கொடியிடை அம்மன் ஆசியுடன் போரில் வெற்றி கண்ட தொண்டைமான்
திருமுல்லைவாயில் சென்னை ஆவடி ரயில் நிலையத்தில் இருந்து 4. கி.மீட்டர் தொலைவில் இருக்கிறது.
காஞ்சி தொண்டைவள நாட்டை சிறப்பாக ஆட்சி செய்தார் தொண்டைமான். இதனால் காஞ்சி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். இதே தொண்டை நாட்டின் வடபகுதியில் குறும்பாரிக் கோட்டை என்ற நகரில் ஓணன், வாணன், காந்தன் என்ற கொடிய அசுர குணம் படைத்த குறும்பர்கள் பைரவனை வணங்கி அவரையே தங்கள் நகருக்கு காவலாக வைத்திருந்து தங்கள் நாட்டு மக்களுக்கு பெரும் தீங்கு செய்து வந்தனர். இதனால் பயந்து வாழ்ந்த மக்கள் பலர் நாட்டை விட்டு செல்ல முடிவு செய்தனர். அப்படி நாட்டை விட்டு தப்பி செல்பவர்களை வெட்டி வீழ்த்தி அவர்களின் வீட்டையும் இடித்து எரித்து மகிழ்ந்தார்கள் அந்த கொடிய குணம் படைத்த மூவர்.
குறும்பர்கள் மூவருக்கும் ஒரு முடிவு காலம் வந்து, தங்களுக்கு நல்ல விடிவு காலம் பிறக்காதா என்று ஏங்கி தவித்தார்கள் மக்கள். குறும்பாரிக் கோட்டை மக்களின் துயர நிலை பற்றிய தகவல் மன்னன் தொண்டைமானுக்கு தெரிந்தது. மன்னர் தொண்டைமான் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று பயந்த குறும்பர் மூவரும் ஒருநாள் போர் படைகளுடன் தொண்டைமானை தாக்க வந்தார்கள். ஆனால் குறும்பர் கனவு பலிக்கவில்லை. அவர்கள் தொண்டைமான் படையுடன் மோத முடியாமல் அவதிப்பட்டார்கள். இனி நம்மால் போர் செயய முடியாது என்று கருதி பைரவரை அழைத்து, “உன் பக்தர்களாகிய எங்களை காக்க வேண்டியது உன் கடமையல்லவா?” என்று குறும்பர்கள் கதறி அழுதார்கள்.
ஒருவன் விரோதியாக இருந்தாலும் மருத்துவ உதவி தேடி வரும் அவனை காப்பாற்ற வேண்டியது ஒரு மருத்துவனின் கடமை. அதுபோல தன்னை வணங்குபவர்கள் நல்லவர்களா? – கேட்டவர்களா? என்ற இறைவன் பார்க்க மாட்டான். அபயம் என்று வந்து நிற்பவர்களுக்கு துணை இருப்பதே தெய்வத்தின் கடமை. காற்று, சுவாசிப்பவனின் குணத்தை பார்க்கிறதா?. அது யாராக இருந்தாலும் உயிர் கொடுக்கம் மருந்தாக இருப்பது போன்று, பைரவரும் தன்னை நம்பி வேண்டி நிற்கும் தன் பக்தர்களான குறும்பர்களுக்கு துணை நின்று, தொண்டைமான் படைகளை கதிகலங்க செய்தார்.
இனி போர்களத்தில் நின்று போர் தொடர்ந்தால் மீதம் இருக்கும் படைகளையும் இழந்து விடுவோம் என்ற கருதிய மன்னர் தொண்டைமான், போர் படைகளை திரும்ப அழைத்து சென்றார். மன்னர் சோகமாக திரும்பும் வழியில் ஒரு முல்லை வனம்.
பட்டத்து யானையின் மீது அமர்ந்து அடுத்து என்ன செய்வது? என யோசித்தபடி வந்து கொண்டிருந்தார் தொண்டைமான். பட்டத்து யானை ஒரு இடத்தில் நகர முடியாமல் தவித்தது. என்ன ஆனது? என்று மன்னர் பார்த்தார். யானையின் காலில் முல்லைகொடி சுற்றி கொண்டிருந்தது. யானை எவ்வளவோ போராடியும் அந்த முல்லைகொடியின் பிடியில் இருந்து யானையால் விடுபட முடியவில்லை. பொறுத்து பார்த்த மன்னர் தொண்டைமான், இனி கத்தியால்தான் இந்த முல்லையை கொடியை வெட்ட முடியும் என்று கருதி கத்தியால் அந்த முல்லை கொடியை வெட்டினார்.
அப்படி வெட்டிய உடன், முல்லைகொடியில் இருந்து திடீரென ரத்தம் பீறிட்டது. இதை கண்ட அரசரும், போர் வீரர்களும் பயத்தில் நடுங்கினார்கள். உடனடியாக மன்னர் தொண்டைமான் அந்த முல்லைகொடிகளை விலக்கி பார்த்தார் அங்கே ஒரு பெரிய சிவலிங்கம். அதன் தலையில்தான் மன்னரின் போர்வாள்பட்டு ரத்தம் பீறிட்டிருந்தது.
மன்னர், சிவலிங்கத்தை “இறைவா..”. என கட்டி தழுவிக்கொண்டார். “எம்பெருமானே உன்னையா வெட்டினேன்” என்று கதறினார். “சிவபெருமானே உனக்கு நான் செய்த கொடுமைக்கு பரிகாரம் என் உயிரை தருவதுதான்” என்று சொல்லி இறைவனுக்கு காயம் ஏற்படுத்திய அதே போர்வாளால் தன் கழுத்தை வெட்ட துணிந்தார். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது, “அப்பா…நில். என்ன செய்ய துணிந்தாய்? சிறுபிள்ளையா நீ?. நீ எனக்கு எந்த தீங்கும் செய்யவில்லை.“ என்றபடி இறைவன் மன்னரின் முன்பாக தோன்றினார். இறைவனின் வலப்புறத்தில் அம்பிகை தோன்றினாள். மற்றும் நந்தி தேவரும் சிவகணங்களும் காட்சி தந்தார்கள். மன்னன் தொண்டைமான் ஆனந்தத்தில் திளைத்தார்.
“மன்னனே கலங்காதே. எனக்கு எந்த தீங்கும் இல்லை நான் மாசிலாமணி. இந்த திருமுல்லைவாயில்தான் என் இருப்பிடம். இறைவி க்ரியாசக்தி ஸ்வரூபிணியான கொடியிடையன்னை.” இறைவனின் சொல்லை கேட்டு மன்னர் புகழ்ந்து போற்றினார்.
“மன்னவா… உனக்கு நந்தி தேவர் போருக்கு துணை இருப்பார். கவலைப்படாதே.” என்றார் சிவபெருமான். அன்னை கொடியிடை அம்மன் நந்தி தேவருக்கு சக்தி வாள் ஒன்றை தந்து, “மன்னனுக்கு போரில் துணை நின்று எதிரிகளை வீழ்த்தி வா” என்று நந்தி தேவருக்கு ஆசி வழங்கினார் அன்னை.
நந்தி தேவர், தொண்டைமன்னனுக்கு துணையாக போர்களத்தில் நின்றார். மன்னர், மூன்று அசுரர்களை கொன்று அங்கு குறும்பர்களுக்கு காவலாய் இருந்த இரண்டு வெள்ளெருக்கு தூண்களையும் அவர்களுக்கு பக்கபலமாக இருந்த பைரவரையும் தூக்கிக் கொண்டு வந்தார்.
இறைவனுக்கும் கொடியிடை அன்னைக்கும் வெற்றி காணிக்கையாக பொன்னும் பொருளும் அள்ளி தந்து திருக்கோயில் ஒன்றை கட்டினான். வெள்ளெருக்கு தூண்களை மண்டப தூண்களாக அமைத்து பைரவரை காவலனாக வைத்தான்.
க்ரியாசக்தியான கொடியிடை அம்மனை வணங்கினால் எதையும் சாதிக்கும் ஆற்றல் ஏற்படும்.
கல்வி ஞானம் தரும் வடிவுடையம்மன்.
ஏற்றத்தை தரும் திருவுடையம்மன்.
http://www.youtube.com/bhakthiplanet
ஆன்மிக பரிகார கட்டுரை படிக்கவும்
Click here for 2012 New Year Rasi Palan / 2012 புத்தாண்டு இராசி பலன்கள் CLICK செய்யவும்
சனி பெயர்ச்சி பலன்களுக்கு இங்கே CLICK செய்யவும்
சிவன் கோயி்ல், அம்மன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், பிற கோயில்கள்
இலவச ஜோதிட கேள்வி–பதில் பகுதிக்கு கிளிக் செய்யவும்
For Astrology consultation Click Here
© bhakthiplanet.com All Rights Reserved
பொது அறிவிப்பு:
BHAKTHIPLANET.COM இணையதளத்தில் வெளிவரும் ஆன்மிக கட்டுரைகள் – ஜோதிட கட்டுரைகள் – வாஸ்து கட்டுரைகள் மற்றும் அனைத்து கட்டுரைகளையும் வேறு இணையதளங்களில் வெளியீடுவதற்கும் – பத்திரிக்கைகளில் பிரசுரம் செய்வதற்கும், புத்தகங்களாக வெளியீடுவதற்கும் அல்லது வேறு எந்த வகையில் வெளியீடுவதற்கும் BHAKTHIPLANET.COM நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக முன் அனுமதி பெற்ற பிறகே வெளியிட வேண்டும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். மீறினால் சட்டப்படி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
N. JOTHI,
Advocate,
319. Law Chambers
Madras High Court,
Chennai – 104
மிக்க நன்றி செல்வி நிரஞ்சனா அவர்களே, நான் ஆரம்பிக்க இருக்கும் தொழில்நுட்ப வியாபாரத்தின் பொருட்டு கொடியிடை அம்மனை தரிசிக்கவிருக்கின்றேன், இத்தகைய அருமையான தகவலுக்கு மனப்பூர்வமான எனது நன்றிகள் உங்களுக்கு! கடவுளின் பரிபூரண ஆசியினால் தங்களது ஆன்மீக எழுத்து பணி மேன் மேலும் சிறக்கும்!