ஏற்றத்தை தரும் திருவுடையம்மன்
மீஞ்சூர் அருகேயுள்ள மேலூரில் கோயில் கொண்டு இருக்கிறாள் திருவுடையம்மன்.
அந்த ஊரில் உள்ள ஒருவர் வளர்த்து வந்த பசு மாடுகளில் ஒன்று மட்டும் கொட்டகையில் இருந்து தானாகவே கட்டை அவிழ்த்து கொண்டு ஓடிவிடும். பிறகு பல மணி நேரம் கழித்து அதுவே வீடு திரும்பும். ஒருசமயம் அந்த மாட்டின் உரிமையாளர் இந்த பசுவிடம் பால் கறக்க நினைத்தார். பசுவின் மடியில் பால் இல்லை. யாராவது இந்த பால் கறந்து திருடி இருப்பார்களோ என நினைத்தார். ஒருநாள் அந்த பசு மாடு வழக்கமாக தானாக கட்டை அவிழ்த்து கொண்டு ஒடியது. இதை பார்த்து விட்டார் பசுவின் உரிமையாளர். அந்த பசுவை பின்தொடர்ந்தார்.
அது ஒரு காட்டை நோக்கி சென்றது. இதுவரை மனிதர் வாசமே இல்லாத அடர்ந்த காடு அது. சூரிய வெளிச்சத்தை கூட பரந்து விரிந்த மரங்களும் செடி கொடிகளும் காட்டுக்குள் நுழைய விடாதபடி வளர்ந்து நின்றது. “இந்த காட்டில் பயங்கரமான மிருகங்கள் இருக்குமே எப்படி இந்த மாடு பயம் இல்லாமல் உள்யே செல்கிறது?“ என்ற ஆச்சரியத்துடன் அந்த மாட்டின் பின்னாடியே தைரியமாக நடந்து சென்றார்.
அந்த பசு மாடும் எந்த பயமும் இல்லாமல், தன் வீட்டுக்கு வருவதை போல ஆனந்தமாக போய் கொண்டிருந்து ஒரு இடத்தில் நின்றது. பின் தொடர்ந்து வந்த மாட்டின் உரிமையாளன், ஒரு மரத்தின் பின்னே மறைந்து நின்று பார்த்துக்கொண்டிருந்தான். பசு நின்ற இடத்தில் மணக்க மணக்க மல்லிகை பூ வாசனையும், முல்லை பூவாசனையும் வீசியது. சில நிமிடத்தில் அந்த பசு மாடு தானாகவே அது நிற்கும் இடத்தில் பால் சுரத்தது. அந்த இடம் பசுவின் பாலால் நன்றாக நனைந்த உடன், வந்த வேலை முடிந்தது என்ற மகிழ்ச்சியுடன் திரும்பி வந்த பாதையை நோக்கி சென்றது பசு.
ஏதோ ஒரு சக்தி இந்த இடத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்த பசுவின் உரிமையாளன் காட்டில் இருந்து அவசரமாக வெளியேறி ஊர் மக்களிடம் அந்த செய்தியை சொன்னான். மக்கள் பலர் காட்டுக்குள் அவனுடன் திரண்டு வந்து, செடி,கொடிகளை நீக்கி பார்த்தனர். அங்கே ஒரு புற்று இருந்தது. அந்த புற்றை தோண்டினர். அப்போது பூமிக்குள் இருந்து சுயம்புவாக ஒரு அழகிய சிவலிங்கம் தோன்றியது. இந்த லிங்கம் எப்படி இங்கே வந்தது.? யார் இதை இங்கு வைத்தார்கள்.? என்பதை அறிய அந்த ஊர் சிவன் கோயில் பூசாரியிடம் கேட்டார்கள்.
“எவர் அதிகம் இறைவனை பற்றி நினைக்கிறார்களோ, யார் அதிகம் இறைவனின் புகழை பாடுகிறாரோ, அவர்கள் யாவரும் பல ஜென்மத்தில் பல முனிவர்களுடனும் ரிஷிகளுடனும் பழகும் பாக்கியம் பெறுகிறார்கள். அந்த பூர்வ ஜென்ம தொடர்பால்தான் இந்த ஜென்மத்தில் அவர்களுக்கு இறைவன் மீது அதிக பக்தி ஏற்படுகிறது. இது அகத்திய முனிவரின் வாக்கு. ஆகவே உன் முன்ஜென்ம பக்தியால் ரிஷிகளின் முனிவர்களின் பழகிய நட்பால், அவர்களின் ஆசியால் யார் கண்ணிலும் படாத இறைவன் உன் பசுமாட்டின் மூலமாக உனக்கு அந்த காட்டுக்குள் வழிகாட்டி இருக்கிறார். அதனால் உன் சக்திக்கேற்ப அந்த இடத்திலேயே ஒரு சிவலாயம் கட்டு.“ என்று இந்த பசுவின் உரிமையாளரிடம் கோயில் பூசாரி அருள் சொன்னார்.
பூசாரி கூறியது போல் தன் சக்திக்கேற்ப ஆலயத்தை கட்டினார். அங்கேயே தனக்கு கிடைத்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தார். சில நாட்கள் கழித்து ஒருநாள் அவர் கனவில் அம்பிகை தோன்றி, தனக்கும் இறைவனுக்கும் இங்குதான் திருமணம் நடந்து. அதனால் திருமணங்கீஸ்வரர் என அழைக்கபடுவார். என்னையும் அவர் அருகே பிரதிஷ்டை செய்து திருவுடையம்மனாக வணங்கி வா.“ என்றார் அன்னை. தான் கண்ட கனவை உடனே நிறைவேற்ற ஒரு சிற்பியை அழைத்து திருவுடை நாயகி (அம்மன்) சிலையை செதுக்க சொன்னார். அதற்கு எந்த பங்கமும் இல்லாத நல்ல தரமான பாறையை தேர்தெடுத்தார் சிற்பி. அதை பத்திரமாக பிளந்து எடுத்தார்கள்.
எண்ணற்ற சிற்ப பணியாளர்கள் அந்த பாறையை உருட்டி வரும் வழியில், பாறை கை நழுவி உருண்டு மூன்றாக பிளந்தது. இதை கண்ட சிற்பி பதறினார்.
அப்போலுது ஒரு அசரிரீ குரல் கேட்டது. “சிற்பியே கலங்காதே. உன் சேவையில் எனக்கு எந்த குறையும் இல்லை. எல்லாம் நன்மைக்குதான். உன் குற்றம் எதுவும் இல்லை. இந்த மூன்று பாறைகளிலும் என் உருவத்தை மூன்று சிற்பங்களாக செய். அதில் ஒரு சிலையை இந்த ஊரில் பிரதிஷ்டை செய். சிலைக்கு திருவுடையம்மன் என்று அழைக்கப்படட்டும். இங்கே நான் இச்சா சக்தியாக அருள் புரிவேன். மற்ற இரண்டு சிலைகளும் வெவ்வேறு இடங்களில் வடிவுடைஅம்மன் என்ற ஞான சக்தியாகவும், கொடியிடை அம்மன் என்ற கிரியா சக்தியாகவும் திகழ்வேன்.“ என்று அசரிரீ குரல் சொல்லி மறைந்தது.
ஒரே பாறையில் மூன்று சிலைகள் உருவானதால் மூன்றும் ஒரே அளவீல் ஒரே உயரத்தில் இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டார்கள். இச்சா சக்தியாக திருவுடைஅம்மனை வணங்கினால் பக்தர்களுடைய ஆசைகள் எல்லாம் நிறைவேறும்.
கல்வி ஞானம் தரும் வடிவுடையம்மன்.
கொடியிடை அம்மன் ஆசியுடன் போரில் வெற்றி கண்ட தொண்டைமான்.
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி–பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© bhakthiplanet.com All Rights Reserved
பொது அறிவிப்பு:
BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
N. JOTHI,
Advocate,
319. Law Chambers
Madras High Court,
Chennai – 104