Monday 23rd December 2024

தலைப்புச் செய்தி :

Archive for: June, 2011

தொழில் அமையாத ஜாதகம்

V.G.Krishnarau, Astrologer ஒரு ஜாதகத்தில் பதவியை குறிக்கும் இடம் 10-ம்இடமாகும். அதாவது தொழில் துறையை குறிக்கும் இடம் இது. இந்த 10-ம் இடம் நன்றாக அமைந்தால்தான் நிரந்தரமான தொழில் அமையும். 10-ம் இடத்தில் கேது இருந்தால் அதாவது கேது மட்டும் பத்தாம் இடத்தில் தனித்து இருந்தால், தொழில் துறைக்கும் உத்தியோகத்திற்கு தாளம் போட வேண்டும். நல்ல வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அப்படி கிடைத்தாலும் அந்த வேலையில் நீடித்து இருப்பாரா என்றால் சந்தேகம்தான். சோம்பலாக இருப்பார். […]

புத்திர பாக்கியம் தடை ஏன்?

V.G.Krishnarau, Astrologer ஒரு ஜாதகத்தில் பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறப்படும் புத்திரஸ்தானம் பலம் பெற்று அமைந்தால் அந்த ஜாதகருக்கு புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு. அதாவது புத்திரஸ்தானம் என்பது 5.-ம் இடம். இந்த இடம் அருமையாக அமைந்தால் புத்திரர் பிறப்பது மட்டும் அந்த குழந்தைக்கு நல்ல புகழுடன் வாழ்க்கை அமையும். 5-ம் இடத்தில் கேது, ராகு,சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமைந்தால் பூர்வ புண்ணியம் தரும் இடம் பலவீனம் அடைகிறது. அவ்வாறு இருக்கும் ஜாதகத்தில் புத்திர […]

கல்வி ஞானம் தரும் வடிவுடையம்மன்

நிரஞ்சனா சென்னை மாநகரையொட்டி உள்ள ஊர் திருவொற்றியூர். இங்கு இருக்கும் இறைவனின் பெயர்  தியாகராசர். அன்னையின் பெயர் வடிவுடை அம்மன். ஒரு சமயம் தச்சனின் யாகத்தீயில் விழுந்து உயிரைவிட்டாள் பராசக்தி. அவள் உடல் பாதி கருகியும் பாதி கருகாமலும் இருந்தது. தேவியின் உடலை பார்த்து சினம் கொண்ட சிவன், அன்னையின் உடலை தன் தோலில் போட்டு கொண்டு ருத்ரதாண்டவம் ஆடினார். இதை கண்ட ஸ்ரீமந் நாராயணன் சிவனின் ஆவேச நடனத்தை கண்டு பதறினார். இதனால் தனது சக்கரப் […]

வறுமை வழிந்த வீட்டில் குபேரன் குடிபுகுந்தான்: குங்குலியக்கலய நாயனார் வரலாறு

  அறுபத்து மூவர் வரலாறு  பகுதி 9   நிரஞ்சனா சென்ற பகுதியை படிக்க திருக்கடவூரில் கலயனார் என்பவர் இருந்தார். அவர் ஒரு சிறந்த சிவபக்தர். அதனாலேயே தினமும் சிவபெருமான் ஆலயத்தில் நாள் தவறாமல் குங்குலிய தூபம் போடுவதை சிவபணியாக கடைபிடித்து வந்தார். கலயனாராக இருந்தவரை ஊர் மக்கள் குங்குலியக்கலயனார் என்று அழைத்தார்கள். தன்னிடம் அன்பாக இருப்பவரிடம் வம்பாக திருவிளையாடல் புரிந்து பக்தியை சோதிப்பது அய்யன் சிவபெருமானுக்கு பிடித்தமான ஒன்று. இதில் குங்குலியக்கலயனார் மட்டும் விதிவிலக்கா என்ன.? அதனால் […]

வம்பாக வந்த தோஷங்கள் தீர்க்கும் கடம்பவனேஸ்வரர்

நிரஞ்சனா கடம்பந்துறை என்ற இத்தலம் இன்று குளித்தலை என அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் இந்த கோயில் இருக்கிறது. காசிக்கு போனால் பாவம் தொலையும் என்பது போல் இந்த ஸ்தலத்திற்கு வந்தால் காசிக்கு வந்த புண்ணியம் கிடைக்கும் என்கிறது ஸ்தலபுராணம். ஆம்.. காசியில் இருக்கும் சிவாலயம் வடக்கு நோக்கி அமைந்திருப்பது போன்று, இந்த ஆலயமும் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அதனால் இந்த திருக்கோயில் தட்சிணகாசி என்ற பெயரும் பெற்றிருக்கிறது. இந்த […]

காளிஅம்மன் கோயிலில் காசு வெட்டினால் எதிரி காலி

நிரஞ்சனா மதுரையிலிருந்து 20கி.மீ தொலைவிலுள்ள திருப்பூவணம் என்ற சிற்றூரிலிருந்து ஓன்றரை கிமீ தூரத்தில் மடப்புரம் அமைந்துள்ளது. இத்தலத்தின் பெயர் “அடைக்கலம் காத்த அய்யனார் – பத்ரகாளியம்மன் திருக்கோயில்.” பிரம்மன், விஷ்ணு, சிவனுடன் கௌரி அம்மனும் ஒரு காட்டுபகுதியில் வேட்டையாட வந்தார்கள். அது அடர்ந்த காட்டு பகுதி. இனி காட்டுக்குள் செல்ல செல்ல சூரிய வெளிச்சம் கூட இல்லாமல் இருக்கும். ஆகவே நீ இங்கேயே இரு என்று சிவபெருமான் கௌரியம்மனை கேட்டுக்கொண்டார். அம்மனின் காவலுக்கு அய்யனாரை அங்கு நிறுத்தினார் […]

தீராத நோய்க்கு மகான்களே மருத்துவர்கள்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு  பகுதி – 10 சென்ற பகுதியை படிக்க   நிரஞ்சனா தீக்ஷீத் என்பர் பாபாவின் சிறந்த பக்தர். எல்லாம் சாய்பாபாவின் செயல் என்று ஆணிதரமாக நம்பி வந்தார். ஒருநாள் தீக்ஷீத்துக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. பல மருத்துவர்களை சந்தித்தார். இருந்தாலும் காய்ச்சல் தீரவில்லை. இதனால் தீக்ஷீதரின் குடும்பத்தார் கவலையடைந்தார்கள். தீக்ஷீதர் மனதில், ஒருமுறை சாய்பாபாவை சந்தித்தால் காய்ச்சல் வந்த சுவடே தெரியாதபடி போய்விடும் என்று நம்பினார். ஆனால் தூர பயணத்தால் உடல் இன்னும் […]

அரசருக்கு துணை நின்ற குபேரர் – சோமவார விரத மகிமை

விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 7   சென்ற பகுதியை படிக்க    நிரஞ்சனா சேனன் என்ற அரசன் போர்களத்தில் எதிரியிடம் சண்டையிட்டு தோற்று, எங்கு தன்னையும் தன் மனைவியையும் கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில், காட்டில் தன் பத்தினியுடன் மறைந்து வாழ்ந்து வந்தான். இராஜயோக வாழ்க்கையை அனுபவித்த அரசனின் மனைவி, காட்டில் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டாள். அதை தன் கணவரிடம் சொல்லி வருந்தினாள். “ஏன் காட்டில் வாழ்வதாக நினைக்கிறாய். இதை அரண்மனையாக நினைத்து விடு. நேற்றுவரை […]

மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி – 6

மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி – 6 Click for Previous Part by Vijay Krisshnarau வாஸ்து சாஸ்திரம். இது கட்டடங்களின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும, ஒரு கட்டடத்தால் அதன் உரிமையாளருக்கும் – அதில் வசிக்கின்றவர்களுக்கும் எந்த மாதிரியான பலன்களை தந்திடும் என்பதை சொல்கிற ஒரு அற்புதமான கலை. இதனை நம் முன்னோர் காலத்தில் “மனையடி சாஸ்திரம்” என்று அழைத்தனர். இதிலே மனையடி சாஸ்திரத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் மிக பெரிய […]

ஏற்றத்தை தரும் வனசாஸ்தா

நிரஞ்சனா திருவனந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் பாங்கோடு என்ற இடத்தில் சாஸ்தா நகரில் ஒரு விலங்கு ஒன்றின் மேல் அமர்ந்திருக்கிறார். ஆம்.. சாஸ்தா பொதுவாக புலி மீது அமர்ந்திருப்பதைதான் பார்த்திருக்கிறோம் ஆனால் இநத வனசாஸ்தா குதிரை மேல் அமர்ந்திருக்கிறார் அதன் காரணத்தை பார்ப்போம். திருவிதாங்கூர் நாட்டின் அரசர் ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா, ஒருசமயம் குதிரையில் நகர்வலம் வந்துக் கொண்டு இருந்தார். உடன் வந்தவர்களுடன் பேசி கொண்டே வந்தாலும் ஏதோ காரணத்தால், இல்லை இல்லை… […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »