Thursday 26th December 2024

தலைப்புச் செய்தி :

பிரிந்த குடும்பத்தை ஒற்றுமையாக்கும் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர்




 

நிரஞ்சனா

கடலூர் மாவட்டத்தின் பகுதியான திருப்பாதிரிபுலியூரில் உள்ளது அருள்மிகு  பாடலீசுவரர் திருக்கோயில்.

விளையாட்டு வினையாகும் என்பார்கள். இந்த சொல் அம்மை-அப்பனுக்கும் பொருந்தியது. அன்னை பார்வதிதேவியும் ஈசனும் ஒருநாள் சொக்கட்டான் விளையாடினார்கள். ஒவ்வொரு முறை ஆட்டத்திலும் சக்திதேவி தோல்வியை கண்டார். இருந்தாலும் “நான்தான் ஜெயித்தேன்.” என்று கூறிக்கொண்டே விளையாட்டாக ஈசனின் கண்களை தன் இரு கரங்களால் மூடினார்.  நல்ல மின்சார ஒளி இருக்கின்ற இடத்தில் திடீரென மின்தடைபட்டால்  இருள் சூழ்ந்துவிடுவது போல, சிவபெருமானின் கண்கள் மூடப்பட்ட அடுத்த விநாடியே உலகம் இருண்டது. பூமியின் செயல்பாடுகள் ஸ்தம்பித்தது.

தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் தவறு தவறுதானே. அதனால் அம்பிகைக்கு தோஷம் பிடித்து கொண்டது. தனக்கு ஏற்பட்ட தோஷத்திற்கு பரிகாரம் என்ன? என்று மனம் வருந்தி ஈசனிடமே கேட்டார் பார்வதி தேவி.

“நீ பூலோகத்தில் நம்முடைய ஸ்தலங்களுக்கு சென்று எம்மை வணங்கு. எந்த இடத்தில் உனது இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ, அந்த இடத்தில் எம்மை வழிபட்டு தவம் செய்தால் உன் தோஷம் நீங்கும். மீண்டும் என்னுடன் இணைவாய்.” என்றார் ஈசன்

பார்வதிதேவியும் பூலோகத்திற்கு வந்து பல திருஸ்தலங்களுக்கு சென்றார். நாட்கள் மாதங்களாக மாறியது. மாதங்களும் வருடங்களானது. ஆனால் பார்வதிதேவியின் இடது கண்ணும், தோளும் துடிக்கவில்லை.

“இறைவனுக்கு நம் மீது இன்னும் கருணை வரவில்லையே” என மனம் கலங்கியபடி சென்று கொண்டு இருக்கும்போது, வழியில் ஒரு பெரிய மரத்தை கண்டார். மனிதர்களுக்கு துன்பம் என்கிற வெப்பம் சுடும்போது, அந்த துன்ப வெப்பம் மேலும் அவர்களை சுடாமல் இருக்க தாயாக துணை நின்று காக்கும் எனக்கு, இந்த மரம் இன்று நிழல் தந்து காக்கபோகிறது.” என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டே அந்த மரத்தின் கீழே வந்து அமர்ந்தார் சக்திதேவி.  

அப்போது அந்த அற்புதம் நிகழ்ந்தது. அன்னை பார்வதிதேவியின் இடதுகண்ணும், இடது தோளும் துடித்தது. ஈசன் தம் அருகில் இங்கேதான் எங்கோ இருக்கிறார் என்பதை உணர்ந்து மகிழ்ந்தார். ஈசனை நினைத்து அங்கே பூஜைகள் செய்தார். இறைவனும் அன்னையின் தோஷங்களை நீக்கி தம்முடன் இணைத்துக்கொண்டார்.

பாறை மிதந்த அதிசயம்

மகேந்திரவர்மன் என்ற அரசரிடம் சமணர்கள் திருநாவுக்கரசர்  உயிரோடு இருந்தால் நம்முடைய சமன மதமே அழிந்துபோகும். அதனால் திருநாவுகரசரை கொன்றுவிடுவதுதான் நல்லது என்று கூறினார்கள்.

அரசருடன் விரோதிகள் கூட்டு சேர்ந்து பல தடவை புதிய புதிய கொடுமைகளை அரசருக்கு யோசனையாக கூறி அப்பரை கொல்ல சதி செய்தார்கள். அனைத்திலும் நாவுக்கரசரை காப்பாற்றினார் இறைவன். கடைசியில், “பெரிய கல்லோடு அப்பரை கட்டி கடலில் போட்டு விடுங்கள் கடலிலேயே மூழ்கி அப்பர் சாகட்டும்.” என்றார்கள் சதிகாரர்கள்.

சமணர்கள் சொல்வதற்கெல்லாம் சரி என்று தலையசைக்கும் அரசர், அதற்கும் தலையசைத்தார். காவலர்கள் திருநாவுக்கரசரை கல்லோடு இணைத்துக் கயிற்றால் கட்டி கடலில் தள்ளினார்கள்.

கடலில் தள்ளப்பட்ட அப்பர் பெருமான் ஈசனை நினைத்து தேவராம் பாடினார். அதில்….

கற்றுணை பூட்டி ஒர் கடலிப்

பாய்ச்சினும் நற்றுனணயாவது நமசிவாயமே

என்றார். பிறவிகடலில் இருந்தே காக்கம் அப்பன் ஈசன், இந்த உப்பு நீர் கடலில் இருந்து தன் பக்தனை காப்பாற்றாமல் இருப்பாரா?. திருநாவுக்கரசர் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்து அப்பரை விடுவித்தாள் கடல் அன்னை. அந்த கல்லை தெப்பமாக மாற்றினார் சிவபெருமான். அதில் பயணித்தப்படி வந்த திருநாவுக்கரசரை பத்திரமாக கடல் அலைகள் திருப்பாதிரிப்புலியூர் என்னும் இந்த தலத்திற்கு கொண்டு வந்து சேர்த்து விடைப்பெற்று திரும்பியது.

தம்மை பத்திரமாக கொண்டு வந்து சேர்த்த சிவபெருமானை அவ்வூர் ஆலயத்திற்கு சென்று வணங்கி,

ஈன்றாளும் ஆய், எனக்கு எந்தையும் ஆய், உடன் தோன்றினராய்,
மூன்று ஆய் உலகம் படைத்து உகந்தான்; மனத்துள் இருக்க
ஏன்றான்; இமையவர்க்கு அன்பன்; திருப் பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணை ஆய் இருந்தனன், தன் அடியோங்களுக்கே

என்று பாடினார். இவர் பாடலை கேட்டு இசைக்கு அசைந்து சிவபெருமான் அங்கே அப்பருக்கு காட்சி தந்ததால், இறைவனை “பாடலீஸ்வரரே” என்று கூறி மகிழ்ந்தார் அப்பர் பெருமான்.

அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் “கரையேறவிட்ட குப்பம்’ என்று அழைக்கப்படுகிறது.

பிறவிகடலில் இருந்து தன் பக்தனை காக்க கரையேற்றும்பிரான் என்றும், பாடலுக்கு செவி சாய்த்தால் பாடலீஸ்வரர், பாடலநாதன் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார்.

தோஷம் நீங்கி சிவபெருமானுடன் இணைய தவம் செய்ததால் இறைவிக்கு “அருந்தவநாயகி” என்றும் பெரியநாயகி, தோகையம்பிகை என்றும் பெயர். 

கணவன் – மனைவிக்குள் பிரச்சினை இருந்தால் இந்த ஆலயத்திற்கு வந்து இறைவனையும் இறைவியையும் தரிசித்தால் ஒற்றுமை ஏற்படும். கணவன்-மனைவி பிரிந்து வாழ்ந்தால், மீண்டும் இணைய விரும்பினால், பாடலீசுவரர். அருந்தவநாயகி பெயரில் அர்ச்சனை செய்து வணங்கினால் கணவன்- மனைவி மீண்டும் ஒன்று சேருவார்கள்.

பாடலீசுவரருக்கு அபிஷேகம் செய்தால், விரோதிகளால் உண்டாகும் பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம். இறைவனும் இறைவியும் நிழல் போல் துணை நின்று என்றும் நம்மை காப்பார்.  

ஜோதிட கட்டுரை படிக்கவும்  

வாஸ்து கட்டுரை படிக்கவும்  

ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்  

Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும் 

சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும் 

சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள் 

CLICK FOR VIDEO PAGE

editor@bhakthiplanet.com

இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்

For Astrology consultation Click Here

© 2012 bhakthiplanet.com  All Rights Reserved

தமிழ் – ஆங்கில இணையதள பத்திரிக்கையான நமது பக்திபிளானட்.காம், வளரும் எழுத்தாளர்கள் தங்கள் படைப்பு திறனை வெளிப்படுத்தவும், புதிய எழுத்தாளர்களுக்கு ஒரு அறிமுக மேடையாகவும் இருந்து வாய்ப்பு தருகிறது. கதை, கவிதை, கட்டுரை போன்ற உங்கள் படைப்புகள் பக்திபிளானட்.காம் இணையதளத்தில் பிரசுரமாக விரும்பினால் editor@bhakthiplanet.com க்கு அனுப்புங்கள். படைப்புகள் தமிழில் மட்டுமே அனுப்ப வேண்டும்.  ஏற்கெனவே பிரசுரமாகியிருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புகளை திருத்தவோ, சுருக்கவோ ஆசிரியர் குழுவுக்கு உரிமை உண்டு.

Posted by on Mar 5 2012. Filed under ஆன்மிக பரிகாரங்கள், ஆன்மிகம், ஆன்மிகம், கோயில்கள், சிவன் கோயில். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »