கல்வியில் மேன்மை தரும் மும்பை பத்மாவதி தாயார்
நிரஞ்சனா
மும்பையில் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி என்ற வளாகத்தில் அமைந்திருக்கிறது பத்மாவதி தாயார் ஆலயம்.
கல்விக்கு சரஸ்வதிதேவி என்று எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் செல்வ வளத்தை அள்ளி தரும் மகாலஷ்மி, இங்கே கல்வி வரம் அள்ளி தரும் தெய்வமாகவும் இருக்கிறாள்.
முன்னொரு காலத்தில் பௌம்மி என்று அழைக்கப்பட்ட இடம் இன்று, பவாய் என்று அழைக்கபடுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் கிடைத்த கல்வெட்டில் இந்த இடத்தில் பத்தாம் நூற்றாண்டை சார்ந்த பத்மாவதி தாயார் கோயில் இருந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள்.
பவாய் என்ற ஏரியை உருவாக்குவதற்காக அந்த ஏரியின் இடையில் இருந்த பத்மாவதி தாயார் கோயிலை ஐ.ஐ.டி வளாகத்தில், நான்காவது நுழைவாயின் அருகே மாற்றி இருக்கிறார்கள். இந்த ஆலயத்தின் அருகேதான் பாவாய் ஏரியும் இருக்கிறது.
கல்வி தடை விலக்கும் மும்பை பத்மாவதி தாயார்
மும்பை பத்மாவதி தாயாரை வணங்கினால் கல்வி செல்வம் வளரும், கல்வி தடை விலகும். அத்துடன் கலைகளிலும் தேர்ச்சி பெறுவார்கள், இசைஞானமும் வளரும் என்கிறார்கள் மும்பை மக்கள்.
பொதுவாகவே மரங்களுக்கு என்று ஒரு தனி சிறப்புமிக்க சக்தி இருக்கிறது. உதாரணத்திற்கு, வேப்பமர நிழலில் அமர்ந்தால், உடலில் இருக்கும் நோய் கிருமிகளும், உஷ்ண தன்மையும் நீங்கும். அதேபோல, அரசமரத்தின் அடியில் அமர்ந்தால், பெண்களுக்கு கற்ப பையில் இருக்கும் பிரச்னைகள் தீரும். புளிய மரத்தின் கீழே அமர்ந்தால், உஷ்ணதன்மை ஏற்படும். மூளைக்கு பாதிப்பை உண்டாக்கும். இப்படி ஒவ்வோரு விருட்சத்திற்கும் ஒரு தனிப்பட்ட ஆற்றல் இருக்கிறது. அதேபோல பகுல் என்ற மரத்தின் கீழே அமர்ந்தாலோ அல்லது அந்த மரத்தை சுற்றினாலோ மனம் அமைதி பெறும். மனதில் உற்சாகம் தோன்றும்.
இதை உணர்ந்துதான் என்னவோ உலக புகழ்பெற்ற கர்நாடக இசை மேதை மறைந்த எம். எஸ் சுப்புலஷ்மி அவர்கள் இந்த ஆலயத்திற்கு நன்கொடை கொடுத்த போது, அவர் தன் திருகரங்களால் “பகுல்” என்ற மரகன்றை நட்டார். இந்த பகுல் மரத்தை சுற்றி வந்து வணங்கிய பிறகு படித்தால் ஞாபக சக்தி அதிகரித்து, படித்ததை மறக்காமல் இருக்கிறோம் என்கிறார்கள் பள்ளி மாணவர்கள்.
பகுல் மரத்திற்கு மன அமைதியை கொடுக்கும் சக்தி இருக்கிறது. மனம், அமைதியாக இருந்தால்தான் எது படித்தாலும் மனதில் பதியும். குழம்பிய குட்டைக்குள் மீனை பிடிக்க முடியாது. குழம்பிய மனதிற்குள் வெற்றியை பார்க்க முடியாது என்று பெரியோர்களின் வாக்கு என்றும் பொய்த்தது இல்லை.
பத்மாவதி தாயார்
பத்மாவதி தாயாரை தரிசித்தால் மனதில் இருக்கும் கவலைகள் எல்லாம் மறந்து போகும். துன்பங்கள் பறந்து போகும். அந்த அளவிற்கு அழகான அம்சத்துடனும், தலையில் கீரிடத்துடன் மூக்கில் புல்லாக்குடன் காட்சி தருகிறார் தாயார்.
அந்த தாயார் இருக்கும் இடத்தில் நம் பாதம் பட்டாலே, அஷ்டலஷ்மிகளும் நமக்கு துணை நிற்க தயார் என்று சொல்வார்கள்.
பவாய் என்ற இந்த சாலைக்கு “ஆதிசங்கரர் மார்க்” என்ற பெயரும் இருக்கிறதாம். ஏன் ஆதிசங்கரர் பெயர் இடம் பெறுகிறது என்றால், ஆதிசங்கரர் மண்டன மிஸ்ரர் என்ற பண்டிதரிடம் விவாதம் நடத்த இந்த வழியாகத்தான் சிருங்கேரியையும், துவாரகையையும் அடைந்தார். அதனால் இந்த இடத்திற்கு ஆதிசங்கரர் மார்க் என்றும் பெயர் உண்டு.
மகிமை உள்ள இடத்தில்தான் மகான்களில் அருள் பார்வையும் இருக்கும். பத்மாவதி தாயார் இருக்கும் இந்த இடத்தில் ஆதிசங்கரர் பாதமும் பட்டு இருக்கிறது. மகான்களின் பாதம் பட்ட பூமியில் நம் பாதம்பட்டாலே கர்மவினைகள் அகலும் என்கிறது சாஸ்திரம்.
இந்த ஆலயத்தில் சிவலிங்கம் இருக்கிறது. இந்த சிவலிங்கத்திற்கு பூக்களை சூட்டி வணங்கினால் வாழ்க்கையில் வசந்தம் ஏற்படும் என்றும் ஆணிதரமாக சொல்கிறார்கள் பக்தர்கள்.
படிக்கும் பிள்ளைகளின் ஆசிரியராக இருக்கிறார் மும்பை பவாய் என்ற இந்த இடத்தில் இருக்கும் பத்மாவதி தாயார். இவரை தரிசித்து பகுல் மரத்தையும் சுற்றி வந்து வணங்கினால் நிச்சயம் கல்வியில் மேன்மை பெறுவோம். பத்மாவதி தாயாருக்கு வஸ்திரம் அணிவித்து, இனிப்பை படைத்தால் வாழ்க்கை சிறப்பாகும்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved