Monday 27th January 2025

தலைப்புச் செய்தி :

கண் திருஷ்டியை விரட்டும் எளிய பரிகாரங்கள்- பகுதி-1

நிரஞ்சனா   

முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, கண் திருஷ்டி என்ற ஒரு துஷ்ட சக்தி இருக்கிறதா இல்லையா? அது கற்பனையாக உருவாக்கபட்டவார்த்தையா? என்று தெரிந்துக் கொள்ளவேண்டும்.

காந்தாரி பாண்டவர்களிடத்தில் இருந்து தன் மகன் துரியோதனனை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணினாள். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று தனக்கு தெரிந்த முனிவரிடம் கேட்டாள். அதற்கு அவர், “தாயே பல வருடங்களாக உங்கள் கண்களை கட்டி கொண்டு இருப்பதால், உங்கள் கண்களுக்கு அதிக சக்தி கூடி இருக்கும். ஆகவே உங்கள் மகனின் உடலை பார்த்தால், துரியோதனனின் உடலில் பாண்டவர்கள் செலுத்தும் ஆயுதம், உங்கள் மகனின் உடலில் பட்டாலும் பாதிக்காது” என்றார் முனிவர்.

மகனின் ஆயுளை மனதில் நினைத்து கொண்டு, தன் மகனான துரியோதனை அழைத்து, “மகனே நீ ஆற்றில் குளித்துவிட்டு எந்த உடையும் அணியாமல் அரண்மனைக்கு வர வேண்டும்” என்றாள் காந்தாரி.

தனக்கு இருந்த குழப்பத்தில் ஏன் எதற்கு? என்று கூட கேட்காமல் தாய் சொல்லை தட்டாமல் துரியோதனனும் ஆற்றில் குளித்துவிட்டு தன் தாய் கூறியது போல் நிர்வாணமாக வந்து கொண்டு இருந்தான். அந்த காட்சியை பார்த்த துரியோதனனின் தங்கை, “அண்ணா என்னாயிற்று உனக்கு? எதிரியை நடுங்கச் செய்யும் துரியோதனன், இப்படியா பைத்தியகாரனை போல நிர்வாணமாக வருவது? என்று திட்டி தீர்த்தாள்.

“நம் தாய்தான் இப்படி வர சொன்னார்” என்றான் துரியோதனன்.

“தாய்தான் புத்தி கெட்டு முட்டாள்தனமாக கூறினாள் என்றால், உனக்குமா புத்தி கெட்டு போயிற்று? ஒரு வாழை இலையை இடுப்பிலாவது கட்டி கொண்டு அரண்மனைக்கு போ” என்றாள் துரியோதனனின் தங்கை.

தங்கை கூறியது போல வாழை இலையை இடுப்பில் கட்டி கொண்டு அரண்மனைக்கு சென்ற துரியோதனன், “அம்மா துரியோதனன் வந்து இருக்கிறேன்.” என்றான்.

தன் மகனை பார்த்து அவனின் ஆயுளை நீடிக்கச் செய்ய போகிறோம் என்ற மகிழ்ச்சியில், கண்கட்டை அவிழ்த்து பார்த்த காந்தாரி, துரியோதனனின் தலையில் இருந்த உள்ளங் கால்வரை பார்த்தாள். ஆனால் துரியோதனனின் இடுப்பிலிருந்து தொடைவரை வாழை இலையால் மறைக்கப்பட்டிருந்ததை கண்டு சற்று அதிர்ந்து,

“துரியோதனா இத்தனை ஆண்டுகள் நான் என் கண்களை கட்டி வாழ்ந்ததும் ஒருவித தவம்தான். என் முதல் பார்வை உன் உடலில் எங்கெல்லாம் படுகிறதோ, அந்த இடத்திலெல்லாம் எந்த ஆயுதமும் உன்னை பாதிக்காது. ஆனால் உன்னுடைய இடுப்பில் இருந்து தொடைவரை என்னுடைய பார்வைபடவில்லை. ஆகவே உனக்கு அந்த இடத்தில்தான் ஆயுதத்தால் ஆயுள் பங்கம் ஏற்படும். விதி உன்னை விடவில்லையடா மகனே. எச்சரிக்கையாக இரு.” என்றாள் காந்தாரி.

காந்தாரி கூறியது போல தொடையில் ஆயுதம்பட்டுதான் துரியோதனன் இறந்தான்.

யுத்தம் முடிந்து ஒரு சமயம் அதே காந்தாரி, கண்கள் கட்டபட்ட நிலையில் ஆசி பெற வந்த தர்மரின் பாதத்தை மட்டும் பார்க்க முடிந்தது. “இந்த பாதத்துக்குதான் இனி ராஜமரியாதை கிடைக்கப்பேகிறது” என்ற பொறமையில் பெருமூச்சிவிட்டாள். உடனே தர்மரின் கால் கட்டை விரல் கருமையாக மாறியது என்கிறது பாரதம்.

ஆராய்ச்சியாளர்கள், சங்கீதத்தை ஆற்றின் அருகில் திரும்ப திரும்ப ஓரே ராகத்தை வாசிக்கும் போது, அந்த ராக அதிர்வலை அந்த ஆற்றில், ஒவ்வொரு ஒளியாக உருவாகி கடைசியாக எல்லாம் ராகஒலியும் ஒன்று கூடி ஒரு  வடிவமாகவே அந்த நீரில் உருவானதை கண்டார்கள். அதுபோலதான் சிலர் நம்முடைய இல்லத்திற்கு வரும்போது பொறமை கண்ணோட்டத்துடனும், பொறமை மனத்துடனும் வருவார்கள். அவர்களின் எண்ணம் கண் திருஷ்டியாக மாறும். பல தோஷங்களில் கண் திருஷ்டியும் ஒரு தோஷமே.

கண்திருஷ்டி பரிகாரம்

நன்றாக படிக்கும் குழந்தைகள் திடீர் என்று படிப்பில் ஆர்வம் குறையும். அதேபோல பெரியோர்களுக்கு கடன் தொல்லை போன்றவை இருந்தால், விநாயகரின் ஆலயத்தில் அவர்களின் பெயரில் அர்ச்சனை செய்து, தேங்காய் எண்ணையையும், தன் குலத்தை காக்கும் குலதெய்வத்திற்கு பிடித்தமான விளக்கெண்னையும் ஒன்றாக கலந்து, அர்ச்சனை செய்த தேங்காயில் ஊற்றி தீபம் ஏற்றினால் பிரச்சனைகள் விலகும். நம்முடைய முன்னேற்றம் தேங்காமல் விருத்தியாகும்.

காத்து கருப்பை விரட்டும் கருப்புநிறம் 

வீட்டில் கருப்பு மீன், கருப்பு நாய், கருப்ப மாடு போன்றவற்றில் ஒன்றை தங்கள் வசதிக்கேற்ப வளர்த்து, தங்கள் கையாலேயே உணவு கொடுத்து வளர்த்து வந்தால், காத்து கருப்பு எனும் துஷ்ட சக்திகள் நம்முடைய உடலில் தோஷங்களாக நுழைவதை தடுத்திடும். பரிகாரமாக கருப்பு ஜீவ ராசிகளை சில நாட்களோ அல்லது சில மாதங்களோ வளர்த்து, அந்த ஜீவராசிகளை யாருக்காவது தானமாக கொடுத்தால் நம்முடை தோஷம் போகும் என்கிறது சாஸ்திரம். அதனால்தான் சில கிராமத்தில் கருப்பு ஆடு, கருப்பு கோழியை வளர்த்து கோவிலுக்கு கொடுக்கும் வழக்கம் இன்றும் இருக்கிறது.

கண்திருஷ்டியை விரட்டும் கண்ணாடி  

சாப்பிடும் போது எங்கோ யாரோ நினைத்தால் புரை ஏறும். அதேபோல் யாரே நம்மை திட்டினாலும் நாக்கை கடித்து கொள்வொம். அதுபோல்தான் நமக்கு தெரியாமலே கண் திருஷ்டி நமக்கு பாதிப்பை உண்டாக்கும். வீட்டுக்குள் வாசலுக்கு நேராக முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால் பாதிப்பு வராது. அமாவாசை, தீபாவளி நோம்பு போன்ற நாட்களில் முகம் பார்க்கும் கண்ணாடியை ஒரு தெய்வமாக மதித்து வழிப்படுவோம். காரணம் நம்முடைய முன்னோர்களின் புகைப்படம், குலதெய்வத்தின் புகைப்படம் நம்மிடத்தில் இருக்காது. அச்சமயங்களில் அவர்களை வழிப்படும்போது அவர்களின் ஆத்மா முகம் பார்க்கும் கண்ணாடியில் மறைமுகமாக தோன்றி, தங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்ததும் வணங்குகிறார்கள் என்று மகிழ்வார்கள். இதனால் அவர்களின் ஆசி நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

கண்ணாடி வைக்காமல் வணங்கினால் என்னத்தான் அவர்களுக்கு பிடித்த திண்பண்டங்களை வைத்து வணங்கினாலும் அவர்களை மகிழ்விக்க முடியாது என்கிறது சாஸ்திரம்.  அதுபோல,வெளியில் இருந்த வீட்டுக்குள் வருபவர்களின் முகம் நேரடியாக தெரியும்படி முகம் பார்க்கும் கண்ணாடி வைத்தால், அவர்களால் உண்டாகும் கண்திருஷ்டி அந்த இல்லத்தை பாதிக்காது.

உப்பு தண்ணீரின் மகிமை  

சிறு வேலை செய்தாலும் உடல் சோர்வு ஏற்படும். அதற்கு இரண்டு காரணங்கள்தான் உள்ளது. முதல் காரணம் உடல் பலவீனம், இரண்டாவது கண்திருஷ்டி .

நம் உடலில் ஏழு சக்கரங்கள் உள்ளது. அந்த சக்கரங்கள் நல்ல விதத்தில் இயங்கி கொண்டு இருந்தால் உடல்நிலை பாதிப்பு வர வாய்ப்பு இருக்காது. குழாயில் அடைப்பு இல்லை என்றால் தண்ணீர் தடை இல்லாமல் வருவது போல, நம் உடலில் இருக்கும் சக்கரங்கள் பலமாக இருந்தால் உடலுக்கு நம்மை ஏற்படும்.

மூங்கில் மரத்தின் வேரில் நெல்லை போட்டால் அந்த மரமே பட்டுபோகுமாம்.  அதுபோல அதிக திருஷ்டிபட்டால் உடலில் இருக்கும் சக்கரங்கள் சரியாக இயங்காமல் வழுவிழந்து பலவீனமாக இருக்கும். இதற்கு பரிகாரம் கடல் தண்ணீர்.

கடல் தண்ணிரில் குளித்தால் உடலில் இருக்கும் அந்த ஏழு சக்கரங்களும் பலம் பெறும்.

எப்படி தணணீர் வானத்தி்ற்கு சென்று மழையாக திரும்பி வருகிறதோ அதுபோல, கடல் தண்ணீர் உடலை நனைத்து நம்முடைய உடலில் உள்ள சப்த  சக்கரங்களை பலப்படுத்தும்..

அதேபோல, ஒரு வீட்டிற்கு அதிக தோஷம் இருந்தால், அந்த வீட்டில் துர்வாடை வீசும். என்னதான் சென்டு போன்ற நறுமண பொருட்களை உபயோகித்தாலும் அந்த வாடை போகாது. தோஷம் நீங்கினால்தான் துர்வாடை போகும். அதனால் கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.

கடலில் குளிக்க தெரியாதவர்கள், கடல் நீரை கொஞ்சம் வீட்டிற்கு கொண்டு வந்தும் குளிக்கலாம். அப்படி இல்லையென்றால் குளிக்கும் போது ஒரு பக்கெட்டில் கைபிடி அளவு கல் உப்பை எடுத்து தண்ணீரில் கரைத்து குளித்தாலும் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களும் பலப்படும்.

ஸ்ரீராமர் பார்த்திப லிங்கத்தை, தானே உருவாக்கி, அந்த லிங்கத்திற்கு கடல் நீரால் அபிஷேகம் செய்தார். “ஏன் கடல் நீரில் அபிஷேகம் செய்கிறீர்கள்.? என்று வானர வீரர்கள் கேட்டதற்கு, கடல் நீரே விசேஷமானது“ என்றார் ஸ்ரீராம பிரபு.

இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்  

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserve

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »