Wednesday 25th December 2024

தலைப்புச் செய்தி :

உங்கள் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமை

நிரஞ்சனா

ஒரு ஜீவராசி வாழ்வதற்கு எது முக்கிய தேவை என்றால் அது உயிர். அதுபோல, ஒருவரின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்களின் பிறந்த நட்சத்திரம். இருளை விரட்டி வானத்திற்கு எப்படி நட்சத்திரம் அழகு சேர்க்கிறதோ, அதுபோல பிறந்த நட்சத்திரம் ஒருவரின் வாழ்வை நல்ல நிலைக்கு மாற்றும் ஆற்றல் கொண்டிருக்கிறது.

இதை தேவ முனிவர் ஒருவர் காமாட்சி அம்மனிடம் விளக்கினார். அதை பற்றி விரிவாக பார்ப்போம்.

விளையாட்டு வினையாகும் என்பது போல, அன்னை பார்வதிதேவி, சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் சாபம் உண்டாகி சிவபெருமானைவிட்டு பிரியும் நிலைக்கு ஆளானார். மீண்டும் தன் கணவருடன் இணைய வேண்டும் என்று விரும்பிய பார்வதிதேவி, காமாட்சி அம்மனாக  ஊசி முனையில் கடும் தவம் இருந்தார். இப்படி ஊசி முனையில் பல மாதங்களாக தவம் இருக்கிறாரே என்று மனம் வருந்திய தேவ முனிவர் ஒருவர், அம்பிகை முன் தோன்றி, உங்கள் திரு நட்சத்திரத்தில் மணலால் சிவலிங்கம் செய்து வழிபடுங்கள். இதனால் பாபம் நீங்கப்பெற்று நிச்சயம் உங்கள் கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டாகும்” என்று கூறினார் தேவ முனிவர்.

முனிவரின் ஆலோசனைப்படி காமாட்சி அம்மன் தன் திருநட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் மணலால் சிவலிங்கம் உருவாக்கி வழிபட்டார். இதன் பயனால் சாபம் விலகியது. மீண்டும் சிவபெருமானுடன் இணையும் பாக்கியத்தை பெற்றார் அம்பாள்.

இந்த சம்பவத்தின் மூலமாக, அவரவர் ஜென்ம நட்சத்திரங்களில் செய்யும் பரிகாரங்களுக்கு பலனும் மகிமையும் அதிகம் என உணர்த்தினார் இறைவன்.

பொதுவாக 27 நட்சத்திரங்களும் பெண் தேவதைகள் என்பதால் அவரவர் பிறந்த நட்சத்திரத்தின் பெண் தேவதைகளுக்கு பூஜை செய்தால் பலன் கிடைக்கும்.

எப்படி அந்த நட்சத்திரத்திற்கு உரிய பெண்தேவதைக்கு பூஜை செய்வது என்றால்?

நீங்கள் பிறந்த நட்சத்திரம் ஒவ்வொரு மாதத்திலும் எந்த நாளில் வருகிறதோ அந்த நாளில்  உங்கள் நட்சத்திரத்தின் பெயரில் கோயிலில் அர்ச்சனை செய்ய வேண்டும். இதனால் உங்கள் நட்சத்திரம் பலவீனமாக இருந்தாலும் பலம் பெறும். பொதுவாக மந்திரங்களை உச்சரிக்க உச்சரிக்க அந்த மந்திரத்திற்கு ஆற்றல் வலுவடையும். அதுபோல, உங்கள் ஜென்ம நட்சத்திரத்தை போற்றி வழிபாடுகள் செய்ய செய்ய, அந்த நட்சத்திரத்திற்குரிய பெண்தேவதை உங்களுக்கு ஆற்றலை அள்ளி தருவாள்.

காலையில் சில நிமிடங்களாவது இறைவனை வணங்கிய பிறகே வேலைகளை தொடங்குவது பலரின் வழக்கம் அச்சமயங்களில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்தையும் மனதால் நினைத்து, என் ஜென்ம நட்சத்திர தேவதை என்றென்றும் துணை இருந்து காக்க வேண்டும், என் வாழ்வை சிறப்பாக்குவாள் என்று மனதால் மூன்று முறை நினைத்து வழிபட்டால், நிச்சயம் பிரகாசமான எதிர்காலத்தை அடைவீர்கள்.

அதுபோல ஒருவர் ஜாதகத்தில் தோஷங்கள் இருந்தாலோ அல்லது கண் திருஷ்டி இருந்தாலோ பெரிய முன்னேற்றத்தை அடையவிடமால் இருக்கின்றபோது, அதற்கான பரிகாரம் என்ன என்பதை கண்திருஷ்டி பரிகாரம்  என்ற கட்டுரையை படித்திருப்பீர்கள்.  அதில் வரும் தோஷங்கள் தீரும் பரிகாரங்களை உங்கள் ஜென்ம நட்சத்திரத்தில் செய்து வழிபட்டால், தடைபடும் செயல்கள் தடை விலகி வெற்றி தரும்.

சிலருக்கு அவர்களுடைய பிறந்த நட்சத்திரம் தெரியாமல் இருக்கும். அதனால்  அவர்களுடைய பெயர் இராசிக்குரிய நட்சத்திரத்தின் தேவதையை மனதால் நினைத்து மேல் வழிபாடுகள் செய்தும், பரிகாரங்களை செய்தும் வந்தால் பெரும் பலன் கிடைக்கும்.

அவரவர் ஜென்ம நட்சத்திரம் என்பது கண்கண்ட தெய்வம். திருமணம் மற்றும் அனைத்து சுபசெயல்களும் நட்சத்திரத்தி்ன் அடிபடையில்தான் பார்க்கிறோம். அத்தகைய மகிமை வாய்ந்த நமது ஜென்ம நட்சத்திரத்தை வணங்கி வளம் பெறுவோம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO      

2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்   

http://www.youtube.com/bhakthiplanet

ஜோதிட கட்டுரை படிக்கவும் 

வாஸ்து கட்டுரை படிக்கவும்

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்

சிவன் கோயி்ல்,அம்மன் கோயில்,முருகன் கோயில்,பெருமாள் கோயில்,பிற கோயில்கள்

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும் 

For Astrology consultation Click Here

 

 

 

© 2012 bhakthiplanet.com  All Rights Reserve

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »