இருந்து நறுமனம் வீசியது. அதனால் அஸ்தி கலசத்தை திறந்து பார்த்த அரசர் வியப்படைந்தார். காரணம், அஸ்தி அனைத்தும் பூக்களாக மாறி இருந்தது. இதை தன் காவலர்களிடம் கூறி, “யார் இந்த அஸ்தியை எடுத்துவிட்டு பூக்களை போட்டு வைத்தது?“ என்று கேள்வி எழுப்பினார். இதை கேட்ட காவலர்கள், “அரசே.. நாங்கள் துங்காமல் விழித்துக்கொண்டே தான் இருந்தோம். யாரும் அஸ்தி கலசத்தை தொடவில்லை. எப்படி இது நடந்தது என தெரியவில்லை அரசே” என்றார்கள்.
அதை கேட்ட அரசர் நம்பவில்லை. “யாரோதான் இப்படி செய்திருக்கிறார்கள். வந்தது யார் என்று கூட தெரியாமல், நீங்கள் காவல் காக்கம் லட்சணம் நன்றாக இருக்கிறது“ என்று சினம் கொண்டார். இருந்தாலும் ரமேஸ்வரத்திற்கு சென்று அஸ்தியை கரைக்க வேண்டும் என்று முடிவு செய்ததால், அஸ்தி கலசத்தில் இருக்கும் பூக்களையாவது ராமேஸ்வரத்தில் கரைக்கலாம் என்று அரைமனதுடன் புறப்பட்டார்.
ராமேஸ்வரத்தை அடைந்தவுடன் அஸ்தி கலசத்தை திறந்து பார்த்தபோது, பூக்கள் எதுவும் இல்லாமல் அரசரின் தந்தையின் அஸ்தி மட்டும் இருப்பதை கண்ட அரசர் திகைத்தார்.
சிவாலயம் இருக்கும் இடத்தில் ஏதோ தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்தார். அது உண்மையா? என்பதை அறிய மீண்டும் சிவாலயம் இருக்கும் பகுதிக்கு அஸ்தி கலசத்துடன் திரும்பி வந்தார்.
மீண்டும் அதே இடத்தில் கலசத்தை திறந்து பார்த்தபோது, கலசத்தில் அஸ்தி இல்லை. அழகிய வாசனை பூக்கள் மட்டுமே இருப்பதை கண்டார் அரசர். இதன் பிறகு அங்குள்ள இறைவனுக்கு “பூவணநாதர்” என்று பெயர் ஏற்பட்டது.
இந்த இடத்தில் பித்ருக்களுக்கு பூஜை செய்தால் அவர்களின் ஆத்மா சாந்தியாகும், பூவணநாதர், அந்த ஆத்மாக்களுக்கு மோட்சத்தை தருவார் என்பதை உணர்ந்த அரசர்,. வைகை ஆற்றிலேயே அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் ஏற்றினார். அதனால் இன்றுவரை இந்த இடத்தில் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடைய மோச்சதீபம் ஏற்றுகிறார்கள் பக்தர்கள்.
திருஞான சம்பந்தருக்காக நந்தியை விலக சொன்ன இறைவன்
நந்தனாருக்காக நந்தியை இறைவன் விலகி நிற்க சொன்னதுபோல், திருஞான சம்பந்தருக்காகவும் சிவபெருமான், நந்தியம் பெருமானை விலகி நிற்க சொன்ன கதை உங்களுக்கு தெரியுமா?
திருப்பூவணநாதர் ஆலயத்தின் நேர் எதிரே வைகை ஆற்றின் வடகரையில் அன்னை பார்வதிதேவி, சிவபெருமானை நினைத்து தவம் செய்தார். இதனால் வைகைஆற்று கரை முழுவதும் லிங்கங்களாக மாறியது.
அதனால் உண்மையான பக்தர்களின் கண்களுக்கு அன்னை பார்வதிதேவி வழிபட்ட சிவலிங்கங்கள் அந்த பக்தர்களின் கண்களுக்கு தெரியும். இதனால் சிவபெருமானை தரிசிக்க திருப்பூவணம் வந்தார் திருஞான சம்பந்தர். ஆற்று மணல் எல்லாம் சிவலிங்கமாக காட்சி கொடுத்தது.
“இறைவா இது என்ன சோதனை? எப்படி இந்த சிவலிங்கங்களின் மேல் கால் வைப்பது? ஆசையாக உன்னை தரிசிக்க வந்தால், இப்படி என் ஆசை நிராசையாக ஆனதே” என்று மனம் வருந்தியபடி வைகையாற்றின் மறுகரையில் இருந்தபடி சிவபெருமானை போற்றி பாடினார் திருஞான சம்பந்தர். இறைவனை காண முடியாதபடி நந்தி மறைத்து நின்றது. ஞான குழந்தைக்காக மனமிறங்கிய இறைவன், “நந்தியே ஞான சம்பந்தன் நம்மை காண வந்திருக்கிறான். நீ சற்று விலகி நில்.” என்று நந்தி பகவானுக்கு உத்தரவிட்டார் ஈசன்.
அந்த ஞான குழந்தைக்காக சற்றே விலகியது நந்தி. அப்போது திருஞான சம்பந்தர். “தென்திருப்பூவணமே” எனும் தேவாரப் பதிகத்தைப் பாடினார். ஞானசம்பந்தருக்காக அன்று விலகி நின்ற நந்திதேவன், இன்றுவரை இறைவனை மறைக்காமல் நமக்காகவும் சற்று விலகியே நிற்கிறார்.
நன்மை தரும் ஆலய பரிகாரம்
பிரம்ம தேவன் வழிபட்ட வைகைக்கரையில், அமாவசை அன்று மோட்ச தீபம் ஏற்றினால் பித்ரு தோஷம் நீங்கும். முன்னோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்கிறது ஸ்தல புராணம்.
திருப்பூவணநாதருக்கு வாசனை நிறைந்த மலர்களை அணிவித்தால், அவர்களுக்கு வசந்தமான வாழ்க்கை அமையும். தங்களால் முடிந்த அளவுக்கு ஆலய திருப்பணிகளுக்கு உதவினால் பொன்னனையாளின் ஆசையை நிறைவேற்றியது போல, உங்கள் நியாயமான ஆசைகளும் எதிர்பார்ப்புகளும் திருப்பூவணநாதர் நிறைவேற்றுவார்.
“ஆலயத்திற்கு செய்யும் திருப்பணி, உங்களின் வாழ்வில் ஏற்படும் நல்ல திருப்பம் இனி” என்கிற அளவுக்கு இறைவன் அருள் புரிவான். பிரிந்த கணவன்- மனைவி ஒன்று சேருவார்கள். பித்ருதோஷம் நீங்கும். சொத்து சுகங்கள் சேரும். இங்குள்ள அம்பாள்,ஸ்ரீசௌந்தரநாயகி என்கிற அழகிய மீனாள். அம்பாளை வணங்கி குங்கும அர்ச்சனை செய்தால் குலம் தழைக்கும். அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புடவை சாத்தினால் குடும்பத்தில் சுபிட்சங்கள் தடையில்லாமல் நடைபெறும். அருள்மிகு ஸ்ரீசௌந்தரநாயகியும், ஸ்ரீபுஷ்பவனேஸ்வரரும் பொன்மயமான வாழ்வை தருவார்கள்
ஓம் நம சிவாய – சிவாய நம ஓம்!
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved