சரும வியாதிகளை தீர்க்கும் நாகராஜர்
நிரஞ்சனா
கேரளவில் பாம்பு மேக்காடு என்ற ஒரு ஊர் இருக்கிறது. அந்த ஊரில் வசித்த நம்பூதிரி ஒருவர், வாசுகி, நாகயட்சி ஆகியோரின் நாகஉருவத்தை சிலையாக செய்து தனது வீட்டில் வைத்து பூஜை செய்து வந்தார்.
ஒருநாள், நம்பூதிரிக்கு சருமவியாதி ஏற்பட்டு உடலில் பல இடங்களில் அரிப்பு உண்டானது. அதற்கு நிறைய மருத்துவர்களை பார்த்தும் பல மருந்துகளை சாப்பிட்டும் சருமவியாதி குணமாகவில்லை. இனி இறைவன்விட்ட வழி என்று அமைதியாக இருந்தார். இறைவனுக்கு செய்யும் சேவையில் எந்த பங்கமும் வராத அளவு பயபக்தியுடன் நடந்து கொண்டார்.
நம்பூதிரி வணங்கும் நாகர் சிலைகளின் அருகில் இருந்த தீபத்தின் ஒளியில் இருந்து வரும் கரும்புகை, சிலைகள் மேல் பதிந்ததால் சிலைகள் கருமையாக காட்சி கொடுத்தது. அதை சுத்தம் செய்வதற்காக நம்பூதிரி, தன் கைகளால் அந்த சிலைகளின் மீது படிந்திருந்த கருப்பு நிறத்தை துடைத்தார். அந்த கருப்பு மை நம்பூதிரியின் கைகளில் பட்டு அவரே அறியாத வண்ணம் உடல் முழுவதும் வேகமாக பரவியது. தன் உடலில் ஒட்டி இருந்த கருப்பு மையை கவனித்த நம்பூதிரி, அந்த மையை துடைத்தார். அப்போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.
ஒவ்வாமையால் ஏற்பட்டு இருந்த தோல் நோய் நல்லவிதமாக குணம் அடைந்து, இதற்கு முன் சரும வியாதி இருந்ததற்கான அறிகுறியே இல்லாமல் மறைந்துவிட்டிருந்தது. தன் உடலில் இருந்த சருமவியாதி நீங்கியது என்பதை உணர்ந்தார் நம்பூதிரி. இந்த விஷயம் ஊர்மக்களுக்கு தெரிந்து பாண்டிய நாட்டின் மன்னர் வரை தகவல் பரவியது.
“எனக்கு பல வருடங்களாக பாடாய்படுத்தி வரும் இந்த சருமவியாதியை தீர்க்க, கேரளாவில் உள்ள அந்த நம்பூதிரியை அழைத்து வாருங்கள்.“ என்றார் பாண்டிய மன்னர். மதுரை வந்த நம்பூதிரியும் அரசரின் சருமவியாதியை தீர்க்க, தான் வழிபடும் நாகர் சிலைகளின் மீது பதிந்துள்ள மையை எடுத்து அரசர் உடலின் மீது பூசி, மந்திரத்தை உச்சரித்து கொண்டே தடவினார்.
அரண்மனையே அசந்து போனது. ஆம்…
மன்னரின் உடலில் இதுநாள் வரை இருந்த சருமவியாதி நீங்கியது. இதை கண்ட அரசர் மகிழ்ந்து அந்த நம்பூதிரிக்கு பொன்னும் பொருட்களும் அள்ளி கொடுத்து அத்துடன் பாதுகாப்புக்கு இரண்டு காவலர்களை துணை அனுப்பி நம்பூதிரியை சகல மரியாதையுடன் கேரள தேசத்துக்கு திரும்ப அனுப்பி வைத்தார்.
உடன் வந்த பாண்டிய நாட்டு காவலர்களுடன் கேரளா புறப்படும் வழியில் நாகர்கோயில் வந்த நம்பூதிரி, அந்த ஊர் கோயில் எல்லைக்குள் நுழைந்த போது ஒரு பெண்ணின் அபாய அலறல் குரல் கேட்டது. இதை கேட்ட நம்பபூதிரியும் உடன் வந்த மதுரை காவலர்களும், குரல் வரும் திசையை நோக்கி ஒடினார்கள். அந்த பெண்ணை கண்டுபிடித்தார்கள்.
“பெண்ணே…யார் நீ? ஏன் அலறினாய்?“ என்றனர் காவலர்கள்.
“அய்யா நான் இந்த ஊர்தான். என் ஆடுகளுக்கு புல்வெட்டும்போது திடீரென்று பூமியில் இருந்து ரத்தம் வந்தது. அந்த பயத்தில்தான் அலறினேன்.“ என்றாள். ரத்தம் இருந்த பகுதியை காட்டினாள். நம்பூதிரி பூமியில் உள்ள புற்களை அகற்றி பார்த்தார். உள்ளே ஒரு நாகர்சிலை. அந்த சிலையின் மீது அந்த பெண்ணின் அறிவால்பட்டு சிலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
கற்சிலையில் இருந்து ரத்தம் வருமா? என்று ஆச்சரியப்பட்டார்கள் அதை பார்த்தவர்கள். நம்பூதிரி தன் இடுப்பில் வைத்திருந்த சந்தனத்தை எடுத்து மந்திரத்தை உச்சரித்து கொண்டே நாகர்சிலையின் மேல் பட்ட காயத்தில் சந்தனத்தை தடவினார். ரத்தம் வடிவது நின்றது.
“இந்த இடத்தில் ஸ்ரீநாகராஜர் இருக்கிறார். அதனால் இந்த இடத்திலேயே இவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்துங்கள்.“ என்று கூறி, பாண்டிய அரசர் தனக்கு கொடுத்த பரிசை எல்லாம் கோயில் கட்டுவதற்காக பயன்படுத்தினார் நம்பூதிரி.
ஸ்ரீநாகராஜர் அமர்ந்திருக்கும் இடத்தின் மண், எந்த நேரமும் ஈரமாகவே இருக்கும். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், அந்த ஈர மண் உத்தராயண காலத்தில் கறுப்பாகவும், தட்ஷணாயன காலத்தில் வெள்ளையாகவும் நிறம் மாறுகிறது. இந்த மண்ணை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள்.
சரும வியாதிகள், திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாதது, வேலை கிடைப்பதில் தாமதம் போன்றவற்றுக்கு காரணம் நாகதோஷம். இந்த நாகர்கோயில் நாகராஜா திருக்கோயில் சென்று பிரசாதமாக கொடுக்கும் மண்ணை விபூதியில் கலந்து 45 நாட்கள் நெற்றியில் வைத்து வந்தால் சுபிட்சம் ஏற்படும்.
குரு பெயர்ச்சி பலன்கள் 2012-2013 | Guru Peyarchi Palan 2012-2013 VIDEO
2012-2013 குரு பெயர்ச்சி பலன்கள்
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© bhakthiplanet.com All Rights Reserve