தீராத வியாதியை நீக்கும் மாவூற்று வேலப்பர்
நிரஞ்சனா
ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி.
உலகத்தை உருவாக்கிய இறைவன், தான் படைத்த இந்த பூமியில் தோன்ற விரும்பினார். அதன் காரணம், நம் நலனுக்காகவே. நாம் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள். அதனால்தான் தம்முடைய படைப்பில் உருவான குழந்தைகள் எப்படி இந்த பூமியில் தனியாக வாழும் என்ற எண்ணத்தில் மனிதர்களுடன் ஒருவராக தெய்வங்கள் பூலோகத்தில் தோன்றினார்கள்.
நமக்கு நடந்த பிரச்னைகளை அனைவரிடமும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் இன்று இல்லை என்றாலும் ஒருநாள் அந்த நபர்கள் நமக்கு எதிராக மாறும்போது நம் பிரச்னையை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்துவார்கள். ஆனால் அதே பிரச்னையை இறைவனிடம் சொன்னால் ஆறுதல் கிடைப்பதுடன் அதற்கு தீர்வும் கிடைத்திடும்.
இறைவன் என்றும் நமக்கு எதிராக மாறமாட்டார். ஆனால் ஒரு வேலை நாம் இறைவனுக்கு எதிராக மாறினாலும் நாம் இறைவனிடம் சொன்ன பிரச்னைகளை தீர்ப்பாரே தவிர மேலும் சங்கடப்படுத்த மாட்டார்.
முருகப்பெருமான் தன் பக்தர்களை காக்க பூலோகத்தில் தோன்ற விரும்பியதால்தான் இந்த பூமியில் பிறந்த வள்ளியை திருமணம் செய்து நம்முடனே பூலோகவாசியாக இருந்துவிட்டார். அத்துடன்
சிவபெருமான் விநாயகரையும், கந்தனையும் உலகத்தை சுற்றி வர சொன்ன உடன், முருகப்பெருமான் பூலோகத்தை விரும்பி சுற்றியதால் மக்களின் துயரத்தை போக்க, பல இடங்களை கண்டறிந்தார். முருகப் பெருமான் இருக்கின்ற இடங்கள் குன்றாக இருந்தாலும் மக்களின் ஆரோக்கியத்திற்கு ஒரு உடற்பயிற்சியாகவும் இருக்கும் என்ற காரணத்தில்தான் குன்று இருக்கும் இடத்திலெல்லாம் முருகன் குடியிருந்தான்.
ஆண்டிபட்டியில் தோன்றிய வேலவன்
மாமரம் நிறைந்து இருக்கும் அந்த இடத்தில் சிறிய அளவில் வள்ளி கிழங்கையும் பயிர் செய்தார் ஒருவர். ஒருநாள் வள்ளி கிழங்கை எடுக்கும் போது அதில் ஒரு வள்ளிகிழங்கை மட்டும் எடுக்கவே முடியவில்லை. “என்னடா இது ஆச்சரியமாக இருக்கிறதே” என்ற சந்தேகத்துடன், இதை விடகூடாது என்ற முடிவுடன் தோண்டி பார்த்தார். மண்ணுக்குள் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஆம், மண்ணுக்குள் அவர் கண்டது வள்ளி கிழங்கு இல்லை வள்ளி மணாளன் – முருகப்பெருமானின் சிலை.
இதை கண்ட அந்த நபர் ஊர் மக்களிடம் கூறினார். ஊர்மக்கள் முருகப்பெருமானுக்கு அந்த இடத்திலேயே கோவில் கட்டி முருகப்பெருமான் சிலையை பிரதிஷ்டை செய்தார்கள்.
பொதுவாக இறைவனை வர்ணித்து பாடி அழைப்பார்கள். ஆனால் சில வகுப்பினர் இறைவனின் பெயரை உச்சரித்தாலே இறைவன் மகிழ்ந்து அவர்களுக்கு காட்சி தருவார். அப்படி முருகப்பெருமானின் நாமத்தை உச்சரித்து வந்த ஆதிவாசி கூட்டத்தில் இருந்த சிலர், இந்த முருகப்பெருமானின் சக்தியை உணர்ந்தார்கள். அதனால் அவர்களும் தங்கள் சக்திக்கேற்ப வேலவனின் கோவிலில் சிறப்பாக பூஜை செய்தும் நற்பணிகள் செய்தும் வந்தார்கள்.
மாமரத்தின் ஊற்று நீர் மகிமை
முருகப்பெருமானை வணங்க கேசவன் என்ற பக்தரும் அவருடைய குடும்பத்தினரும் வந்தார்கள். “மலை மேல் முருகன் இருக்கிறான், அதனால் நீ இங்கிருந்தே முருகப்பெருமானை வணங்கு. நாங்கள் உனக்கு பிரசாதம் எடுத்து வருகிறோம்” என்றனர் உறவினர்
காரணம், கேசவனுக்கு இருதய பாதிப்பு இருந்தது. “முருகப்பெருமானை தரிசித்து என் உயிர் போனால் அது என். பாக்கியமே“ என்ற கூறிய கேசவன் மலை மேல் ஏறினார்.
முருகப்பெருமானை கண் குளிர தரிசித்து விட்டு மலையில் இருந்து இறங்கி வந்தபோது தண்ணீர் தாகம் எற்பட்டது. “நெஞ்சு அடைப்பது போல் இருக்கிறது” என்றார். இதை கேட்ட கேசவனின் குடும்பத்தார் பயந்தார்கள். என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார்கள். இந்த மலையில் தண்ணீருக்கு எங்கே போவோம்? என்று நினைத்து கொண்டே அந்த மலை பகுதியை சுற்றிபார்த்தபோது, ஒரு மாமரத்தின் அடியில் ஊற்று நீர் வருவதை கண்டார்கள்.
அந்த ஊற்று நீரை எடுத்து வந்து கேசவனுக்கு தந்தார்கள். கேசவன் அந்த ஊற்ற நீரை, “முருகா“ என்ற கூறிகொண்டே பருகினார். நீரை பருகிய சில நிமிடங்களிலேயே அவருடைய இருதய படபடப்பு குறைந்து சாதாரண நிலைக்கு வந்து சரியாக இயங்க ஆரம்பித்தது.
இருதய நோயாளி என்ற நிலை மாறியது. இந்த மாமரத்தின் ஊற்று நீருக்கு சக்தி இருக்கிறது என்பதை பக்தர்கள் உணர்ந்தார்கள்.
மாவூற்று வேலப்பர்
மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் வருவதால் முருகப்பெருமானுக்கு மாவூற்று வேலப்பர் என்று பக்தர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள்.
காமாட்சி அம்மன் காஞ்சி தலத்தில் மாமரத்தின் அடியில் தவம் செய்து சிவபெருமானின் அருளை பெற்றாரே, அதுபோல இந்த மாவூற்று வேலப்பரை வணங்கினால் குரு பிராப்தம் கிடைக்கும்.
பல வருடங்களால் வியாதியால் அவதிபட்டவர் மாவூற்று வேலப்பரை வணங்கி இந்த மாமரத்தின் ஊற்று நீரை தலையில் தெளித்து கொண்டாலே தீராத வியாதிகள் நீங்கும்.
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© 2012 bhakthiplanet.com All Rights Reserved