Written by Vijay Krishnarau G காசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது. ஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் விரைவில் திருமணம் செய்து பேரன், பேத்திகளை பார்க்க ஆசைப்படுவார்கள். அந்த காலத்தில் பிள்ளைகளுக்கு சொந்தத்தில் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் இருந்ததால் காலகாலத்திலேயே திருமணம் தடையில்லாமல் நடைபெற்றது. அந்த காலத்தில் மேட்ரிமோனி மையங்கள் இல்லை. கல்யாண தரகர்களும் அதிகம் இல்லை. ஆனால் இன்றோ தடுக்கி விழுந்தால் மேட்ரிமோனி மையங்கள் என்று சொல்லும் அளவுக்கு பெருகிவிட்டது. எத்தனை மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்தாலும் பலருக்கு […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. வெற்றி பெற வேண்டும் என்றால் சகிப்புதன்மை இருக்க வேண்டும். ஓடு மீன் ஓட உறு மீன் வரும்வரையில் காத்திருக்குமாம் கொக்கு என்பதைபோல, சாதிக்க வேண்டுமானால், நம், கொள்கையின் இலக்கை எட்ட வேண்டுமானால் அத்தகைய நேரமும், காலமும் அமையும்வரையில் காத்திருந்தால் வெற்றிதான். இதைதான் நம் முன்னோர்கள். “பொறுத்தார் பூமி ஆள்வார்” என்றார்கள். முல்லா வாழ்வில் நடந்த ஒரு சுவரஸ்யமான கதை இது. முல்லா வழக்கமாக சாப்பிடும் உணவகத்திற்கு வந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது […]
Written by K.Vijaya Krishnarau Earth, water, air, sky and fire are, as we have already learnt, the five elements that govern our existence. Panchabhoothas, our ancients called them. Pancha means five and bhoothas represent the elements. These five elements are apart from human control. Neither do these function within fixed parameters. As long as everything […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. அவசரம் – பரபரப்பு என்பது இந்த காலத்தில் மட்டுமல்ல உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே அனைவருக்கும் இருக்கிறது. உதாரணத்திற்கு சிலப்பதிகாரத்தில் ஒரு காட்சி. கண்ணகியின் சிலம்பில் ஒன்றை கோவலன் விற்க சென்றான். அந்த நேரத்தில் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவி கோப்பெருந்தேவியின் சிலம்பு காணாமல் போய் இருந்ததால், அதை யார் திருடினார்கள் என்று கண்டுபிடியுங்கள் என்று அரசர் உத்தரவிட்டு இருந்தார் அந்த நேரத்தில் தான் கோவலனின் விதி விளையாட தொடங்கியது. ஆம். […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 5- புதன் ஐந்தாம் எண். இந்த எண் மிகவும் புத்திசாலிதனத்தை கொடுக்கக்கூடிய எண். அறிவுக்கும், கல்விக்கும் அதிபதியான புதனின் ஆதிக்கம் கொண்டது. பொது அறிவு அதிகம் தரக்கூடியது. மற்றவர்களை பற்றி நன்கு அறிந்து செயல்படுத்தும் திறன் தரக்கூடிய எண் ஐந்து. சிந்திக்கும் புத்தி இருந்தால்தான் ஒருவரை அறிவாளி என்போம். அந்த அறிவு எல்லா தேதிகளில் பிறந்தவர்களுக்கும் இருந்தாலும் புதன் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் சற்று […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. வசதி வாய்ப்புகள் இல்லாமல் அதனால் மன அழுத்தத்தில் இருப்பவர்கள் சிலர்தான் இருக்கிறார்கள். ஆனால் எல்லா வசதிகள் இருந்தும் பலர் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். இவர்களால் அந்த குடும்பத்தில் இருப்பவர்களும் நிம்மதி இழந்து கஷ்டப்படுகிறார்கள். மன அழுத்தத்திற்கு காரணம், தேவையற்ற சிந்தனை. நடக்காதது நடந்துவிட்டது போல ஒரு பிரம்மை. அளவுக்கு அதிகமான கற்பனை. வீண் பயம் இவைதான் மன அழுத்தத்திற்கு பெரும் காரணங்கள். ஒரு கதை ஞாபகம் வருகிறது. ஒரு ஊரில், […]
கே.விஜய கிருஷ்ணாராவ் தேவபட்டணமாகிய அமராவதியில் தேவர்கள், முனிவர்கள் சூழ, தன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தார் இந்திரன். அன்று ஒரு முக்கிய ஆலோசனையில் மூழ்கிருந்தவர், நான்முகனான பிரம்ம தேவனையும் அழைத்திருந்தார். “ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதோ ஒரு அசுர குலத்தவன் தேவர்களை இம்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதேனோ?“ என்று வினவினார். “எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான் தேவேந்திரா! இம்முறை நமது பாதுகாப்பிற்கு லோகமாதா பார்வதிதேவியை சரணடைவதை தவிர வேறு நல்வழி இருப்பதாக தமக்கு தோன்றவில்லை.” என்றார் பிரம்மதேவர்! “ஆம் பிரம்ம தேவரே, அதுவே சரி. […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் இராகு – கேது அருமையாக அமைந்து விட்டால், அந்தஸ்தான வாழ்க்கை தந்து செல்வ சீமானாக்குகிறது. பண வசதியை தரக்கூடிய தனஸ்தானாதிபதி, 6-8-12-ல் அல்லது நீச்சம் பெற்று இருந்தாலும் கவலை வேண்டாம். தனத்தை நான் தருகிறேன் என்று இராகு-கேது மல்லுகட்டிக் கொண்டு முன்னால் வருவார்கள். “கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்று சொல்பவர்களே… கேதுவாகிய நான் கெடுப்பதில்லை, கொடுப்பவன். அதுவும் அள்ளி கொடுப்பேன்.” என்கிறார் கேது பகவான். அது […]
ஜி. விஜயலஷ்மி ஆரோக்கியம் காக்கும் முட்டை கோஸ் முட்டை கோஸ்சில் வைட்டமின் ஏ, பி, சி, மற்றும் இரும்பு சத்து பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் இருக்கிறது. தலைமுடி உதிர்ந்துக்கொண்டே இருந்தால், முட்டை கோசை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதால் முடி உதிரும் பிரச்னை தீரும். அத்துடன் முட்டை கோஸ், கண் பார்வை குறைபாடும் தடுக்கிறது. எலும்பு வலுவடைய செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும் முட்டை கோசுக்கு இருக்கிறது. மாலை கண் […]