நிரஞ்சனா தஞ்சையை ஆண்ட மன்னர் இராஜராஜ சோழனுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது உலகில் அனைவருக்கும் மகிழ்ச்சியை தரக்கூடியது எது? என்பதே மன்னரின் சந்தேகம். அரசரின் சந்தேகத்திற்கான பதிலை சிற்பி ஒருவர், ஒரு சிலையின் மூலமாக விளக்கினார். அதை கேட்டு இராஜராஜ சோழன் மகிழ்ந்து, ஆயிரம் பொன் பரிசு தந்து, தஞ்சை பெரிய கோவிலுக்கான சிற்ப வேலைகளுக்கான பொறுப்புகளையும் அந்த சிற்பிக்கே தந்தார். இராஜராஜ சோழனின் கேள்விக்கு விடை தந்த சிற்பி வடித்த சிலை என்ன என்பதை தெரிந்துக்கொண்டால் […]
Niranjana நாம் வெற்றி பெற முதல் தேவை என்ன? முயற்சியா? பணமா? சிபாரிசா? என்றால் முதலில் இவைகளை விட மிக மிக முக்கிய தேவை மன தைரியம் – தன்னம்பிக்கை. முயற்சி செய்து செய்து ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது என்று மனம் தளர்ந்தால் வரப் போகிற வெற்றி, தோல்வியாக மாறி விடும். மன தைரியம் இருந்தால்தான் தோல்வியை கூட தோல்வியாக எண்ணாமல் அனுபவ பாடமாக்கி வெற்றியை கிடைக்கச் செய்யும். மன தைரியம், உடல் பலத்தை தரும். எந்த செயலையும் […]
நிரஞ்சனா தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஒருவேளை தோல்வி அடைந்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று எண்ணினால் எதையும் செய்ய முடியாது – சாதிக்கவும் முடியாது. சாதிக்கவேண்டும் – வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் – வெற்றிபெறலாம். வீரசிவாஜி இளம்வயதில் சாதித்தார். கடும்போராட்டத்திற்கு பிறகு வயது முதிர்ந்தாலும் மனம் தளராமல் காந்தியடிகள் சாதித்தார்கள். அதுபோலதான் கரிகாலசோழனும். ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் வயதில் பெரியவர்கள் தீர்ப்பு சொன்னால் […]
நிரஞ்சனா எண்ணம்தான் வாழ்க்கை. நாம் எண்ண நினைக்கிறோமோ அதன்படிதான் நடக்கும். அதனால்தான் பெரியவர்கள் சொல்வார்கள், “நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்” என்று. வெற்றி வெற்றி என்று நினைத்தால் வெற்றிகிட்டிவிடுமா?. முயற்சி செய்ய வேண்டாமா? என்பதும் பலரின் கேள்வி. முயற்சிக்கு முதலில் மனதில் உற்சாகம் தேவை. அந்த உற்சாகம் இருந்தால்தான் வெற்றி கிட்டும். காட்டில் இருக்கும் மரம், யார் உதவியும் இல்லாமல் பிரம்மாண்டமாக வளர்வதுபோல் மனித வாழ்க்கையும் மற்றவர் உதவி இல்லாமல் வாழ்ந்து சாதிக்க முடியும். ஆனால் […]
நிரஞ்சனா எல்லா ஜீவராசிகளுக்கும், மனிதர்களுக்கும் அடிப்படை தேவை நல்ல தண்ணீர். இப்படி குடிக்க நல்ல தண்ணீர் கூட இல்லாமல் நகரங்களில் சில பகுதிகளிலும், கிராமங்களிலும் தண்ணீர் தேடி வெகு தூரம் நடக்கிறார்கள். இப்படி தண்ணீர் பஞ்சத்திற்கு முதல் காரணம், பசுமையான மரங்கள் இல்லாததால் மழை பொழியவில்லை. இதனால் விவசாயமும் பாதிக்கப்படுகிறது. விவசாயம் பாதிக்கப்பட்டதால் உணவுபொருட்களின் விலை தாறுமாறாக ஏறுகிறது. வரட்சி உண்டான பிறகுதான் பசுமையான மரங்களின் அருமையே தெரிகிறது. இனியாவது மரங்களை வெட்டாமல் மரம் வளர்ப்போம் […]
நிரஞ்சனா 1. மற்றவர்களால் முடியாத செயல்களை நம்மால் முடியும் என்று தன்னம்பிக்கையோடும், விடா முயற்சியோடும், எடுக்கும் செயலை விரும்பியும் செய்தால், வானம் கூட தூரமில்லை. 2. தன்னை தானே தாழ்மைபடுத்திக்கொள்பவன் பாதாளத்தில் வீழ்கிறான். தன்னம்பிக்கையில் சிறந்தவன், எப்படியும் போராடி சிகரத்தை அடைகிறான். 3. பூக்களுக்குள் இருக்கும் நறுமணத்தை வெளிப்படுத்தி எல்லோரையும் அறிய வைக்கும் காற்றை போல, இந்த சமுதாயத்தில் ஒருவருக்கு நல்ல பெயர் – புகழ் என்பது, அவர் செய்யும் நற்செயலால்தான் கிடைக்கிறது. 4. தன்னம்பிக்கை விடாமுயற்சி […]
நிரஞ்சனா “ஒருவர் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க வயது முக்கியம் இல்லை. திறமையே முக்கியம்“ என்றார் திருநாவுக்கரசர். திருஞான சம்பந்தர் ஒரு ஊருக்கு பள்ளக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த பள்ளக்கின் ஒரு பகுதியை நாவுக்கரசர் சுமந்து வந்தார். இந்த காட்சியை கண்ட சம்பந்தர் பதறி கீ்ழே இறங்கி, “என்னை பாவியாக்கி விட்டீர்களே“ என்ற சம்பந்தரிடம், “அப்பா நீ தெய்வத்தின் குழந்தை. உன்னை சுமக்க நான் பாக்கியம் செய்து இருக்க வேண்டு்ம். வயதில் நீ சிறியவனாக இருந்தாலும் […]
நிரஞ்சனா நியூயார்க் நகரில் ஆடை நிறுவனத்தில் திடீர் தீ விபத்தால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இறந்தார்கள். இதற்கு காரணம் – ஏதோ சிறை கைதிகளை அடைத்து வைப்பது போல் வெளியே செல்லும் வழியை மூடியதால் இந்த கொடுர சம்பவம் அரங்கேறியது. இதன் பிறகுதான் பெண்களே தங்கள் பாதுகாப்புக்காக போராடினார்கள். மார்ச் 8-ம் தேதி ரஷ்யாவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பபட்டது. அந்த நாளைதான் மகளிர் தினமாக கொண்டாடுகிறோம். “நாட்டுக்கு சும்மா கிடைக்கலே சுதந்திரம்“ என்பது போல், பெண்களுக்கும் சும்மா கிடைக்கவில்லை […]
நிரஞ்சனா 18-ஆம் நூற்றாண்டில் உலகில் பல இடங்களில் பெரியம்மை நோய் இருந்தது. இதனால் பலர் இறந்தார்கள். இதற்கு மருந்து ஊசி மூலமாக அம்மை நோய் கிரிமியை எடுத்து, மீண்டும் அம்மை நோய் தாக்கியவர்களின் உடலுக்கே செலுத்துவார்கள். இதற்கு “இனாகுலேஷன்” என்று பெயர். இதனால் உடலில் இருக்கும் அம்மை குணமாகும். ஆனால் இந்த மருத்துவமுறையில் ஆபத்தும் இருந்தது. அதாவது உடலுக்கு செலுத்தும் அம்மை நோயின் கிரிமியை அதிகமாகவோ குறைவாகவோ அம்மை நோயால் பாதிக்கபட்டவர்களின் உடலில் செலுத்தினால் அந்த நபர் […]
நிரஞ்சனா ஹுமாயூன் போர் களத்தில் எதிரிகளால் துரத்தியடிக்கப்பட்டு, தப்பித்தால்போதும் என்ற எண்ணத்தில் கற்பவதியாக இருக்கும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு ரகசிய இடத்தில் தங்கினார். அது ஒரு பாலைவன பகுதி. அப்போது அவருடைய மனைவி ஹமீதா, “எனக்கு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும் போல ஆசையாக இருக்கிறது.” என்றாள். “அரசராக இருந்தும் மனைவி கேட்கும் சாதாரண மாதுளம் பழத்தை கூட வாங்கி தர முடியவில்லையே.. அல்லா… இது என்ன சோதனை?” என ஹுமாயூன் வருந்தினார். “நல்லோர் கவலைக்கு […]