லட்சியங்களை நிறைவேற்றும் திருப்பூவணநாதர்
நிரஞ்சனா
அருள்மிகு திருப்பூவணநாதர் சிவகங்கை மாவட்டம். திருப்பூவணம் .
குழந்தையின் தேவையை தாய் அறிந்து தருவதுபோல், பக்தர்கள் வேண்டியதை வேண்டியபடி தருபவர் இறைவன். அதனால்தான் இறைவனை தாயுமானவர் என்று அழைக்கிறோம்.
நமக்காக இறைவன் இருக்கிறான், இந்த இறைவனுக்காக யார் இருக்கிறார்கள்? நாம்தான் அந்த இறைவனை நம் குழந்தையை போல பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாள் பொன்னனையாள்.
தன் நலத்தை விட, தன் ஆசையை விட, இறைவனுக்கு சேவை செய்வதே தன் விருப்பமாகவும் பாக்கியமாகவும் கருத்தினாள் பொன்னனையாள். இவர் சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். ஆடல் மங்கை. ரசிகர்கள் வியந்து போகும் அளவுக்கு நடனகலை அறிந்தவள். அழகில் சிறந்தவள். தனக்கு கிடைக்கும் பணத்தை சிவனடியார்களுக்கும், சிவாலய திருப்பணிகளுக்கும் செலவிடுவாள்.
பொன்னனையாளுக்கு ஒரு ஆசை இருந்தது. திருப்பூவணநாதரை தங்கத்தில் வடிக்கவேண்டும் என்று ஆசைபட்டாள்.
பொதுவாக பொன் வைக்கும் இடத்தில் பூவை என்பார்கள். தன் இறைவனுக்கு பூ வைப்பது போல, தன் பெயருக்கேற்ப பூவனநாதரை பொன்வனநாதராக பார்க்க வேண்டும் என்று விரும்பினாள் பொன்னனையாள். ஆனால் அதற்கு போதிய வருமானம் இல்லாமல் கவலை அடைந்தாள். கிடைக்கிற வருமானத்தை சிவசேவைக்கே போதவில்லையே, நம் ஆசை தண்ணீரில் எழுதி வைத்தது போல் ஆகிவிடுமோ என கண்ணீர் சிந்தினாள். அவள் கண்ணீர், ஈசனின் பாதத்தை பாத பூஜை செய்ததோ என்னவோ ஒருநாள், சிவனடியார் உருவத்தில் பொன்னனையாளின் வீடு தேடி வந்தார் இறைவன்.
வழக்கம்போல அந்த சிவனடியாருக்கு உணவு படைத்தாள். அவள் முகத்தில் கவலை ரேகை ஓடியதை கண்டு எதுவும் தெரியாததை போல, “என்னம்மா கவலை உனக்கு?” எனக் கேட்டார் இறைவன்.
பொன்னையாள் தன் கவலையை சொன்னாள். அதற்கு சிவனடியாராக இருந்த இறைவன்.“இதற்காகவா நீ கவலைப்படுகிறாய்? நீ எப்போது இறைவனை பொன்னால் செய்ய வேண்டும் என்று விரும்பினாயோ அந்த நிமிடமே உன் அன்பை இறைவன் ஏற்றுக்கொண்டான். நீ இறைவனை பொன்னால் செய்தாலும் செய்யாவிட்டாலும் அவன் அருள் உனக்கு இருக்கிறது. அதனால் கவலையை விடு.” என்றார் இறைவன்.
ஆனால் பொன்னனையாள் சமாதானம் அடையவில்லை. அவள் உள்ளுணர்வை புரிந்துக்கொண்ட இறைவன், “பொன்னனையாள்… இளமை, தேகம், செல்வம் இவை அனைத்தும் நிரந்தரமானதல்ல. காலம் எதையும் மாற்றி விடும். ஆனால் ஒருவரின் நற்பெயரை காலத்தால் மாற்ற முடியாது. அழிக்க முடியாது. அத்தகைய நற்செயலை செய்ய நினைக்கும் உனக்கு ஒரு உதவி செய்கிறேன். உன்னிடம் உள்ள செம்பு, பித்தளை, ஈயம் இவற்றை கொண்டு வா“ என்றார் இறைவனான சிவனடியார்.
அதன்படி தன் வீட்டில் இருந்த செம்பு, பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களால் ஆன பொருள்களை எடுத்து வந்தாள் பொன்னனையாள்.
தங்கமாக மாறிய பாத்திரங்கள்
பொன்னையாள் எடுத்து வந்த உலோக பாத்திரங்களில் திருநீறு பூசினார் இறைவன், “இந்த பாத்திரங்களை இன்று இரவு முழுவதும் நெருப்பில் வைத்திரு. மறுநாள் பார்.” என்று கூறிய சிவனடியாரான இறைவன், பொன்னனையாளுக்கு ஆசி வழங்கி சென்றார்.
அதன்படி செய்தாள் பொன்னனையாள்.
மறுநாள் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
இளம் காலை கதிரவனை போல, நெருப்பில் இட்ட பொருள்கள் அனைத்தும் தங்கமாக மாறி ஜொலித்தது. நேற்று வந்தவர் ஒரு சிவனடியார் மட்டுமல்ல, சித்தர் வடிவில் வந்த இறைவன் என்பதை புரிந்துக்கொண்ட பொன்னனனையாள், ஆடிபாடி மகிழ்ந்தாள். அந்த தங்கத்தை கொண்டு தன் விருப்பம் போல், திருப்பூவணநாதரை தங்கத்தால் உருவாக்கி அதை பிரதிஷ்டை செய்தாள்.
திருப்பூவணநாதர் தங்கத்தில் ஜொலிப்பதை கண்டு மனம் மகிழ்ச்சியடைந்த பொன்னையாள், ஒரு குழந்தையை ஆசையாக கன்னத்தில் கிள்ளி கொஞ்சுவது போல், பூவனநாதரை கிள்ளி கொஞ்சினாள். இதனால் இன்றும் அந்த சிவலிங்கத்தின் மேல் பொன்னையாளின் நககுறி இருக்கும்.
அரசரை அசர வைத்த இறைவன். என்ன அது?
இதன் தொடர்ச்சிக்கு கிளிக் செய்யவும்
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved