ஒலி தரும் ஒளிமையமான வாழ்க்கை
ஒலிக்கு சக்தி இருக்கிறதா என்றால் நிச்சயமாக இருக்கிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது இறைவனுடைய பெயரை வைக்க வலியுறுத்தினார்கள். இறைவனின் பெயரை கொண்ட குழந்தையை பெயர் சொல்லி அழைக்கும்போது இறைவனின் நாமத்தை சொல்கிறோம். இறைவனுடய பெயர் நல்ல ஒசைகொண்டது. அந்த ஓசை இல்லத்தில் ஒலிக்க ஒலிக்க சுபிக்ஷம் ஏற்படும்.
‘ஸர்வ மங்கல மாங்கல்ய சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே” என்ற துர்கைக்கு உகந்த மந்திரத்தை உச்சரித்தால், மங்களகரமான சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும் என்கிறது சாஸ்திரம். அதுபோல்தான், ஒசைக்கு சக்தி இருக்கிறது என்பதை பல இதிகாசங்களிலும், புராணங்களிலும் உறுதியாக சொல்லப்பட்டு இருக்கிறது. அதை பற்றி விவரமாக பார்க்கலாம்.
கம்பருக்கு தலையசைத்த ஸ்ரீநரசிம்மர்
சோழ அரசர் ஒருவர் வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுத வேண்டும என்று ஒட்டக்கூத்தரிடமும் கம்பரிடமும் கூறினார். ஒட்டக்கூத்தரும் கம்பரும் இணைந்து ராமாயண காவியத்தை எழுத ஆரம்பித்தார்கள். “பெரும் புலவரான நம்மை கம்பருடன் இணைந்து பணியாற்ற சொல்வதா?“ என்று கடும் கோபம் அடைந்தார். ஆனால் அதை வெளிகாட்டாமல் இருந்தார் ஒட்டக்கூத்தர். இதனால் கம்பருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார்.
அரசர் ஒருநாள், “ராமாயண காவியத்தை எதுவரை இயற்றினீர்கள்.?“ என கேட்டார் கம்பரிடமும் ஒட்டக்கூத்தரிடமும். கம்பர்தான் ராமாயன காவியத்தை அதிக அளவு எழுதினார். இதை அறிந்த அரசர் மிக மகிழ்ச்சியடைந்து கம்பரை பாராட்டினார். இதை ஜீரணிக்க முடியாத ஒட்டக்கூத்தர், “இனி கம்பரே காவியம் எழுதட்டும்.“ என்று கூறி விலகி கொண்டார். ராமாயணத்தை சிறப்பாக இயற்றிய பிறகு, அதை சபையில் காவிய பாடல்களாக பாடினார் கம்பர். சபையில் இருந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிலை, கம்பரின் பாடல்களை கேட்டு தலையசைத்து கர்ஜனை எழுப்பியது. இதை கண்ட அரசரும், மற்றவர்களும் அதிர்ச்சியும் – ஆனந்தமும் அடைந்தார்கள்.
இப்படி பாடல்களால் கற்ச்சிலையில் செதுக்கி இருந்த ஸ்ரீநரசிம்மமூர்த்தி உருவத்தை தலையசைக்க செய்தது மட்டும் மல்லாமல், ஒருநாள் தில்லை கோவிலில் ஒரு சிறுவனை பாம்பு தீண்டியது. ஆலயத்தில் மரணமா? என்று எல்லோரும் கவலை அடைந்தார்கள். “கவலை வேண்டாம்.“ என்ற கம்பர், ஸ்ரீராமா அவதார நாகபாசபடலத்திலிருந்து பாடலை பாடினார். எங்கிருந்தோ ஒரு நாகம் வந்து, விஷம் ஏறி இறந்த சிறுவனின் அருகில் சென்று, தான் கடித்த இடத்திலேயே மீண்டும் தீண்டி விஷத்தை உறிஞ்சிச் எடுத்தது. பாம்பால் மாண்ட சிறுவன் பாம்பாலேயே உயிர் பெற்றான்.
இப்படி மந்திர ஒலிக்கு சக்தி இருக்கிறது என்று கம்பர் மட்டும் சொல்லவில்லை, அறிவியல் பூர்வமாக ஆராயிந்து கூறி இருக்கிறார்கள்.
ஒலி உண்டாக்கிய ஒளி
நல்ல இசையை கேட்டால் நோய் நீங்கும். மழைக்குரிய ராகம் பாடினால் மழை வரும் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது உண்மையா என்பதை ஆராய நினைத்தார்கள் விஞ்ஞானிகள். அதனால் ஒரு ஆற்றின் அருகே நின்று ஒவ்வொரு இசை ஒலிகளையும் ஒலிக்கச் செய்தார்கள். அப்போது ஒவ்வொரு ஒலிக்கும் ஒவ்வொரு ஒளியாக, அதாவது வெளிச்சமாக தண்ணீரில் வந்துக்கொண்டிருந்தது. பிறகு மொத்த ஒளியும் ஒன்று சேர்ந்து அழகான வடிவத்தை கொடுத்தது என்பதை கண்டறிந்தார்கள் கணீரென்று ஒலிக்கும் மந்திரத்தின் சக்திகளாலும், இசையின் ஆற்றலாலும் நடந்தது இது என்று விஞ்ஞான பூர்வமாக, நிரூபிக்கப்பட்டது. அதனால்தான் நம் முன்னோர்கள் எப்போதும் நல்லதே பேசு என்றார்கள். ஒவ்வொரு வார்த்தைக்கும் சக்தி இருக்கிறது என்பதை வலியுறுத்தி சொன்னார்கள்.
பட்டமரத்தை தலைக்க செய்த மந்திரம்
திருவானைக்காவில் ஜம்பு என்கிற வெண்நாவல் மரம்தான் அந்த திருக்கோயிலுக்கு ஸ்தலவிருட்சம். அதனாலேயே அந்த ஊருக்கு ஜம்புகேசுவரம் என்ற பெயர் வந்தது. அந்த ஊருக்கே பெருமை சேர்த்த வெண்நாவல் மரத்திற்கு யார் கண்பட்டதோ அல்லது தோஷம் பட்டதோ…? மரமே பட்டுப்போனது. ஆனால் இறைவனின் சக்தியால் அந்த மரத்தில் இருக்கும் ஒரு பட்டை மட்டும் நன்றாக இருந்தது. இதை பார்த்த கானாடுகாத்தான் செட்டியார்களின் மனதில் ஒரு சிறு நம்பிக்கை ஏற்பட்டு, “ஏகாதச ருத்ராபிஷேகம்“ செய்தும், மந்திரத்தை உச்சரித்தும் வந்தார்கள். பட்ட மரம் வளர்ந்து பசுமையாக காட்சி கொடுத்தது. முனிவர்களாலும், மகான்களாலும், ரிஷிகளாலும் உருவாக்கபட்ட மந்திரத்திற்கு சக்தி அதிகம் என்பதை இந்த சம்பவத்தின் மூலமாக அறிய முடிகிறது.
தேள் கொட்டி உயிருக்கு போராடிகொண்டு இருப்பவர்களின் பெயரை சொல்லி மந்திரத்தை உச்சரித்தால் அந்த மந்திரத்தின் சக்தியாலேயே தேள் கடிப்பட்ட நபரின் உடலில் இருந்து விஷம் இறங்க வைக்கும் ஆற்றல் நம் தமிழ்நாட்டில் இருந்தது. இப்போதும் சில கிராமபுரங்களில் இந்த ஒலி மருத்துவத்தை பயன்படுத்துகிறார்கள். மந்திரத்தின் சக்தியை கண்களால் நாம் காண முடியாது. அனுபவ பூர்வமாகதான் உணர முடியும். வீட்டில் யாருக்காவது காய்ச்சல் வந்தால் அது அவர்களுடன் இருந்து மட்டும் போகாது. உடன் இருப்பவர்களுக்கும் பரவும். இப்படி ஒருவர் மாற்றி ஒருவருக்கு வந்து கொண்டே இருக்கக் கூடாது என்பதால்தான் கிராமத்தில் வெங்காயத்தை இரண்டாக வெட்டி வீட்டிற்குள் வைத்து விடுவார்கள். அந்த வெங்காயம், வீட்டில் இருக்கும் கிருமிகளை இழுத்துக் கொள்ளும். அதுபோல்தான், காலையிலோ, மாலையிலோ இறைவனுக்கு உகந்த, கந்தசஷ்டி கவசம் – ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதம் – லலிதாசகஸ்ரநாமம், செளதர்யலகரி, அபிராமி அந்தாதி, போன்ற இறைவனுக்கு உகந்த ஸ்லோகங்களையும் பாடல்களையும் இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் துஷ்ட சக்திகள் – கண்திருஷ்டிகள், செய்வினை பாதிப்புகள் போன்ற கெட்ட தேவதைகளின் தொல்லைகள் யாவும் நீங்கும்.
இராகு – கேதுபெயர்ச்சிபலன்கள் 2014-2015 கிளிக்செய்யவும்
Guru Peyarchi Palan 2014-2015 CLICK HERE
ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்
ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்
For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com
http://www.youtube.com/bhakthiplanet
http://www.youtube.com/niranjanachannel
http://www.facebook.com/bhakthiplanet
For Astrology Consultation CLICK Here
© 2011 bhakthiplanet.com All Rights Reserved